தீபாவளிக்கு ஒரு மாத காலத்திற்கு முன்னதாகவே பெரிய கடைகள் முதல் சிறிய கடைகள் வரை அனைத்திலும் கூட்டம் அலைமோதக்கூடும். வீட்டில் உள்ள அனைவருக்கும் ஆடைகள் எடுக்க வேண்டும் என்று நினைத்தால் சொல்லவே தேவையில்லை. காலையில் கடைகளுக்குள் சென்றால் இரவு தான் வீடு திரும்புவோம். ஆம் பிடித்த சேலைகளை எடுத்துவிடுவோம். ஆனால் அதற்கு பில் போடுவதற்கு 2 கிலோ மீட்டர் தொலைவில் நிற்கும் நிலையும் ஏற்படுவதைப் பார்த்திருக்கிறோம். எப்படியோ பில் போட்டு விட்டு வீடு திரும்பினாலும் வாங்கிய ஆடைகள் அனைத்தையும் தரமானதா? என்ற சந்தேகமும் குழப்பமும் ஏற்படும். இப்படி கூட்ட நெரிசலில் சிக்காமலும், இன்றைய காலத்துக்கு ஏற்ப பராம்பரிய புடவைகள் வாங்க வேண்டும் என்று நினைத்தால் காட்டன் மற்றும் சுங்குடி புடவைகளுக்குப் பெற்ற சின்னாளப்பட்டிக்கு ஒரு விசிட் போகலாம். அதன் சிறப்பு இங்கே.
சுங்குடி சேலைகள், காட்டன் சேலைகள், ஸாப்ட் சில்க் சேலைகள், பட்டுப்புடவைகள் என அனைத்து விதமான புடவைகளும் கிடைக்கும் இடமாக உள்ளது சின்னாளப்பட்டி. திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய கிராமம் என்றாலும் தற்போது உலகம் முழுவதும் பெயர் பெற்றிருப்பது இங்கு தயாரிக்கப்படும் புடவைகள் தான் முதற்காரணம். தறியால் நெய்யப்பட்டு, எவ்வித கெமிக்கல்களும் இல்லாமல் சாயம் பூசும் இந்த புடவைகளை மலிவான விலையில் வாங்கும் பல ஆண்டுகளுக்கு உழைக்கும் அளவிற்கு தரமானதாக செய்யப்படுகிறது என உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். இந்த தொழிலில் சாயம் பூசுதல், தறி நெய்தல், பிரிண்டிங் வேலை, சேல்ஸ் என நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சின்னாளப்பட்டியின் சிறப்பே சுங்குடி காட்டன் புடவைகள் தான்.
மேலும் படிக்க: தீபாவளி பண்டிகை வந்துவிட்டது, இந்த DIY பேஷ் ட்ரிக்ஸ் யூஸ் பண்ணுங்க...தீபாவளி கொண்டாட்டத்துல அழகா இருப்பீங்க!!!
சுங்குடி சேலைகள் என்றாலே வயதானவர்கள் தான் கட்டுவார்கள் என்ற மனநிலையை முற்றிலும் மாற்றுகிறது சின்னாளப்பட்டி சேலைகள். நவீன தொழில்நுட்ப உதவியுடன் இளம் பெண்களும் பயன்படுத்தும் வகையில் டிரெண்டிங் டிசைன்கள், மெழுகு டிசைகளில் பல புடவைகள் நெய்யப்படுகிறது. கைகளிலேயே சேலைகளில் அச்சுக்களை வைத்து பிரிண்டிங் செய்யப்படுவதால் சேலைகள் நுட்பம் மிகவும் அழகாக உள்ளது. ராஜா ராணி சுங்குடி சேலைகள், மயூரி சேலைகள், பவளக்கொடி சேலைகள் என பல விதமான வெரைட்டிகளில் நெய்யப்படும் சேலைகளை கல்லூரி பெண்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
மேலும் படிக்க: தீபாவளிக்கு பெண்களைக் கவரும் டிரெண்டிங் சேலைகளின் லிஸ்ட்
ஆண்டு முழுவதும் புதுவிதமான டிசைன்கள் விற்பனைக்கு வந்தாலும் தீபாவளி நேரத்தில் இதன் விற்பனை படுஜோரமாக நடைபெறும். காலத்துக்கு ஏற்ப மாற்றத்துடன் நெய்யப்படும் சேலைகள் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் செயல்படக்கூடிய பெரிய கடைகளுக்கும் ஏற்படுகிறது. இதோடு மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாட்டுகளுக்கும் தீபாவளி சமயத்தில் அனுப்பி வைக்கப்படுகிறது.
மேலும் படிக்க: காஞ்சிபுரம் முதல் ஆர்கன்சா வரை; தீபாவளிக்கு டிரெண்டிங் பட்டுப்புடவைகள் இவை தான்!
தீபாவளிக்கு பெரிய கடைகளில் மற்றும் அந்தப்பகுதிகளில் ஷாப்பிங் செய்யும் பழக்கம் இருந்தாலும், ஒருபுறம் சில பெண்கள் சின்னாளப்பட்டிக்குப் படையெடுக்கின்றனர். கூட்டம் எதுவும் இல்லாமல் தரமான ஆடைகளை வாங்க வேண்டும் என்று நினைத்து வரக்கூடிய பெண்கள் மனநிறைவாக அமைகிறது சின்னாளப்பட்டி ஷாப்பிங்.
திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் இருந்து சின்னாளப்பட்டி கிராமத்திற்கு உள்ளே செல்லும் வழிமுழுவதும் புடவைகள் விற்பனை தான். அதுவும் சின்னாளப்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து இறங்கி விட்டு ஒவ்வொரு தெருக்களாக சென்றால் ஆங்காங்கே தரமான சின்னாளப்பட்டி புடவைகள் விற்பனை செய்யப்படுகிறது. காட்டன் புடவைகள், சில்க் காட்டன், ஸாப்ட் சில்க் சேலைகள் என இக்காலத்துப் பெண்கள் அணியும் வகையிலான புடவைகள் ரூ. 150 லிருந்து விற்பனையாகிறது. அப்புறம் எனன? பாரம்பரியத்துடன் கைத்தறி புடவைகளை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கட்டாயம் சின்னாளப்பட்டிக்கு தீபாவளிக்கு ஷாப்பிங்கிற்கு வரலாம்.
Image source - Google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com