herzindagi
tips to glowing skin Naturally

Quick Glowing Skin:வெறும் 20 நிமிடங்களில் முகம் பொலிவாக இதை பின்பற்றுங்கள்!

<span style="text-align: justify;">வீட்டு வேலை மற்றும் அலுவலக வேலையில் பிஸியாக இருந்தாலும் பெண்கள் தங்களுக்காக 20 நிமிடங்கள் ஒதுக்கி இந்த பேசியல் முறைகளை செய்து பார்க்கவும்.</span>
Editorial
Updated:- 2024-03-01, 16:32 IST

தங்களுடைய வாழ்நாள் முழுவதும் பரபரப்பாக வேலைகளை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கும் பெண்கள் தங்களது சரும பராமரிப்பு மற்றும் உடல் ஆரோக்கியத்தில் அக்கறைக் காட்ட மாட்டார்கள். குறிப்பாக திருமணத்திற்கு முன்னதாக முகத்தை எப்போதும் அழகாக வைத்திருக்கும் பெண்களில் பலர் திருமணத்திற்கு பின்னதாக இந்த நடைமுறையை மறந்துவிடுவார்கள். அதிலும் ஓர் குழந்தைக்கு தாயாகிவிட்டால் அவர்களுக்குத் தேவையான உணவு தயாரிப்பது, பள்ளிக்கு அனுப்புவது போன்றவற்றில் பிஸியாகிவிடுவார்கள். 

வீட்டிற்குள் இருக்கும் போது தெரியாது. ஏதாவது சுப நிகழ்ச்சிகள் அல்லது நண்பர்களின் வீடுகளுக்கு செல்லும் போது தான் சரும பராமரிப்பில் இன்னும் கொஞ்சம்  அக்கறை காட்டியிருக்கலாம் என்ற எண்ணம் ஏற்படும். இதற்காக நீங்கள் அழகு நிலையங்களுக்கு சென்று தான் முகத்தை பொலிவாக்கிக் கொள்ள வேண்டும் என்றில்லை. சமைக்கும் போதே சில உணவுப் பொருள்களை வைத்து வெறும் 20 நிமிடங்களில் உங்களை அழகாக்கிக் கொள்ள முடியும் என்பது உங்களுக்கு எத்தனை பேருக்குத் தெரியும்? இதோ உங்களுக்காக முகத்தை விரைவில் பொலிவாக்க உதவும் ஈஸியான அழகுக்குறிப்புகள் என்ன? என்பது குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

home remedies for glowing skin 

மேலும் படிக்க: கோடைக் காலத்தில் சருமம் பொலிவு பெற வேண்டுமா? அப்ப இதை பாலோ பண்ணுங்க!

முக பொலிவிற்கு உதவும் பேசியல்:

தேவையான பொருட்கள்

  • எலுமிச்சை -1
  • தக்காளி - 1
  • அரிசி - 3 டேபிள் ஸ்பூன்
  • தயிர் - 2 ஸ்பூன்
  • மஞ்சள் - 3 ஸ்பூன்
  • கடலை அல்லது அரிசி மாவு - சிறிதளவு

செய்முறை: 

  • முகத்தை அழகாக்கிக் கொள்ள வீட்டிலேயே பேசியல் செய்யும் பெண்கள் முதலில் மேற்கூறியுள்ள பொருள்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் மிக்ஸி ஜாரில் எலுமிச்சை, தக்காளி, அரிசி போன்றவற்றை நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதை ஒரு வட்டிகட்டியில் வடித்து தண்ணியாக எடுத்துக் கொள்ளவும்.
  • இதையடுத்து சிறிய பாத்திரத்தில் மாற்றி அதனுடன் தயிர், மஞ்சள், கடலை அல்லது அரிசி மாவு போன்றவற்றை நன்றாக பேஸ்ட் போன்று கலந்துக் கொள்ளவும்.
  • இறுதியில் இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதியில் சிறிய ப்ரெஷ் கொண்டு அப்ளை செய்யவும். இதை 20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும். பின்னர் குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தைக் கழுவினால் போதும் முகம் பிரகாசமாக இருக்கும்.

மேலும் படிக்க: முடி கொட்டும் பிரச்சனையா? செம்பருத்தி பூவை இப்படி பயன்படுத்திப் பாருங்கள்!


spark beauty

வீட்டு வேலை மற்றும் அலுவலக வேலையில் பிஸியாக இருக்கும் பெண்கள் தங்களுக்காக 20 நிமிடங்கள் ஒதுக்கி இந்த பேசியல் முறைகளை வாரத்திற்கு ஒருமுறையாவது செய்வதற்கு முயற்சி செய்யவும். கண்டிப்பாக முகத்தில் உள்ள அழுக்குகுளை நீக்கவும், சருமத்தை மென்மையாகவும் மாற்றுவதற்கு உதவியாக இருக்கும் என அழகுக்கலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com