மதுரை என்றாலே மீனாட்சி அம்மனுக்குக் கோவிலுக்கு அடுத்த படியாக சட்டென்று நமது நினைவுக்கு வருவது வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள். சங்க காலம் முதல் தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எத்தனை தடை வந்தாலும் திமிரிக்கொண்டு வீறு நடைபோடுகிறது. தமிழகத்தில் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றாலும், தாங்கள் வளர்க்கும் காளைகளை மதுரை களத்தில் இறக்கி விட வேண்டும் என்ற ஆசை காளை வளர்ப்போரிடம் அதிகளவில் இருக்கும். இன்றைக்கு ஒவ்வொரு ஆண்டும் போட்டிகளில் களம் காணும் புகழ்பெற்ற காளைகள் மற்றும் அவை தயாராகும் விதம் குறித்து இங்கே அறிந்துக் கொள்ளுங்கள்.
மதுரை சுற்றியுள்ள கிராமங்களில் ஜல்லிக்கட்டு காளைகள் பெருமளவில் வளர்க்கப்படுகிறது. களத்திற்கு எத்தனை காளைகள் வந்தாலும் இன்னமும் சில காளைகளின் பெயர்கள் நம் மனதை விட்டு நீங்கியதில்லை. ஆம் சில காளைகள் ஜல்லிக்கட்டு களத்திற்கு வந்தவுடன் அரங்கையே ஒரு சுற்று சுற்றிவிட்டு திரும்பி சென்றுவிடும். சில காளைகள் தான் நின்று விளையாடும். கெட்டவன், சின்ன கொம்பன், அப்பு, வரிச்சியூர் காளைகள் அனைத்தும் களத்தில் நின்று ஆடி, ஜல்லிக்கட்டு வீரர்களை மட்டுமல்ல, பார்வையாளர்களையும் மிரள செய்யும்.
மேலும் படிங்க: தைத்திருநாளில் நெல்லை மாவட்ட மக்களின் சிறப்புகள்!
தீவிர பயிற்சியில் காளை உரிமையாளர்கள்:
ஜல்லிக்கட்டு வீரர் என்ற பட்டத்தை பெற வேண்டும் என்ற திமிரோடு சுற்றித் திரியும் காளையர்களை, திமில் கொண்டு அடக்கி ஆள்கிறது சில ஜல்லிக்கட்டு காளைகள். வீரர்களின் கையில் சிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஆண்டு முழுவதும் தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது.
தினமும் காளைகளுக்கு பருத்தி விதை, கோதுமை, பச்சை அரிசி, உமி போன்ற சத்தான உணவுகள் வழங்கப்படுகிறது.மாதந்தோறும் இந்த காளைகள் வளர்ப்பிற்கு ரூ.30 ஆயிரம் வரை தேவைப்படுகிறது.ஆனாலும் ஒரு நாளும் காளைகளை வளர்ப்பதை நிறுத்திட வில்லை என காளைகளை வளர்க்கும் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் களத்தில் நின்று விளையாடும் போது சோம்பல் மற்றும் இளைப்பதைத் தவிர்க்க காளைகளுக்கு நீச்சல் மற்றும் நடைபயிற்சியோடு ஈரமான மண் குத்துதல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள வரிச்சியூர் போன்ற கிராமங்களில் காளைகள் அனைத்தும் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு தீவிர பயிற்சி பெறுகின்றன.
களத்தை அதிரவைக்கும் காளைகள்:
ஜல்லிக்கட்டு களத்தில் சின்னகொம்பன் என்ற பெயரைக் கேட்டாலே பார்வையாளர்களிடம் எதிர்ப்பார்ப்பு அதிகரிக்கும். வீரர்களுக்கு சமமாக நின்று விளையாடும் இந்த காளையை அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்த்து வருகிறார். அடுத்ததாக அப்பு, பெயரைப் பார்க்கத் தான் செல்லமாக இருக்கும். இவன் களத்தில் இறங்கினாலே ஆட்டம் சூடி பிடிக்கும். ஜல்லிக்கட்டு பேரவையின் தலைவர் சார்பில் வளர்க்கப்படும் இந்த காளை பல போட்டிகளில் வெற்றி வாகை சூடியுள்ளது. வயது முதிர்வின் காரணமாக உயிரிழ்ந்த நிலையில் இதற்கு மண்டபம் கட்டி வழிபடுகின்றனர். பின்னர் இதே போன்று மற்றொரு காளையையும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுப்புதற்கான தீவிர பயிற்சிகளைக் கொடுத்து வருகின்றனர்.
பிரபலமான ஜல்லிக்கட்டு காளைகள்:
சிவகங்கை மாவட்டத்தில் பிரபலமான புளிக்குளம் காளைகள், மதுரையை சுற்றி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பெருமளவில் பயன்படுத்தப் படுகிறது. கொங்கு மண்டலத்தில் நல்ல உடல் வாகு கொண்ட காங்கேயம் காளைகள், ஈரோடு மாவட்டத்தில் பழுப்பு நிற தோலைக் கொண்ட பர்கூர் காளைகள் என பல பிரபலமான காளைகளும் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு களம் காண்கின்றனர்.
மேலும் படிங்க:ஜல்லிக்கட்டு காளைகளை அரவணைக்கும் கோவை கோசாலை!
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation