செவ்வாழை vs மஞ்சள் வாழைப்பழம்; உடல் ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது தெரியுமா?

இந்த வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிக அளவில் காணப்படுகிறது. மேலும் பொட்டாசியம், வைட்டமின் B6, வைட்டமின் C மற்றும் ஆன்டிஆக்ஸிடண்ட்கள் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. 
image

வாழைப்பழம் தென்கிழக்கு ஆசியாவை தாயகமாகக் கொண்ட ஒரு சுவையான பழமாகும். வாழைப்பழம் பச்சை மஞ்சள் சிவப்பு என மூன்று நிறங்களில் கிடைக்கும். இது மூன்றுமே உடலுக்கு ஊட்டச்த்துக்களை அளிக்க உதவுகிறது. தற்போது வெப்பமண்டல பகுதிகளில் கூட வாழைப்பழம் வளர்க்கப்படுகிறது. இந்தப் பழத்தில் நார்ச்சத்து அதிக அளவில் காணப்படுகிறது. மேலும் பொட்டாசியம், வைட்டமின் B6, வைட்டமின் C மற்றும் ஆன்டிஆக்ஸிடண்ட்கள் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்தக் கட்டுரையில் மஞ்சள் வாழைப்பழம் மற்றும் சிவப்பு வாழைப்பழம் எது சிறந்தது என்றும் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்தும் பார்க்கலாம்.

செரிமானம் நன்மைகள்:


வாழைப்பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் இது செரிமான செயல்முறைக்கு மிகவும் உதவுகிறது. தினசரி ஒரு வாழைப்பழம் உண்பது செரிமான பிரச்சினைகளை தீர்க்கும். எடை குறைக்க விரும்புவோர் இதை தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். குறைந்த கலோரி உள்ளடக்கம் கொண்ட இந்தப் பழம் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்காது. மேலும், ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதால், அதிகமாக உணவு உண்ண வேண்டியதில்லை.

இதய ஆரோக்கியத்திற்கான நன்மைகள்:


பொட்டாசியம் என்பது இதய ஆரோக்கியத்திற்கும் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டிற்கும் மிகவும் அவசியமான தாதுப்பொருளாகும். சிவப்பு வாழைப்பழத்தில் இயற்கையாகவே பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. இதனால் இது உயர் இரத்த அழுத்தம் (ஹைப்பர்டென்ஷன்) பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது.

heart-1596700238

சிறுநீரக ஆரோக்கியம்:


தினமும் வாழைப்பழம் உண்பது சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. இதில் உள்ள பொட்டாசியம் சிறுநீரகங்களின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

சிவப்பு வாழைப்பழத்தின் சிறப்புகள்:


சிவப்பு வாழைப்பழத்தில் மஞ்சள் வாழைப்பழத்தை விட அதிகமான பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் C உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்டது. இதில் பிரக்டோஸ், சுக்ரோஸ் மற்றும் குளுக்கோஸ் போன்ற இயற்கை சர்க்கரைகள் உள்ளன, அவை உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகின்றன.

red-bananas-1296x728-feature

சர்க்கரை நோயாளிகளுக்கான நன்மைகள்:


சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிவப்பு வாழைப்பழம் ஒரு ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவாக கருதப்படுகிறது. அதிக நார்ச்சத்து உள்ளடக்கம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. எளிதில் ஜீரணம் ஆகும் என்பதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த தேர்வாகும்.

கண் ஆரோக்கியத்திற்கான நன்மைகள்:


சிவப்பு வாழைப்பழத்தில் கரோட்டினாய்டு நிறமிகள் உள்ளன, அவை அதன் தனித்துவமான சிவப்பு நிறத்திற்கு காரணமாகும். இதில் உள்ள லியூட்டின் மற்றும் பீட்டா கரோட்டினாய்டுகள் மஞ்சள் காமாலை நோய் மற்றும் பிற கண் பிரச்சினைகளை தடுக்கும் திறன் கொண்டவை, இது பார்வைத் திறனை மேம்படுத்துகிறது.

மேலும் படிக்க: வெல்லம் போட்டு டீ குடிச்சிருக்கீங்களா? இந்த நன்மைகள் தெரிஞ்சா இனி தினமும் குடிப்பீங்க

பெண்களின் கருப்பை ஆரோக்கியம்:


பெண்கள் தொடர்ந்து சிவப்பு வாழைப்பழம் உண்பது கருவுறுதல் திறனை மேம்படுத்துகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் C பெண்களின் ஹார்மோன்களை சீராக்க உதவுகிறது. அதே போல குழந்தைகளுக்கு இந்தப் பழத்தை உணவுடன் கொடுக்கலாம். இது மென்மையானது, எளிதில் செரிக்கக்கூடியது மற்றும் ஊட்டச்சத்து நிறைந்தது.

அந்த வரிசையில் சிவப்பு வாழைப்பழத்தில் அதிக அளவு பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் C உள்ளதால், இது அதிக ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. மஞ்சள் வாழைப்பழத்துடன் ஒப்பிடும்போது இதில் அதிக ஆன்டிஆக்ஸிடண்ட்கள் உள்ளன. இரத்தசோகை (அனிமியா) உள்ளவர்கள் தினமும் சிவப்பு வாழைப்பழம் சாப்பிட்டால் இது இரத்த அணுக்களை அதிகரிக்க உதவுகிறது.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP