Greens: கீரை வகைகளும், அதன் ஆரோக்கிய நன்மைகளும்!

முருங்கைக்கீரை, பசலைக்கீரையை தாண்டி நம் உடலுக்கு பயனளிக்கும் பல வகை கீரைகள் உள்ளது. அந்த கீரை வகைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

 
types of keerai

கீரைகளில் ஒவ்வொரு கீரையும் ஒவ்வொரு விதமான மருத்துவ பலன்களை கொண்டுள்ளது. இதன் மருத்துவ குணங்கள் தெரியாததால் பலர் கீரைகளை உணவில் சேர்த்து பயன்படுத்துவது இல்லை. முருங்கைக்கீரை, பசலைக்கீரை போன்ற கீரை வகைகளை தாண்டி இன்னும் பல கீரை வகைகள் உள்ளது. அந்த கீரை வகைகள் குறித்தும் அதன் மருத்துவ பலன்கள் குறித்தும் இங்கே பார்க்கலாம்.

சக்கரவர்த்திக்கீரை:

இந்த கீரையில் இரும்புச்சத்து, தாது உப்புக்கள், நார்ச்சத்து மற்றும் மாவுச்சத்து நிறைந்துள்ளது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உயிர் அணுக்களை அதிகரித்து குழந்தைபேற்றை அடையச்செய்யும். மேலும் வயிற்றுப் போக்கு, சிறுநீரக நோய், ரத்த சோகை, மலச்சிக்கல், வாயு தொல்லை, வயிற்றுப்புண்ணிற்கு இந்த கீரை வகை சிறந்தது.

aarai keerai

ஆரைக்கீரை:

பித்தம் சம்பந்தப்பட்ட நோய்கள், மூளை கோளாறு மற்றும் பால் வினை நோய்களுக்கு கை கண்ட மருந்து இந்த ஆரைக்கீரை. இது வாய்க்கால் ஓரங்களில் வளரும் ஒரு கொடி வகை. இதனை துவையல் செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு தாய்ப்பால் நன்கு சுரக்கும் என்று கூறப்படுகிறது.

சுங்கான்கீரை:

இது ஆஸ்துமா, மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகளை கட்டுப்படுத்த உதவும். இதில் ஆக்ஸலேட்கள் அதிகளவில் இருப்பதால் பூச்சிக்கடிகளுக்கு மருந்தாக பயன்படுத்தலாம். இந்த கீரையை புளி சேர்க்காமல் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் குடல்புண் குணமாகும்.

சதக்குப்பைக்கீரை:

இந்த கீரையை சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் நீங்கும். மேலும் கர்ப்பப்பை பிரச்சனைகள் உள்ள பெண்கள் இந்த கீரையுடன் சீரகம், மிளகு மற்றும் பூண்டு சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பை ஆரோக்கியம் மேம்பட உதவும்.

சிறுகீரை:

இந்த கீரை வகையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும். பித்தம், வாத தோஷங்கள் நாளடைவில் குறையும். மேலும் சிறுநீரகம் மற்றும் கல்லீரலை பலப்படுத்த உதவும். மது குடிப்பதால் உண்டாகும் குடல் புண்களை ஆற்றவும் இந்த கீரை உதவுகிறது.

thavasi keerai

தவசிக்கீரை:

இந்த கீரை வகை அனைத்து வைட்டமின் சத்துக்களை கொண்டுள்ளது. உடற்சோர்வு, சர்க்கரை நோயால் ஏற்படும் உடல் பலவீனம் குணமாக வாரம் ஒருமுறை தவசிக்கீரை சாப்பிடலாம்.

சண்டி கீரை:

பெண்களுக்கு ஏற்படும் மூட்டு வலி, முதுகு வலி மற்றும் இடுப்பு வலிகளை போக்குவதுடன், சளி, சுவாசக் கோளாறு மற்றும் நெஞ்சு வலி போன்றவற்றை குணமாக்க உதவுகிறது. இந்த கீரை உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் மிக்கது. இதனை பாசிப்பருப்பு அல்லது துவரம் பருப்பு சேர்த்து கூட்டாக செய்து சாப்பிட்டு வந்தால் வாதம் குணமாகும்.

வெந்தயக்கீரை:

தாது உப்புக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த இந்த கீரை ஜீரண சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் நீரிழிவு நோய் மற்றும் காசநோய், பார்வை குறைபாடுகளையும் சரி செய்ய உதவும். படுக்கைக்குச் செல்லும் முன் வெந்தயக் கீரையை நன்கு அரைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் கரும்புள்ளிகள், முக வறட்சி மறையும்.

முளைக்கீரை:

இரும்புச்சத்து மற்றும் சுண்ணாம்பு சத்து அதிகம் கொண்ட இக்கீரைபை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியை தருகிறது. நரம்பு தளர்ச்சிக்கு சிறந்தது.

மேலும் படிக்க:உலர் அத்திப்பழத்தில் இத்தனை மருத்துவ பயன்களா?

பருப்புக்கீரை:

கால்சியம் சத்து குறைவாக உள்ளவர்கள், நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய கீரை இது. ஒமேகா 3, கால்சியம், வைட்டமின் ஏ, சி மற்றும் பி காம்ப்ளக்ஸ் இந்த கீரையில் நிறைந்துள்ளது.

Image source: google
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP