இரும்பு கம்பிகள் போல் எலும்பு வலுவாக இருக்க பாலை இந்த 3 வழிகளில் எடுத்துக் கொள்ளுங்கள்

எலும்புகளை வலுப்படுத்த வெறும் காய்ச்சிய பாலை கூடிப்பதை விட, இந்த மூன்று வழிகளில் குடிக்கலாம். இது வித்தியாசமான சுவையைத் தருவதோடு, ஊட்டச்சத்து மதிப்பையும் அதிகரிக்கிறது.
image

பால் உடலுக்கு தேவையான சத்துக்களை தருவதால் முழுமையான உணவாகக் கருதப்படுகிறது. எலும்புகளை வலுப்படுத்த பால் மிகவும் முக்கியமானது. எலும்புகளை வலுப்படுத்த மூன்று வழிகளில் பாலை உணவில் சேர்ப்பது எப்படி என்பதை பற்றி கட்டுரையில் பார்க்கலாம். இந்த வழிகளில் பாலை எடுத்துக்கொள்வதால் சுவையை அதிகரிக்கிறது மற்றும் அதன் ஊட்டச்சத்து மதிப்பையும் அதிகரிக்கிறது.

பால் மற்றும் மஞ்சள் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம்


பாலில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் டி, பொட்டாசியம் மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் உள்ளன. பாலில் மஞ்சள் கலந்து குடித்தால் உடலுக்கு அதிக பலன்கள் கிடைக்கும். மஞ்சளில் குர்குமின் உள்ளதால் மூட்டுகளின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. இது வலியை நீக்குகிறது. இது எலும்பு திசுக்களின் சேதத்தை குணப்படுத்த உதவுகிறது. மூட்டுவலி போன்ற பிரச்சனைகளுக்கு மிகவும் நன்மை பயக்குகிறது.

பேரீச்சம்பழம் மற்றும் பால் சேர்த்து குடிக்கலாம்

dates added milk

பேரீச்சம்பழம் பால் சேர்த்து குடிப்பதால் எலும்புகளை வலுப்படுத்த நன்மை பயக்கும். பேரீச்சம்பழம் மற்றும் பால் இரண்டிலும் நல்ல அளவு கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளதால் இதன் கூறுகள் அனைத்தும் எலும்புகளை வலுப்படுத்த உதவுகின்றன.

பேரீச்சம்பழம் பால் செய்ய, ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் பாலை எடுத்து அதில் இரண்டு பேரீச்சம்பழம் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அதன்பின் பால் நிறம் மாறியதும் பாலை எடுத்து சிறிது குளிர வைத்து குடிக்கவும்.

மக்கானா மற்றும் பால் சேர்த்து குடிக்கலாம்

makhana

பாலில் நிறைய கால்சியம் உள்ளதால் எலும்புகளை வலுப்படுத்த இன்றியமையாதது. மக்கானாவில் கால்சியம் நிறைந்துள்ளது, இந்த கலவையானது எலும்புகளை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. மக்கானா மற்றும் பால் தொடர்ந்து உட்கொள்வது எலும்புகளின் கட்டமைப்பை பராமரிக்கிறது.

மக்கானா பால் செய்யும் முறை

மேலும் படிக்க: வயிறு தாறுமாறா தொல்லைதருதா? பெருங்காயத்துடன் கடுகு எண்ணெயை தொப்புளில் தடவவும்


  • மக்கானாவை வறுத்து மிருதுவாக வைக்கவும்.
  • இப்போது மிக்ஸியில் அரைத்து பொடி செய்து கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் பாலை ஊற்றி, அதில் மக்கானா பவுடர் சேர்க்கவும்
  • இனிப்புக்கு தேன் சேர்த்து இந்த கலவையை ஒரு கொதி நிலைக்கு வந்ததும் எடுத்து விடவும்.
  • இப்போது பாலை ஊற்றி ஆறவிட்டு, குடிக்கவும்.

பால் மற்றும் கருப்பு உளுத்து எடுத்து கொள்ளலாம்

milk eat bone health

பல் மற்றும் உளுந்து இரண்டிலும் கால்சியம் நிறைந்துள்ளதால். இவை இரண்டையும் எடுத்துக்கொள்வது பெண்களுக்கு கூடுதல் வலுவாக இருக்கும். உளுந்துடன் சிறிது அரிசி சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். இந்த பொடியை பாலுடன் கொதிக்க வைத்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.


Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP