girls sare tips tamil

How to Look Taller in Saree : புடவையில் உயரமாக தெரிய என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

இந்த வழிமுறைகளைப் பின்பற்றி புடவை கட்டினால் உயரம் குறைவாக இருக்கும் பெண்களும் சற்று உயரமாக தெரிவார்கள். புடவை கட்டுவதற்கான சூப்பரான டிப்ஸ்கள். 
Editorial
Updated:- 2023-05-22, 09:37 IST

உயரம் குறைவான பெண்கள் பெரிய பார்டர் இருக்கும் புடவைகளை அணியக்கூடாது. இது அவர்களின் உயரத்தை இன்னும் குறைவாகக் காட்டும். மாறாக, சிம்பிளான மற்றும் மெல்லிய பார்டர் கொண்ட புடவைகளை அணிவது சிறந்த தோற்றத்தைத் தரும்.

பிரிண்ட்கள் மற்றும் டிசைன்கள் கொண்ட புடவைகள் உயரம் குறைவான பெண்கள் பெரிய பெரிய பிரிண்ட்கள் மற்றும் டிசைன்கள் இருக்கும் புடவைகளை அணியக்கூடாது. இது உடல் தோற்றத்தைச் சிறியதாக காட்டும். அதற்கு பதிலாகச், சிறிய பிரிண்ட்கள் இருக்கும் புடவையைத் தேர்வு செய்யவும். இவை உயரமாக இருப்பது போன்ற மாயத்தை உருவாக்கி அவர்களை உயராகக் காட்டும்.

எடை குறைந்த லேசான துணிகள் உடலை நீளமாகக் காட்டும். எனவே, உயரம் குறைவான பெண்கள் சிஃப்பான், ஜார்ஜெட், சில்க் போன்ற லேசான துணியில் தயாரிக்கப்பட்ட புடவைகளை அணிய வேண்டும். இந்த வகையான புடவையில் உயரமாகத் தெரிவார்கள்.

இந்த பதிவும் உதவலாம்:கழுத்து கருமை நீங்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

செங்குத்தான கோடுகளைக் கொண்ட புடவைகள்

உயரம் குறைவாக இருக்கும் பெண்கள், செங்குத்தான கோடுகளைக் கொண்ட டிசைன் புடவைகளை கட்டினால் உயரமாக தெரிவார்கள். செங்குத்து கோடுகள் உயரமாக இருப்பது போன்ற மாய பிம்பத்தை உருவாக்கி அவர்களை உயரமாக காட்டும்.

saree tamil

கச்சிதமான பிளவுஸ்களை அணியுங்கள்

மிகவும் தளர்வான பிளவுஸ்களை அணிய வேண்டாம். இது தவிர, பிளவுஸின் நீளமும் மீடியமாக இருக்க வேண்டும். பிளவுஸ் எப்போதுமே மிகவும் நீளமாகவோ அல்லது சின்னதாகவோ இருக்கல் கூடாது.

சரியான நெக் டிசைன்களைத் தேந்தெடுங்கள்

குட்டையான கழுத்தை கொண்டவர்கள் லாங் நெக் டிசைன் கொண்ட பிளவுஸ்களை அணியக்கூடாது. V- வடிவ நெக் டிசைன்கள், சதுரம் மற்றும் ஸ்வீட்ஹார்ட் எனப்படும் பின்புறம் முழுவதுமாக மூடி முன்புறம் லோவாக இருக்கும் நெக் டிசைன் பிளவுஸ்கள் கழுத்துக்கு நீண்ட மற்றும் மெலிதான தோற்றத்தைத் தரும். உயரமாகவும் காட்டும்.

கருப்பு நிற புடவை

கருப்பு நிற புடவை உங்களை எப்போதும் ஏமாற்றாது. உடலை ஒல்லியாக காட்டுவது மட்டுமல்லாமல் தோற்றத்தையும் உயரமாகவும் காட்டும்.

எனவே, இந்த வழிமுறைகளைப் பின்பற்றி உயரம் குறைவான பெண்கள் புடவையில் தங்களை உயரமாக காட்டிக் கொள்ளலாம். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com