herzindagi
image

குண்டான பெண்கள் ஒல்லியாக தெரியனுமா? இந்த மாதிரி டிரஸ் பண்ணுங்க போதும்

பொதுவாகவே ஒரு சில டிரஸ்கள் உடல் பருமனாகவே இருந்தாலும் அவர்களை கொஞ்சம் ஒல்லியாக காட்டும் தன்மை கொண்டுள்ளது. அந்த வரிசையில் உடல் பருமனாக இருக்கும் பெண்களுக்கான சில ஸ்டைல் டிப்ஸ்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
Editorial
Updated:- 2025-03-11, 14:02 IST

உடல் பருமன் என்பது இன்றைய காலகட்டத்தில் பல பெண்களின் பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. உடல் பருமனாக இருக்கும் பெண்கள் தங்களுக்கான ஆடைகளை தேர்வு செய்யும் போது எப்போதும் குழப்பம் கொள்கிறார்கள். ஏனென்றால் இவர்கள் அணியும் ஆடைகளில் ஒல்லியாகவும் அழகாகவும் தெரிய வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஒரு சில குண்டான பெண்கள் கடைகளில் சென்று ஆடைகளை வாங்குவதில் கூட கூச்சம் படுகிறார்கள். ஆனால் ஒரு சில குண்டான பெண்களுக்கு புடவை கட்டினாலும் அல்லது ஜீன்ஸ் போட்டாலும் சரி சற்று ஒல்லியாகவே தெரிவார்கள். இதற்கு காரணம் அவர்களின் ஆடை தேர்வுகள் தான். பொதுவாகவே ஒரு சில டிரஸ்கள் உடல் பருமனாகவே இருந்தாலும் அவர்களை கொஞ்சம் ஒல்லியாக காட்டும் தன்மை கொண்டுள்ளது. அந்த வரிசையில் உடல் பருமனாக இருக்கும் பெண்களுக்கான சில ஸ்டைல் டிப்ஸ்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

லூஸ் ஃபிட் டிரஸ்:


குண்டாக இருக்கும் பெண்கள் பலரும் இறுக்கமான ஆடைகளை அணிவது உண்டு. இவர்கள் குறிப்பாக இறுக்கமான ஆடைகளை அணியும்போது உடலில் உள்ள சதைப்பகுதி அப்படியே வெளியே காட்டிவிடும். இதனால் அவர்கள் இன்னும் குண்டாக தான் தெரிவார்கள். எனவே டிரஸ் வாங்கும் போது உங்கள் சைஸில் இருந்து அடுத்த சைஸில் கொஞ்சம் லூசான டிரஸ்களை வாங்குவது நல்லது. அதேபோல ஜீன்ஸ் பேண்ட் அணியும்போது சரியான அளவிலான ஹீல்ஸ் அணியலாம். இந்த ஹீல்ஸ் ஸ்லிப்பர்களை அணியும் போது உங்கள் உடல் கொஞ்சம் ஒல்லியாக தெரியலாம்.

நீளமான ஆடைகள்:


ஒரு சில குண்டான பெண்கள் முழங்காலுக்கு மேல் ஃபிராக் போன்ற ஆடைகளை அணியும் போது அவர்கள் இன்னும் குண்டாக தான் தெரிவார்கள். உங்களுக்கு பிடித்த பாவாடை போன்ற ட்ரெஸ்களை கூட முழங்காலுக்கு கீழ் அணியலாம். பலரும் நீளமான குர்தா சுடிதார் அணிந்தால் இன்னும் குண்டாக தெரிவோம் என்று நினைப்பார்கள். ஆனால் அது தான் தவறு. பலாசோ பேண்ட் (லூஸ் பேண்ட்) அணிந்து அதன் மேலே சட்டை போல நீளமான குர்தாவை அணியும் போது குண்டான பெண்கள் கூட ஒல்லியாக இருப்பார்கள்.

Latest-Dresses-for-Fat-Women-20-Styles-To-Get-Inspired

கலர் முக்கியம்:


நாம் ட்ரெஸ் வாங்கும்போது தேர்வு செய்யும் கலர் மிகவும் முக்கியம். ஒரு சில கலர் ஆடைகளில் நாம் குண்டாக தெரிய வாய்ப்புகள் அதிகம். எப்போதும் டாப் மற்றும் பேண்ட் இரண்டிலும் மேட்ச் செய்யும் கலர்களை தேர்வு செய்ய கூடாது. அதாவது பேண்ட் டார்க் க்ரீன் என்றால் அதற்கு மேட்ச் செய்ய மேல் டாப்பை லைட் க்ரீனில் அணிய கூடாது. ஒரே ஃபேமலி கலர்களை கீழே மேலே என்று மேட்ச் செய்து அணிய கூடாது. கீழே அணியும் பேண்ட் அல்லது பாவாடை டார்க் கலர் அணிந்தால் அதற்கு மேலே அணியும் டாப் லைட் நிறத்தில் அதுவும் எதிர் நிறத்தில் இருந்தால் நல்லது. இது உங்கள் உடலை சற்று ஒல்லியாக காட்ட உதவும். அதே போல குண்டான பெண்களுக்கு டார்க் சிவப்பு மற்றும் கருப்பு போன்ற நிறங்கள் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியாக இருக்கும்.

1140-julianne-moore-lucy-liu

அந்த வரிசையில் குண்டாக இருப்பதால் எந்த ஆடையும் நமக்கு மேட்ச் ஆகாது என்ற எண்ணத்தை முதலில் தள்ளி வையுங்கள். நீங்கள் முதலில் தைரியமாக முழு நம்பிக்கையுடன் உங்களுக்கான ஆடைகளை தேர்வு செய்து அணிந்து பாருங்கள். பெண்கள் இந்த மனநிலையோடு இருந்தாலே போதும் எல்லா ஆடையும் உங்களுக்கு அழகாக இருக்கும் என்ற ஆசை உங்களுக்கு வந்துவிடும். அதே போல புதியதாக ஆடை அணிந்து கண்ணாடியில் பார்க்கும் போது இனி உங்களை நீங்களே லைக் செய்வீர்கள்.

Image source: google

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com