herzindagi
Instagram celebraties

Trending South Actors on Instagram: 2023 ல் இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமான தென்னந்திய நடிகர்களின் லிஸ்ட்!

2023 ல் அதிக பாலோயர்களைக் கொண்ட தென்னிந்திய நடிகர்கள் யார்? என்பது குறித்து அறிந்துக் கொள்வோம்.
Editorial
Updated:- 2023-12-15, 22:24 IST

இன்றைக்கு சினிமா பிரபலங்கள் தங்கள் ரசிகர்களுடன் இணைவதற்கும், அவர்களின் சமீபத்திய படங்கள் மற்றும் புகைப்படங்கள் குறித்த தகவல்களைத் தெரியப்படுத்தும் தளமாக இன்ஸ்டாகிராம் உள்ளது. ரீல்ஸ் போடுவது முதல் முக்கிய தகவல்களை அனுப்பும் தளமாக உள்ள இன்ஸ்டகிராமில் பிரபலங்களை பலர் பின்தொடர்கின்றார்கள். இந்த நடப்பாண்டில் இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமான தென்னிந்திய நடிகர்களின் லிஸ்ட் குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்..

Instagram reels

  • ராஷ்மிகா மந்தனா: தமிழில் சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமான இவர், தெலுங்கு, தமிழ் என பல மொழிகளில் நடித்துள்ளார். தனக்கென ரசிகர்களைப் பட்டாளத்தைக் கொண்டுள்ள நிலையில், 
  • இன்ஸ்டாகிராமில் 38.4 மில்லியன் ரசிகர்கள்  பின்தொடர்கிறார்கள். 
  • சமந்தா ரூத் பிரபு:தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர் சமந்தா. திருமண விவகாரத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், இன்ஸ்டாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவரானார். இவரை 27.5 மில்லியன் பார்வையாளர்கள் இன்ஸ்டாவில் பின்தொடர்கின்றனர்.
  • காஜல் அகர்வால்:மாவீரன், பழனி, துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகுராஜா, ஜில்லா, மெர்சல் போன்ற பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்து மக்களிடம் சிறந்த வரவேற்பைப் பெற்றவர் காஜல் அகர்வால். எதார்த்த நடிப்பின் மூலம் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தைப் பெற்ற இவரை இன்ஸ்டாவில் 25.5 மில்லியன் பார்வையாளர்கள் பின் தொடர்கின்றனர்.

மேலும் படிக்க: பிரபல சீரியல் நடிகையை திருமணம் செய்து கொண்ட ரெடின் கிங்ஸ்லி 

 

 

south cinema

  • பூஜாஹெக்டே:தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் முகமுடி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. பீஸ்ட், ராதே சிஷ்யம் போன்ற சில படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளார்  பூஜாஹெக்டே. இன்ஸ்டாவில் மட்டும் 23.7 மில்லியன் பார்வையாளர்கள் பின்தொடர்கின்றனர்.
  • அல்லு அர்ஜூன்:தெலுங்கில் முன்னணி நடிகர்களால் வலம் வருகின்ற அல்லு அர்ஜூனை இன்ஸ்டாவில் 21.3 மில்லியன் பார்வையாளர்கள் பின்தொடர்கின்றனர்.
  • விஜய் தேவரதொண்டாவுக்கு இன்ஸ்டாவில் 18.4 மில்லியன் பார்வையாளர்கள் பின்தொடர்கின்றனர்.
  • தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சிரஞ்சீவியின் மகனான ராம்சரண். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியான மாவீரன் படம் வெற்றியைத் தொடர்ந்து RRR படத்தின் மூலம் அனைத்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் ராம்சரண். இவரை இன்ஸ்டாவில் 15.1 மில்லியன் பார்வயைாளர்கள் பின்தொடர்கின்றனர்.
  • அனுபமா பரமேஸ்வரனுக்கு இன்ஸ்டாகிராமில் 13.7 மில்லியன் பாலோயர்ஸ்கள் உள்ளனர்.
  • ஹீரோ, வில்லன், குணச்சித்திர நடிகர் என அனைத்து கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்துபவர் தான் விஜய் சேதுபதி. தமிழ் ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்த இவரை இன்ஸ்டாவில் 7.2 மில்லியன் பாலோயர்கள் உள்ளனர்.
  • சிலம்பரசன் 12.4 மில்லியன் இன்ஸ்டா பாலோயர்ஸ்களைக் கொண்டுள்ளார்.
  • நடிகர் விஜய்யை இன்ஸ்டாவில் 9.9 மில்லியன் பார்வையாளர்கள் பின்தொடர்கின்றனர்.

மேலும் படிக்க: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள்! ரசிகர்கள் அலப்பறை 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com