herzindagi
intelligence its victory

Intelligence skill: நீங்கள் புத்திசாலியா? கண்டறிய உதவும் சில குணாதிசயங்கள்!

<span style="text-align: justify;">புத்திசாலிகளுக்கு எப்போதும் தோல்வி கிடையாது. விடாமுயற்சியுடன் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற தேடல் இருக்க வேண்டும்</span><strong></strong>
Editorial
Updated:- 2023-12-19, 19:47 IST

நம்மில் சிலர் நாம் என்ன செய்தாலும் நீ என்ன பெரிய புத்திசாலியா? இதெல்லாம் உனக்கு தேவையா? என கேளிக்கை செய்வார்கள். இந்த வார்த்தைகளில் பல அர்த்தங்களும் உண்மைகளும் மறைந்துள்ளது. ஆம் அனைவராலும் சில விஷயங்களை எளிதில் புரிந்துக் கொள்ளவும், அதை செயல்படுத்தவும் முடியாது. அதே சமயம் உண்மையிலேயே  புத்திசாலிகள் சில நடத்தைகள் மற்றும் பண்புகளை வெளிப்படுத்துவார்கள் என உளவியல் ஆய்வுகள் கூறுகின்றனர். இதோ அவற்றில் சில குணாதிசயங்கள் என்னென்ன? என்பது குறித்து நாமும் அறிந்துக் கொள்வோம்..

intelligence skill

 மேலும் படிங்க: இந்த ஜூஸ் குடிங்க.. குளிர்காலத்தில் சருமம் பிரகாசமாகும்! 

புத்திசாலியாக இருப்பதற்கான சில அறிகுறிகள்:

  • ஆர்வம்: குழந்தைகளாக இருக்கும் போது சில விஷயங்களைப் பற்றி ஆராய்வதில் ஆர்வம் அதிகம் இருக்கும். அதே ஆர்வம் வயதாகும போது பலருக்கு இருக்கக்கூடும். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் புதிய விஷயங்களையும், சுற்றுப்புறங்களையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் அதிகம் காட்டுவார்கள். இந்த நிலை கடைசி வரை தொடர்ந்தால் நீங்கள் புத்திசாலி தான். சில சந்தர்ப்பங்கள் எதையும் செய்யவிடவில்லை என்று காரணம் கூறுவது தவது. அதையும் ஏன்? எப்படி? என ஆராயும் போது தான் உங்களது மூளையின் செயல்திறன் அதிகரிக்கிறது. அணுகுமுறை:பெண்களின் புத்திசாலித்தனத்தின் மற்றொரு அடையாளம் அணுகுமுறை தான். எந்த இக்கட்டான சூழலையும் நீங்கள் எப்படி அணுகுதலோடு அதை எப்படி தீர்க்கிறீர்கள்? என்பதைப் பொறுத்து உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். 
  • நுண்ணறிவு:ஆண் மற்றும் பெண் இருவருக்கும் நுண்ணறிவு திறன் இருப்பதைப் பொறுத்தும் ஒருவரின் புத்திசாலித்தனத்தைக் கணக்கிடமுடியும். குறிப்பாக சமூக சிக்கல்களை வழிநடத்தவும் மற்றும் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை உறவுகளை நியாயமான மற்றும் உணர்ச்சியுடன் நிர்வகிக்கக்கூடிய திறன் இருக்க வேண்டும். விமர்சன சிந்தனை:புத்திசாலிக்களுக்கான மற்றொரு அடையாளம் விமர்சன சிந்தனை.உங்களது வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களைத் தெளிவாகவும் நியாயமாகவும் சிந்தித்து செயல்பட வேண்டும். ஒரு தலைபட்சமாக செயல்பட்டு கருத்துக்களை கூறுவது புத்திசாலிகளுக்கு அழகில்லை.
  • திறந்த மனப்பான்மை: புத்திசாலித்தனத்தின் முக்கிய அறிகுறிகளில் ஒன்று. தனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம் ஒரு போதும் இருக்கக்கூடாது. உலகம் முழுவதும் கற்றுக்கொள்ளக்கூடிய விஷயங்கள் கொட்டிக்கிடப்பதால்,எப்போதும் திறந்த மனப்பான்மையுடன் எதையும் கற்றுக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

  intelligence skils for ladies

  • பணிவு:பெரும்பாலும் கவனிக்கப்படாத புத்திசாலிகளின் அறிகுறிகள் ஒன்று பணிவு. எந்த சூழலிலும் புதிய அனுபவங்களையும், செயல்களையும் கற்றுக்கொள்ள வேண்டும். இதோடு எங்கும் நான் என்கிற கர்வம் இருக்கக்கூடாது.
  • விடாமுயற்சி: புத்திசாலிகளுக்கு எப்போதும் தோல்வி என்பதே கிடையாது. விடாமுயற்சியுடன் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற தேடல் இருக்க வேண்டும். வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கும் பண்புகள் புத்திசாலிகளிடம் அதிகமாக வெளிப்படும்.
  • சுய ஒழுக்கம்: வாழ்க்கையில் முன்னேறுவதற்கும், மற்றவர்களின் மரியாதையைப் பெற வேண்டும் என்றால் சுய ஒழுக்கம் முக்கியம். இந்த நற்குணம் எந்தவொரு தடைகளைத் தாண்டி, நீண்ட கால இலக்குகளை அடைவதற்கு உங்களுக்குப் பேருதவியாக இருக்கும்.
  • வாழ்நாள் முழுவதும் கற்றல்: உங்களது கல்வி மற்றும் திறமையால் உச்சத்தை அடைந்தாலும் இன்னும் கற்றுக்கொள்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது  என்ற எண்ணம் அவசியம் இருக்க வேண்டும். எப்போதும் தங்கள் அறிவை விரிவுபடுத்தவும், அவர்களின் திறன்களை மேம்படுத்தவும், தங்களைச் சுற்றியுள்ள உலகத்தை நன்கு புரிந்துகொள்ளவும் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.

மேலும் படிங்க: உங்களது அன்புக்குரியவர்களுக்கு கிறிஸ்துமஸ்க்கு சர்ப்ரைஸ் கிப்ட்? 

இதுப்போன்ற பல்வேறு நற்குணங்கள் இருந்தால் போதும், எந்தவொரு இக்கட்டான சூழலிலும் பெண்கள் உலகை அவர்களது கைக்குள் கொண்டுவரமுடியும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com