வெல்லம் போட்டு டீ குடிச்சிருக்கீங்களா? இந்த நன்மைகள் தெரிஞ்சா இனி தினமும் குடிப்பீங்க

சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் பயன்படுத்துவது இந்த தேநீருக்கு தனித்துவமான நறுமணத்தையும், மண்ணின் இயற்கை வாசனையையும் தருகிறது. தினமும் வெல்லம் தேநீர் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம். 
image

நம்மில் பலருக்கும் தினமும் காலை தூங்கி எழுந்தவுடன் காபி அல்லது டீ குடிக்கும் பழக்கம் இருக்கும். காலையில் ஒரு கப் தேநீர் உடன் அந்த நாளை புத்துணர்ச்சியாக துவங்குவது நாள் முழுக்க ஆற்றலை அளிக்கும். ஒரு சிலர் டீயில் சர்க்கரை சேர்க்க விரும்பமாட்டார்கள். அதற்கு பதில் சுவைக்காக நாட்டு சர்க்கரை அல்லது தேன் பயன்படுத்துவார்கள். பல நூற்றாண்டுகளாக மக்கள் குளிர்காலத்தில் வெல்லம் கலந்த தேநீரை அருந்தி வருகின்றனர். இந்த பாரம்பரிய வெல்லம் கலந்த தேநீர் பானத்தில் மசாலா மற்றும் மூலிகைகளை விருப்பத்திற்கேற்ப சேர்க்கலாம். சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் பயன்படுத்துவது இந்த தேநீருக்கு தனித்துவமான நறுமணத்தையும், மண்ணின் இயற்கை வாசனையையும் தருகிறது. தினமும் வெல்லம் தேநீர் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

ஊட்டச்சத்து நிறைந்த பானம்:


வெல்லத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, பாஸ்பரஸ், இரும்பு, சுக்ரோஸ் உள்ளிட்ட பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் குளிர்காலத்தில் உடலுக்கு தேவையான ஆற்றலைத் தருகின்றன.

Food-Recipes-in-Tamil-2024-02-28T141845.456-2024-02-cdd059b82238f688a0ca8d25230fd450

இயற்கை இனிப்பான வெல்லம்:


வெல்லம் ஒரு இயற்கை வகை இனிப்பாகும். இது சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு ஆரோக்கியமான மாற்றாகும். கரும்பு சாறு அல்லது பனை சாற்றிலிருந்து தயாரிக்கப்படும் வெல்லத்தில் இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் உள்ளன.

jaggery-2

ஆன்டிஆக்ஸிடன்ட்களின் களஞ்சியம்:


வெல்லம் தேநீரில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராகப் போராட உதவுகின்றன. இவை சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன.


செரிமானத்திற்கு உதவும்:


வெல்லம் செரிமான பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது. இது மலச்சிக்கலைத் தடுக்கும். தினமும் உணவுக்குப் பிறகு வெல்லம் கலந்த தேநீர் குடிப்பது உணவு செரிமானத்தை மேம்படுத்துகிறது.


நோயெதிர்ப்பு சக்தி:


இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்கள் நிறைந்த வெல்லம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. குளிர்காலத்தில் வெல்லம் மற்றும் இஞ்சி கலந்த தேநீர் குடிப்பது ஜலதோஷம் மற்றும் ஒவ்வாமைகளிலிருந்து பாதுகாக்கும் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகிறது.

tea-2024-01-5a51258143279098b28129ab5a9ae05d-16x9

சுவாச ஆரோக்கியம்:


வெல்லம் கலந்த தேநீர் சுவாசப் பாதைகளை சுத்தப்படுத்துகிறது. இது குளிர் காலத்தில் தொண்டை எரிச்சலைக் குறைக்கிறது. பருவகால மாற்றங்களால் ஏற்படும் சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு இது நிவாரணம் அளிக்கிறது.

மேலும் படிக்க: சர்க்கரை நோயாளிகள் ஐஸ்க்ரீம் சாப்பிடலாமா? கூடாதா? உடலுக்கு என்ன ஆகும் தெரியுமா?

அந்த வரிசையில் வெல்லம் தேநீர் ஒரு ஆரோக்கியமான பாரம்பரிய பானமாகும். இது பல்வேறு ஊட்டச்சத்துக்களையும், உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளையும் தருகிறது. எனவே தினசரி இந்த இனிப்பான வெல்லம் தேநீர் அருந்தி ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP