முடி உதிர்வதைத் தடுக்க மக்கள் பெரும்பாலும் விலையுயர்ந்த முடி பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் உண்மையான தீர்வு நாம் சாப்பிடும் உணவில் உள்ளது. உணவில் ஊட்டச்சத்து இல்லாதது முடி உதிர்வதற்கு அல்லது முடி முன்கூட்டியே நரைப்பதற்குக் காரணமாகும். ஒவ்வொருவருக்கும் சில முடிகள் உதிர்வது வழக்கமான ஒன்றாகும், ஆனால் அதுவே முடி தேவைக்கு அதிகமாக உதிர்ந்தாலும், முடி உதிர்தலின் அளவைக் காட்டிலும் புதிய முடி வளரவில்லை என்றாலும் அது முடி உதிர்தல் என்று அழைக்கப்படுகிறது. ஹார்மோன் சமநிலையின்மை காரணமாகவும் முடி உதிர்தல் ஏற்படலாம். இதைத் தடுக்க உணவில் சில சிறப்பு விஷயங்களைச் சேர்க்க வேண்டும். முடி உதிர்வைக் குறைக்கும் அத்தகைய 4 விஷயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம். இது குறித்து டயட்டீஷியன் மன்பிரீத் தகவல் அளித்து வருகிறார். மன்பிரீத் டெல்லி பல்கலைக்கழகத்தில் ஊட்டச்சத்து பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். அவர் ஒரு ஹார்மோன் மற்றும் குடல் ஆரோக்கிய பயிற்சியாளர்.
மேலும் படிக்க: ரோஜா இதழ்களை போல் முகம் ஜொலிக்க இரவில் செய்யவேண்டிய அழகு குறிப்புகள்!
ஆயுர்வேதத்தில் நெல்லிக்காய் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இது முன்கூட்டிய முடி உதிர்தல் மற்றும் நரைப்பதைத் தடுக்கிறது. வயதான எதிர்ப்பு மற்றும் எடை இழப்புக்கும் நெல்லிக்காய் நன்மை பயக்கும். நீங்கள் ஸ்மூத்தி அல்லது சட்னியில் நெல்லிக்காயை சேர்த்து சாப்பிடலாம். நெல்லிக்காய் சாறு தினமும் குடித்தால் முடிக்கு நல்லது.
முருங்கை எடை இழப்புக்கு மற்றும் முடி உதிர்வதை தடுப்பதில் பெயர் பெற்றது. ஆயுர்வேதத்தின் படி இது குணங்களின் பொக்கிஷம் என்று கூறுவார்கள். முருங்கை கீரை ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்துகிறது, இது இரத்த சோகையை குணப்படுத்துகிறது. இது உச்சந்தலையில் ஊட்டமளிக்கிறது மற்றும் மயிர்க்கால்கள் சேதமடைவதைத் தடுக்கிறது. முருங்கை கீரை பொடியை பருப்பு அல்லது காய்கறிகளில் சேர்த்து சாப்பிடலாம் இல்லையென்றால் வெதுவெதுப்பான நீரில் கலந்து கூடிக்கலாம்.
நம் சமையலறையில் இருக்கும் வெந்தய விதைகளும் முடி உதிர்வை குறைக்கும். இவை இன்சுலின் உணர்திறனை அதிகரித்து ஹார்மோன் சமநிலையின்மையால் முடி உதிர்வைக் குறைக்கிறது. பருப்பு, காய்கறிகளுடன் கலந்து சாப்பிடலாம்.
ஜாதிக்காய் முடி உதிர்வையும் குறைக்கிறது. இது முடி சேதத்தை குறைக்கிறது. முடியை வலுவாகவும், பளபளப்பாகவும் மாற்ற இது பயனுள்ளதாக இருக்கும். இரவு உணவிற்குப் பிறகு ஊறவைத்த ஆலிவ் விதைகளுடன் 1 சிட்டிகை ஜாதிக்காயை சேர்த்து தினமும் எடுத்துக் கொண்டால் முடிக்கு ஆரோக்கியமாக இருக்கும். அதனுடன் தண்ணீர் இல்லமல் கூடி பாலுடன் கலந்து குடிக்கலாம்.
மேலும் படிக்க: மாசு இல்லாத பளிச்சென்று முகம் பொலிவு பெற உருளைக்கிழங்கு தோலை பயன்படுத்தலாம்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், தயவுசெய்து பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளை படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும்.
Image Credit:Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com