Good habits for happiest life: மகிழ்ச்சியாக வாழணுமா? தினமும் இந்த பழக்கங்களைப் பாலோ பண்ணுங்க!

எந்த சூழலிலும் எதிர்மறையான எண்ணங்களை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளாமல் இருந்தாலே வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்..

Happiest life

இன்றைக்கு மகிழ்ச்சி என்ற வார்த்தைப் பலரது வாழ்க்கையில் இல்லாமல் போய்விட்டது. இயந்திர உலகில் தங்களுக்கு மட்டுமில்லாது குடும்பத்தினருக்காகவும் அயராது ஓடிக்கொண்டே இருக்கின்றோம். கலாச்சார மாற்றம், உணவு பழக்கவழக்கங்கள் என அனைத்தும் மாறிவிட்டது. ஆனால் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறோமோ? என்றால் பலரது பதில் இல்லை என்று தான். குடும்ப சூழல், அலுவலகப் பணி, உடல் நல பாதிப்பு என பல விஷயங்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் சோகத்தை ஏற்படுத்துகிறது. ஆனாலும் இதையெல்லாம் மீறும் போது தான் வாழ்க்கையில் சந்தோஷம் தவழும். இதோ உங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக்குவதற்கான சில டிப்ஸ் இங்கே..

morning Walk

  • அதிகாலையில் எழுதல்: மிதமான குளிரும், மாசில்லாத காற்றும் காலைப்பொழுதில் கிடைக்கக்கூடிய வரப்பிரசாதம். பல மனக்குழப்பங்களோடு இரவில் தூங்கினாலும் அதிகாலையில் எழுந்துவது மனதிற்கு ஒரு நிம்மதியைக் கொடுக்கும்.. கவனச்சிதறல் அல்லது எவ்வித குறுக்கீடுகள் இல்லாமல் நேரத்தைப் பயன்படுத்தலாம். இது உங்களது மனதை அமைதியாக்கும்.
  • உடற்பயிற்சி: இன்றைக்கு ஒவ்வொருவரும் பல விதமான உடல் நலப்பாதிப்பால் நாம் அவதிப்படுகிறோம். இதற்கு மருந்து, மாத்திரைகள் மட்டுமில்லாது உடற்பயிற்சியும் சிறந்த தீர்வாக இருக்கும். எனவே நடைப்பயிற்சி, யோகா, ஸ்கிப்பிங், ஜாக்கிங் போன்ற உங்களுக்குப் பிடித்தப் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். உடல் நலப் பாதிப்புகள் குறைந்தாலே வாழ்க்கையில் சந்தோஷம் தானே வந்துவிடும்.
  • சத்தான காலை உணவு: உங்களை மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதற்குக் காலை உணவுகள் சிறந்ததாக இருக்கும். காலை உணவைத் தவிர்க்கும் போது தலைவலி மற்றும் எரிச்சல் போன்றவை ஏற்படும். காலை உணவை நீங்கள் முறையாக எடுத்துக்கொள்ளும் போது மூளை மற்றும் உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கிறது. எனவே முடிந்தவரை வரை ஆரோக்கியமான ஊட்டச்சத்துள்ள உணவுகளுக்கு முன்னுரிமை கொடுக்கவும்.
  • நினைவாற்றல்: வாழ்க்கையில் நிலவும் பல பிரச்சனைகள் உங்களுக்கு எதிர்மறையான விஷயங்களைச் செய்வதற்குத் தூண்டும். இந்த நேரத்தில் உங்களுக்கு மன அமைதி என்பது தேவை. தியானம், யோகா போன்ற விஷயங்களில் ஈடுபடுவது உங்களது மனதை அமைதிப்படுத்தும்.
  • சமூக கற்றல்: நம்முடை வாழ்க்கையை மகிழ்ச்சியாக்க வேண்டும் என்றால் சமூக கற்றல் அவசியமான ஒன்று. மன உளைச்சலுக்கு மத்தியில் நீங்கள் உங்களை நிம்மதியாக்க வேண்டும் என்றால் புத்தகங்களைப் படிக்கவும். இது உங்களை வேறொரு உலகத்திற்குக் கொண்டு செல்லும். புதிய விஷயங்களைத் தேடி அலையும் போது உங்களின் வாழ்க்கையில் ஒருவிதமான மகிழ்ச்சியை உணரமுடியும்.
book reading
  • பயணம்: அனைவரது வாழ்க்கையில் மனக்கஷ்டமும் பொருளாதார பிரச்சனையும் இல்லாமல் இருக்காது. ஆனாலும் உங்களது வாழ்க்கை அழகாக்க வேண்டும் என்றால், சில இடங்களுக்குப் பயணம் செய்யுங்கள். பிடித்த நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தொலைதூரப் பயணம் மேற்கொள்ள முயலுங்கள். இது உங்களது வாழ்க்கையில் நிலவும் சில அசௌகரியமான சூழலைக் குறைக்க உதவும்.
  • வாழ்நாள் முழுவதும் கற்றல்: இன்றைய போட்டி உலகில் ஒவ்வொருநாளும் புதிய புதிய விஷயங்கள் வளர்ச்சியடைந்துவருகிறது. இதை நாம் கற்றுக்கொள்ளாத போது தான் ஒரு வித அச்சம் மனதிற்குள் எழக்கூடும். எனவே உங்களுக்கு விருப்பமான மற்றும் பணிக்கு ஏற்றவாறு உங்களது கற்றலை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
  • நல்ல தூக்கம்:உங்களை எப்போதும் மன நிம்மதியுடன் வைத்திருப்பதற்கு போதுமான தூக்கம் அவசியம். இரவில் 7-9 மணி நேரமாவது கட்டாயம் தூங்க வேண்டும்.
மேலும் படிங்க:குளிர்காலத்தில் சன்ஸ்கிரீன் உபயோகிப்பதால் இத்தனை நன்மைகளா?

இதுப்போன்ற விஷயங்களை நீங்கள் மேற்கொள்ள முயற்சி செய்யுங்கள். ஆனாலும் எந்த சூழலிலும் எதிர்மறையான எண்ணங்களை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP