herzindagi
vegan foods to eat

Vegan: வீகன் உணவுகள் சாப்பிட்டால் என்ன ஆகும்?

<p style="text-align: justify;">வீகன் உணவுகளை சாப்பிட்டால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும், அதன் பக்கவிளைவுகள் குறித்தும் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
Editorial
Updated:- 2024-04-18, 12:15 IST

சமீப காலமாக உலகம் முழுவதும் வீகன் உணவு முறை ட்ரெண்ட் ஆகி வருகிறது. வீகன் உணவு முறை என்றால் என்ன? பெரும்பாலானோர் சைவ உணவு முறை தான் வீகன் என்று நினைக்கின்றனர். ஆனால் அது தவறு. தாவரங்கள் சார்ந்த உணவு முறைதான் வீகன் என்று அழைக்கப்படுகிறது. இந்த வீகன் உணவு முறையை பின்பற்றுவோர் காய்கறிகள் தானியங்கள் உலர் பழங்கள் ஆகியவற்றை மட்டுமே உணவில் சேர்த்து விடுவது வழக்கம். வீகன் உணவு முறையில் விலங்குகளிடமிருந்து கிடைக்கும் எந்த பொருளையும் உணவாக சாப்பிட மாட்டார்கள்.

உதாரணமாக பசு பால் நெய் வெண்ணெய் போன்ற பொருட்களை இந்த வீகன் உணவு முறையில் சாப்பிடக்கூடாது. அதற்கு பதிலாக இவர்கள் டீ காபியில் கூட சோயா பால் அல்லது பாதாம் பால் பயன்படுத்துவார்கள். உடல் எடையை குறைக்கவும் கொலஸ்ட்ராலை குறைத்து இதை ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இந்த வீகன் உணவு முறை பெரிதும் உதவுகிறது. 

மேலும் படிக்க: கர்ப்ப காலத்தில் உதவும் கருப்பட்டி.. மருத்துவ பயன்கள் இதோ!

வீகன் உணவு முறையில் என்ன சாப்பிடலாம்?

நட்ஸ் வகைகள், பயறு வகைகள், விதைகள் ,முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் போன்ற உணவுகளை இந்த வீகன் உணவு முறையில் சேர்க்கலாம். புரதச்சத்து நம் உடல் செயல்பாட்டுக்கு அடிப்படையான தேவை. பெரும்பாலான அசைவ உணவுகளில் புரதச்சத்து நிறைந்துள்ளது.  ஆனால் வீகன் உணவு முறை பின்பற்றும் போது புரதங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேறு சில வழிகள் உண்டு.

டோஃபு:

சோயா பாலில் இருந்து தயாரிக்கப்படுவது தான் இந்த டோஃபு. பண்ணீருக்கு பதிலாக இதனை சமைத்து சாப்பிடலாம். சோயாவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் இதனை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான புரதச்சத்து கிடைக்கும்.

நட்ஸ் வகைகள்:

nuts

முந்திரி, பாதாம், வால்நட், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இது உங்கள் உடலுக்கு தேவையான புரதச்சத்தை அளிக்க பெரிதும் உதவுகிறது. காலை உணவிற்கு பிறகு இந்த நட்ஸ் வகைகளை சாப்பிட்டு வரலாம்.

விதைகள்:

சூரியகாந்தி விதை, ஆளி விதை, பூசணி விதை போன்ற விதைகளில் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், புரதம், மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை உங்கள் தினசரி உணவில் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.

தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் என்ன?

பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள், தேன், வே புரதங்கள், கிரீம் வகைகள், ஜெலட்டின் மற்றும் வைட்டமின் டி3 உணவு வகைகளை இந்த வீகன் உணவு முறையில் தவிர்க்க வேண்டும். வைட்டமின் டி3 உள்ள உணவுப் பொருட்கள் பெரும்பாலானவை விலங்குகளின் தயாரிப்புகளில் இருக்கின்றது.

மேலும் படிக்க: உடல் பருமன் பிரச்சனையா? ஒரே மாதத்தில் குறைப்பதற்காக வழிமுறைகள் இது தான்!

வீகன் உணவின் பக்க விளைவுகள்:

வீகன் உணவு முறையில் சில முக்கியமான உணவுகளை தவிர்ப்பதால் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காது. குறிப்பாக வைட்டமின் டி குறைபாடு ஏற்படுகிறது. வைட்டமின் டி சூரிய ஒளிக்குப் பிறகு அதிகமாக அசைவ உணவுகளில் தான் உள்ளது. அதேபோல பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தவிர்க்கும் போது நம் உடலில் கால்சியம் பற்றாக்குறை ஏற்படுகிறது.

இறைச்சி, மீன், பால் பொருட்கள் ஆகியவற்றில் அதிக அளவு வைட்டமின் பி12 கிடைக்கிறது. இது நரம்பு மண்டலம், ரத்தம் ஆகியவை ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. இந்த வீகன் உணவு முறையில் வைட்டமின் பி12 கொண்ட உணவுகள் குறைவு. இதனால் வீகன் உணவு முறையைப் பின்பற்றும் நபர்களுக்கு வைட்டமின் பி12 சத்துமாத்திரைகள் தேவைப்படலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

Image source: google

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com