herzindagi
karupatti health benefits

Karupatti: கர்ப்ப காலத்தில் உதவும் கருப்பட்டி.. மருத்துவ பயன்கள் இதோ!

<p style="text-align: justify;">பெண்கள் கருப்பட்டி சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
Editorial
Updated:- 2024-04-18, 12:17 IST

நம் முன்னோர் காலத்தில் பயன்படுத்திய ஏராளமான உணவுப் பொருட்கள் காலப்போக்கில் மறைந்து வருகிறது. அப்படிப்பட்ட உணவு வகைகளில் ஒன்று தான் இந்த கருப்பட்டி. கருப்பட்டி சாப்பிடுவதால் நம்  உடலுக்கு ஏற்படும் நன்மைகள் ஏராளம். குறிப்பாக பெண்களுக்கு கர்ப்பப்பை ஆரோக்கியத்தை மேம்படுத்த இது பெரிதும் உதவுகிறது.

இன்றும் சில வீடுகளில் சர்க்கரைக்கு பதிலாக காபியில் கருப்பட்டி பயன்படுத்துவது வழக்கம். இந்தியாவில் தமிழகத்தில் தான் மிகுதியான இடங்களில் பனை மரங்கள் காணப்படுகிறது. பனை மரத்திலிருந்து பனையோலை, நுங்கு, பதநீர், பனைவெல்லம் என்று பல பொருட்கள் நமக்கு கிடைக்கும். அதில் நம் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும் முக்கிய பொருள் கருப்பட்டி. 

கருப்பட்டியின் மருத்துவ நன்மைகள் தெரியுமா?

மேலும் படிக்க: சியா விதைகளின் 5 சிறந்த ஆரோக்கிய நன்மைகள்!

எலும்புகள் வலுவாகும் : 

கருப்பட்டியில் கால்சியம் சத்து மற்றும் சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளது. நம் வீட்டில் தயாரிக்கும் இனிப்பு உணவுகளில் வெள்ளை சர்க்கரையை பயன்படுத்துவதற்கு பதிலாக கருப்பட்டியை கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு கால்சியம் அதிகம் கிடைத்து, நம் உடலில் உள்ள பற்களும் எலும்புகளும் வலுவாகும்.

கர்ப்பப்பை ஆரோக்கியம் :

மாதவிடாய்க்கு பின் பெண்கள் கருப்பட்டியையும் உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து சாப்பிடலாம். இது அவர்களின் கர்ப்பப்பை ஆரோக்கியத்தை மேம்படுத்தி வலுப்பெற உதவும். அதே போல கர்ப்ப காலத்தில் பெண்கள் கருப்பட்டி உட்கொண்டால் உடலில் உள்ள இரைப்பை குடல் பிரச்சினைகள் குறையும். மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு உணவு செரிமான பிரச்சனைகளை சரி செய்ய கருப்பட்டி உதவுகிறது.

karupatti 

நீரிழிவு நோய்யை கட்டுப்படுத்தும்: 

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்க்கரை நோய் உள்ளவர்கள் பாலிஷ் செய்த வெள்ளை அரிசியை தவிர்த்து கைக்குத்தல் அரிசியுடன் கருப்பட்டி கலந்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த சர்க்கரை அளவு குறையும். இது நீரிழிவு நோயை கட்டுப்படுத்தி, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

செரிமானம் சீராகும்:

ஒருவர் ஆரோக்கியமாக இருந்தால் அந்த நபருக்கு அடிக்கடி நன்கு பசி எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் ஒரு சிலருக்கு உடலில் ஏற்படும் சில பிரச்சனைகளால் சரியாக பசி எடுக்காது. சீரகத்தை நன்றாக வறுத்து அதனுடன் சுக்கு கருப்பட்டியும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனை குணமாகி நன்கு பசி எடுக்கும். மேலும் இது உணவை எளிதாக செரிமானம் செய்யவும் உதவுகிறது.

நச்சுக்களை வெளியேற்றும்:

நாம் சாப்பிடும் உணவு வகைகளில் மட்டுமல்லாமல் நாம் அருந்தும் குடிநீர் வரை அனைத்திலும் சிறு அளவு மாசுகள் நிறைந்துள்ளன. இந்த நிலையில் சிறிதளவு கருப்பட்டியில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நம் உடலில் தேங்கி இருக்கும் நச்சுக்கள் வெளியேறி உடல் தூய்மை அடையும்.

தாய்ப்பால் சுரக்க உதவும்:

குழந்தை பெற்றுக் கொள்ளும் சில பெண்களுக்கு இயற்கையாகவே தாய்ப்பால் சுரப்பது குறைந்து வருகிறது. குழந்தை பெற்ற பெண்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பது மிக அவசியம். சுக்கு மிளகு பொடியை கருப்பட்டியுடன் சேர்த்து இந்த பெண்கள் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். மேலும் கருப்பட்டியில் உள்ள சத்துக்கள் தாய்ப்பால் மூலம் குழந்தைக்கும் சென்றடையும்.

சளி, இருமல் குணமாகும்:

நம்மில் பலருக்கும் குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடும் போது ஜலதோஷம் ஏற்பட்டு சளி,இருமல் மற்றும் மூக்கில் நீர் வடிதல் போன்றவை ஏற்படுகிறது. கருப்பட்டியுடன் குப்பைமேனி கீரையை சேர்த்து வதக்கி சாப்பிட்டு வந்தால் சளி தொல்லை மற்றும் வறட்டு இருமல் நீங்கும்.

மேலும் படிக்க: இதய ஆரோக்கியத்திற்கான சிறந்த தின்பண்டங்கள்!

ஜொலிக்கும் சருமம்: 

வயதாகும் போது பலருக்கும் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவது வழக்கம். இதனால் அவர்கள் சருமத்தின் பளபளப்பும் குறைந்துவிடும். ஆனால் கருப்பட்டியை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு சருமத்தில் ஈரப்பதம் இருக்கும். இதனால் அவர்களின் சருமம் பளபளப்பு அதிகரித்து, தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்க கருப்பட்டி உதவுகிறது.

Image source: google

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com