30 வயது கடந்த பெண்கள் பலருக்கும் அடிக்கடி மூட்டு வலி, முதுகு வலி, இடுப்பு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம். நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வாரத்துக்கு ஒரு முறையாவது ஆரோக்கியமான பானங்களை குடிப்பது நல்லது. இது போன்ற ஆரோக்கியமான பானங்கள் குடிப்பதால் நம் எலும்புகள் அதிகம் பலமாகும், உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். மேலும் மூட்டு வலி முதுகு வலி இடுப்பு வலி அனைத்தும் நாளடைவில் குறையும். இந்த ஆரோக்கியமான பானத்தை தயாரிக்க ராகி இருந்தால் போதும். இது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும், உயர் ரத்த அழுத்தம் சீராகும், இதயத்தில் எந்த பிரச்சனையும் வராமல் இதயம் ஆரோக்கியமாக செயல்படும். அந்த வரிசையில் ராகியை வைத்து ஒரு ஆரோக்கியமான பானத்தை தயாரிப்பது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- ராகி ஒரு கப்
- ஆப்பிள் 1
- மக்கானா தேவையான அளவு
- பேரீச்சம் பழம் 4
- பசும் பால் 1 கப்
ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் ராகி:
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவுக்கு ராகி மாவை சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியாக வரும் வரை கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த ராகியில் நார்ச்சத்து புரதம் கால்சியம் இரும்பு மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளது. மற்ற சிறு தானியங்களை விட இதில் 5 முதல் 30 மடங்கு கால்சியம் அதிகமாக உள்ளது. அது மட்டும் இல்லாமல் பாஸ்பரஸ் பொட்டாசியம் இரும்பு இது எல்லாம் அதிக அளவு இந்த ராகியில் கிடைக்கும். நம் எலும்பு ஆரோக்கியத்திற்கு கால்சியம் ரொம்பவே முக்கியமான ஒரு ஊட்டச்சத்து. இப்போது இந்த ராகியை கரைச்சி எடுத்த பிறகு அடுப்பில் ஒரு அகண்ட பாத்திரத்தை வைக்க வேண்டும். அதில் அரை டம்ளர் அளவுக்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது நாம் அதில் ஏற்கனவே கரைச்சி வைத்த ராகி மாவை சேர்த்த கொதிக்க வைக்க வேண்டும். இதை அப்படியே விடாமல் அடிக்கடி கைவிடாமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அடி பிடிக்காமல் இருக்கும். இது உங்களை எப்போதும் இளமையாக வைத்திருக்க உதவும். புற்றுநோயை எதிர்க்கும் சக்தி இதற்கு உண்டு. மேலும் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை கூட இது கட்டுப்படுத்த உதவும்.
கல்லீரல் கொழுப்பு ஏதாவது இருந்தால் அல்லது வேறு ஏதாவது கல்லீரல் பிரச்சனை இருந்தால் கூட இந்த ஒரு பானம் அதை குணப்படுத்தும். மேலும் இது உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும் என்பதால் கோடை காலத்தில் அதிகமாக இதை சாப்பிடலாம். இப்போது இந்த ராகி நன்றாக கொதித்து வந்ததும் அடுப்பை நிறுத்திவிட்டு அதை ஆறவிடுங்கள். இதற்குப் பிறகு நாம் ஒரு ஆப்பிளை எடுத்து உப்பு நீரில் ஊறவைத்து அதன் தோலை உரித்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளலாம். இந்த ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி உள்ளது. ஒரு நாளைக்கு நம் உடலில் தேவையான 14 சதவீத அத்தியாவசிய வைட்டமின்களும் இந்த ஆப்பிளில் உள்ளது. இதில் இருக்கும் பெக்டின் என்ற கரையக்கூடிய நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கும். அதுமட்டுமல்லாமல் இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நம் உடலில் உள்ள எலும்புகளை பாதுகாக்க பெரிதும் உதவும்.
எலும்புகளின் அடர்த்தி அதிகரிக்க ஆப்பிள் சேர்த்துக் கொள்வது நல்லது. இப்போது அடுப்பில் ஒரு சட்டியை வைத்து ஒரு பவுல் அளவுக்கு தாமரை விதைகள் அதாவது மக்கானாவை அதில் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது நாம் வறுத்து எடுத்த தாமரை விதைகளை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பவுடராக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த தாமரை விதைகளில் அதிக அளவு மெக்னீசியம் உள்ளது இது நம் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். இதய நோய்கள் வரும் அபாயத்தை குறைக்கும். அதே போல இதில் அதிக அளவில் பொட்டாசியமும் குறைந்த அளவு சோடியம் உள்ளதால் நம் உடலில் ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தும் தன்மை இந்த தாமரை விதைகளுக்கு உள்ளது. மேலும் உங்கள் மனசோர்வையும் போக்கும்.
இப்போது இந்த தாமரை விதைகளை மாவு போல அரைத்த பிறகு நாம் ஏற்கனவே கட் செய்து வைத்துள்ள ஆப்பிள் துண்டுகளை இதில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் நான்கு பேரிச்சம்பழத்தை விதைகள் நீக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த பேரிச்சம் பழம் நம் குடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது மலச்சிக்கல் செரிமான பிரச்சனை குணமாகும், தினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் போதும். இதில் உள்ள நார்ச்சத்து குடல் சார்ந்த பிரச்சினைகளை குணப்படுத்த உதவும். இப்போது இதை மிக்ஸியில் ஒரு கப் பசும்பால் சேர்த்து ஒன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு கூடவே நாம் கரைத்து வைத்த ராகியையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான ஆரோக்கியமான ராகி பானம் தயார். இதை தினமும் காலையில் பிரேக்ஃபாஸ்டாக குடித்து வந்தால் கை கால் மூட்டு வலி எல்லாம் குணமாகும். குறிப்பாக ராகி நம் உடலுக்கு குளிர்ச்சி தரும் என்பதால் மழைக்காலத்தில் இதை குடிப்பதை தவிர்க்க வேண்டும். பொதுவாகவே இதை காலையில் அல்லது மதிய வேலைகளில் குடித்தால் நல்லது. அதேபோல சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள் இதை அதிக அளவில் எடுத்துக் கொள்ளக் கூடாது. அதே மாதிரி ஹைப்போ தைராய்டு பிரச்சனை உள்ளவர்களும் இதை குடிப்பதற்கு முன்னால் மருத்துவர் ஆலோசனை பெறுவது நல்லது.
Image source: google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation