கடுமையான கோடை காலங்களில் வெயிலுக்கு இதமாக ஒரு டம்ளர் கரும்பு சாறு குடித்தால் சோர்வு நீங்கி, புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். கரும்பு சாறு குடிப்பதற்கு சுவையானது மட்டுமல்ல இதில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்துள்ளன.
பொதுவாக கரும்பு சாறு தயாரிப்பில் புதினா, இஞ்சி போன்ற ஒரு சில விஷயங்களும் சேர்க்கப்படுகின்றன. இவை ஆரோக்கியத்திற்கு கூடுதல் நன்மை தருகின்றன. கரும்புசாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் அவர்கள் பகிர்ந்து உள்ளார். நிபுணரின் கருத்துக்களை இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: பாரம்பரிய மண்பானை சமையலில் இவ்வளவு நன்மைகளா?
கரும்பு சாறு நன்மைகள்
- கரும்பில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து மற்றும் மைக்ரோ மினரல்கள் நிரம்பியுள்ளன. கரும்பு மற்றும் அதன் வழிப்பொருள்கள் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுவதாக ருஜுதா திவேகர் அவர்கள் பகிர்ந்து உள்ளார்.
- கரும்பு சாறு ஒரு டையூரிடிக் மருந்தாக செயல்படுகிறது. இது வீக்கம் மற்றும் சோர்வை நீக்குகிறது, மேலும் சிறுநீரகங்களின் சீரான செயல்பாட்டிற்கும் உதவுகிறது.
- கரும்பு சாறு கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இதனுடன் மஞ்சள் காமாலைக்கான சிகிச்சையாகவும் பயன்படுத்தப்படுகிறது.
- கரும்பு சாறு ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல உங்கள் சருமம் மற்றும் கூந்தலுக்கும் நல்லது. இது உச்சந்தலையில் ஏற்படும் பொடுகை தடுக்கிறது. கரும்பு சாறு குடிப்பதன் மூலம் மென்மையான சருமத்தை பெறுவதுடன், முகப்பருக்களில் இருந்தும் உங்கள் சருமத்தை பாதுகாத்துக் கொள்ளலாம்.
- கரும்பு சாறு குடிப்பது மலச்சிக்கல் மற்றும் பலவீனத்தை போக்க உதவுகிறது.
- இயற்கையான முறையில் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும், உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் கரும்பு சாறு குடிக்கலாம்.
- இது கருவுறுதலை மேம்படுத்தும் அற்புத பானம். கரும்பு சாறு ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை அதிகரிக்கிறது. மேலும் பாலூட்டும் தாய்மார்களின் தாய்ப்பால் உற்பத்தியையும் மேம்படுத்துகிறது.
- மாதவிடாய் நாட்களுக்கு முன்னதாகவே இரத்தக்கசிவு ஏற்படுவது அல்லது மாதவிடாயின் இரண்டாவது நாட்களில் கடுமையான வலியை உணர்வது போன்ற மாதவிடாய் சார்ந்த பிரச்சினைகளுக்கும் கரும்பு சாறு உதவும். மாதவிடாய் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக கரும்பு சாறை பருக வேண்டும். உணவியல் நிபுணரின் ஆலோசனையுடன் இதை பின்பற்றலாம்.
- இரத்த சோகை அல்லது குறைந்த ஹீமோகுளோபின் அளவுகள் உள்ளவர்களுக்கும் கரும்பு சாறு நல்லது.
- கரும்பு சாறு உங்களை நீரேற்றமாக வைத்துக் கொள்ள உதவும். இதனால் கோடை காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலிலிருந்தும் விடுபடலாம்.
- சர்க்கரை நோயாளிகள், தைராய்டு நீர்கட்டி, அல்லது உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களும் கரும்பு சாறு குடிக்கலாம். இருப்பினும் இவர்கள் கரும்பு சாறை ½ டம்ளரை விட அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என நிபுணர் பரிந்துரைக்கிறார்.
- கரும்பு சாறு வயது முதிர்வை தடுக்கும் ஒரு அற்புத பானமாக அமைகிறது. இதை குடித்து வந்தால் உங்கள் சரும பொலிவும் அதிகரிக்கும்.
- கரும்பு சாறில் உள்ள சேர்மங்கள் உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும், ஆகையால் இது எடை இழப்புக்கும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: வெறும் வயிற்றில் பெருங்காயத் தண்ணீர் குடிப்பது இவ்வளவு நல்லதா?
கரும்பு சாறு குடிப்பதற்கான சரியான நேரம் என்ன?
கரும்பு சாறை நண்பகலுக்கு முன்னதாக குடிப்பதே சிறந்தது என நிபுணர் குறிப்பிட்டுள்ளார். ஃபிரஷ்ஷாக தயாரிக்கப்பட்ட கரும்பு சாறு குடிப்பது நல்லது. குளிர்காலத்தில் கரும்பு சாறை தினமும் குடிக்கலாம் அல்லது வாரத்திற்கு மூன்று முறை குடிக்கலாம் என நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கோடை காலத்தில் அசிடிட்டி அல்லது உடல் பலவீனத்தை உணர்ந்தால் கரும்பு சாறு குடிக்கலாம் என கூறியுள்ளார். இத்தகைய நன்மைகளைக் கொண்டுள்ள கரும்பு சாறை நீங்களும் குடித்து மகிழுங்கள்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik