herzindagi
image

ஈரமான முடியில் செய்யும் இந்த தவறுகள் அடர்த்தியான முடியை கூட மெல்லியதாக மாற்றலாம்

தலைமுடிக்கு ஷாம்பு போட்டு சுத்தம் செய்த பிறகு, கூந்தலை காற்றில் உலர்த்துகிறோம். ஆனால் முடியை உலர்த்தும்போது செய்யும் சிறிய தவறுகள் கூந்தலை உதிரச்செய்தது மெல்லியதாக மாற்றலாம்.
Editorial
Updated:- 2025-09-11, 20:02 IST

கூந்தல் பராமரிப்பில் முதல் படி கழுவுவது. இது உச்சந்தலையில் இருந்து அழுக்குகளை சுத்தம் செய்து முடி ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. இருப்பினும், பெரும்பாலான மக்கள் தலைமுடியைக் கழுவிய பின் உலர்த்துவதில் அதிக கவனம் செலுத்துவதில்லை. இதனால், தலைமுடியை உலர்த்தும் நேரத்தில் முடியின் ஆரோக்கியத்தில் ஆழமான விளைவை ஏற்படுத்தலாம்.

தலைமுடியைக் கழுவிய பின் ப்ளோ ட்ரையரைப் பயன்படுத்தக்கூடாது, ஏனெனில் இதில் வெளிப்படும் வெப்பம் முடிக்கு நிறைய சேதத்தை ஏற்படுத்தும். உங்கள் தலைமுடியை காற்றில் உலர்த்துவது எளிதான வழியாகும். ஆனால் தலைமுடியை காற்றில் உலர்த்தும்போது சில சிறிய தவறுகளைச் செய்தால், இது முடி உதிர்தலையும் ஏற்படுத்தும், மேலும் உங்கள் தலைமுடி மெல்லியதாக மாற்றலாம். இந்த தவறுகள் மிகச் சிறியவையாக இருந்தாலும், இது தலைமுடி ஆரோக்கியத்தில் ஆழமான விளைவை ஏற்படுத்துகிறது.

 

மேலும் படிக்க: முடி உதிர்வது, உடைவது என வலுவிழந்து இருந்தால் இந்த நான்கு எண்ணெய்களை சேர்த்து தலைக்கு பயன்படுத்துங்கள்

 

முடியை வேகமாக அசைத்து துடைப்பது

 

ஈரமான முடியை உலர்த்த ஒரு துண்டு உதவியுடன் வேகமாக துடைப்பது பொதுவாக அனைவரும் செய்யக்கூடியது. ஆனால் இது நிறைய முடி உதிர்தலை ஏற்படுத்துகிறது. ஈரமான முடி மிகவும் மென்மையானது மற்றும் அதை அசைத்தாலோ அல்லது தீவிரமாக தேய்த்தாலோ உடைந்து போகும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இதனால் பிளவுபட்ட முனைகள் முதல் மெல்லிய முடி வரை பிரச்சினைகள் தொடங்கும்.

wet hair (2)

 

ஈரமான முடியை சீவுதல்

 

பெரும்பாலும் மக்கள் ஈரமான முடியை சீவத் தொடங்குவார்கள், ஆனால் நீங்கள் இந்த தவறைச் செய்யக்கூடாது. நீங்கள் ஈரமான முடியை சீவும்போது, அந்த நேரத்தில் அது மிகவும் மென்மையாக இருக்கும். இதனால் சீவும் போது உடைந்து விடும். எனவே, ஈரமான முடியை சீவுவதைத் தவிர்க்க வேண்டும். ஏதாவது காரணத்திற்காக நீங்கள் சீவ வேண்டியிருந்தால் அகன்ற பற்கள் கொண்ட சீப்பைப் பயன்படுத்த வேண்டும், மேலும் வேர்களில் இருந்து சீவுவதற்குப் பதிலாக, முடியின் நீளத்தை சீவ வேண்டும்.

இறுக்கமான முடியில் சிகை அலங்காரம் செய்வது

 

பல நேரங்களில் நாம் ஈரமான முடியில் இறுக்கமான போனிடெயில், பன் அல்லது ஜடைகளை போட்டு அழுகுப்படுத்தி கொள்கிறோம். இதன் காரணமாக முடி அதிகமாக உடையத் தொடங்குகிறது. முடி ஈரமாக இருக்கும்போது மற்றும் சிகை அலங்காரம் செய்யும்போது, அந்த நேரத்தில் முடி வேகமாக இழுக்கப்படும், இதனால் அவை உடைந்து மெலிந்து போகத் தொடங்குகின்றன. எனவே, நீங்கள் உங்கள் தலைமுடியைக் கழுவும்போது, அந்த நேரத்தில் இறுக்கமான சிகை அலங்காரங்கள் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

wet hair 1

 

கண்டிஷனரைப் பயன்படுத்தாமல் இருப்பது

 

பல நேரங்களில் தலைமுடியைக் கழுவிய பின் கண்டிஷனரைப் பயன்படுத்துவது அவசியம் இல்லை, கண்டிஷனர் முடி உடைவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. காற்று உலர்த்துவதற்கு முன் கண்டிஷனரையோ அல்லது டிடாங்கிள் ஸ்ப்ரேயையோ பயன்படுத்தாவிட்டால், முடிக்கு கூடுதல் தேவையான ஈரப்பதம் கிடைக்காது, இதன் காரணமாக அவை வறட்சி காரணமாக உடையத் தொடங்குகின்றன. இதன் காரணமாக முடி காலப்போக்கில் மெலிதாகிவிடும்.

 

மேலும் படிக்க: எளிதாக கிடைக்கூடிய இந்த 3 பொருட்களை வைத்து தலை அரிப்பு, முடி உதிர்தல் மற்றும் போடுகு பிரச்சனையை போக்கலாம்

 

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால், நிச்சயமாக அதைப் பகிரவும். இதுபோன்ற பிற கதைகளைப் படிக்க ஹர்ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com