
பெண்கள் அதிகம் விரும்பும் பொருட்களில் புடவையும் ஒன்று. இது பெண்களின் சொத்தாக பார்க்கப்படுகிறது. டஜன் கணக்கில் வீட்டில் புடவை இருந்தாலும் பெண்கள் தொடர்ந்து புடவை வாங்குவதை அதிகம் விரும்புகின்றனர். சிலருக்கு புடவை கட்ட தெரியாது, ஆனாலும் ஆசைக்காகவே பார்க்கும் புடவைகளை எல்லாம் வாங்கி வீட்டு அலமாரியில் அடுக்கி கொள்வார்கள். புடவை கட்டுவது மிகவும் எளிதான விஷயம் தான் என்றாலும் அது எல்லோருக்கும் வருவதில்லை.
சிலர் 5 நிமிடங்களில் புடவை கட்டி விடுவார்கள். சிலர் 1 மணி நேரம் கட்டினாலும் புடவையை சரியாக கட்ட மாட்டார்கள். அவர்களுக்காகவே சந்தையில் இறக்கப்பட்ட புது வரவு தான் ரெடி-டூ-வேர் புடவைகள். இந்த வகையான புடவைகள் டீன் ஏஜ் பெண்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பல்லு மற்றும் மடிப்புகளுடன் கட்டப்பட்ட புடவையாக வரும் இதை 2 நிமிடத்தில் கட்டி கொள்ளலாம். இருப்பினும் சாதாரண புடவைகளை காட்டிலும் இந்த வகையான புடவையை இன்னும் கவனத்துடன் பார்த்து வாங்க வேண்டும்.
எனவே, ரெடி-டூ-வேர் புடவைகள் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இப்போது பார்ப்போம்.
ரெடி-டூ-வேர் புடவைகளின் அளவு ஒரே மாதிரி இருப்பதில்லை. இவை மாடலுக்கு ஏற்ப மாறக்கூடியவை. அதனால் புடவையை வாங்குவதற்கு முன்பு அதன் நீளம் மற்றும் அகலத்தை பார்த்து உங்கள் உயரத்திற்கு ஏற்ப வாங்குவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்:இந்த கருநீல ஆடைகள் உங்களை மிக ஸ்டைலாக மாற்றிவிடும்
புடவையில் முக்கியமான பகுதி பல்லு. புடவை அணிந்த பிறகு அதற்கு முழுமையான தோற்றம் மற்றும் அழகான தோற்றம் கிடைக்க பல்லு பகுதி மிக மிக முக்கியம். குறிப்பாக நீண்ட பல்லு இப்போது ஃபேஷனில் ஒரு பகுதியாக உள்ளது. அதை கவனமாக பார்த்து வாங்குவது நல்லது.
புடவையுடன் பொருந்தக்கூடிய பிளவுஸை தேர்ந்தெடுப்பது மிக மிக முக்கியம். புடவையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது. அதற்கு பொருந்தக்கூடிய பிளவுஸிலும் தனி கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக ரெடிமேட் பிளவுஸை தேர்ந்தெடுக்கும் போது அளவை சரிபார்த்து கொள்வது நல்லது.
ரெடி-டூ-வேர் புடவைகளை தேர்ந்தெடுக்கும் போது அதை எந்த நாளில் அணிய வேண்டும் என்பதை முதலில் யோசித்து வையுங்கள். விசேஷ நாட்கள், பண்டிகை நாட்களில் அணிய விரும்பினால் கிராண்ட் லுக் தரும் புடவைகளை தேர்ந்தெடுங்கள். பார்ட்டி என்றால் பிளாக் போன்ற மங்கலான நிறங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்:தைப்பூசம் சிறப்பு நாள்! பெண்களுக்கான ஆடை தேர்வுகள்!
எனவே, நீங்களும் ரெடி-டூ-வேர் புடவைகளை வாங்குவதற்கு முன்பு இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com
