கோடை காலத்தில் சரியான உணவுப் பழக்கத்தை கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். வெப்பமான கோடை வெயில் பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். கோடையில் வயிறு பிரச்சனைகள் மிகவும் பொதுவானவை. கோடையில் உங்களை நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். ஆனால் இதற்கு தண்ணீர் மட்டும் போதாது. கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள முயற்சிப்போம். உடலை உள்ளிருந்து குளிர்ச்சியாக வைத்திருக்க, பருவகால பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.
கோடைகாலத்தில் சரியான உணவு பழக்கத்தை கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியம். கோடை காலத்தில் ஏற்படும் உடல் உஷ்ணத்தால் பல உடல் நல பிரச்சனைகள் ஏற்படலாம். வயிறு சார்ந்த பிரச்சனைகளில் தொடங்கி பலவீனமான எதிர்ப்பு சக்தி வரை கோடையில் பல்வேறு இடையூறுகளை சந்திக்க நேரிடும். இந்நிலையில் கோடை கால பிரச்சனைகளை எதிர்கொள்ள உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இதற்கு போதுமான அளவு தண்ணீர் குடிப்பதுடன் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் பழங்கள் மற்றும் காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக பருவ கால பழங்களை சாப்பிடுவது அதிக நன்மைகளை தரும்.
இந்த பதிவும் உதவலாம்: பெண்கள் விரைவில் கர்ப்பம் தரிக்க உதவும் எளிய யோகாசனங்கள்
கோடை காலத்தில் பிரத்தியேகமாக கிடைக்கக்கூடிய பல பழங்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. இது போன்ற பழங்களை சரியான அளவுகளில் நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது பலவிதமான உடல்நல பிரச்சனைகளை தவிர்க்கலாம். கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய நீர் சத்து நிறைந்த பழங்களை சாப்பிட வேண்டும். உடல் சூட்டை குறைக்க உதவும் பழங்கள் குறித்த தகவல்களை உணவியல் நிபுணரான சிம்ரன் கவுர் அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.
இது கோடை காலத்தில் சாப்பிட சிறந்தது. லிச்சியில் போதுமான அளவு நீர்ச்சத்து உள்ளது. இதுனுடன் வைட்டமின் C, B, பொட்டாசியம் போன்ற பல தாதுக்களும் லிச்சியில் நிறைந்துள்ளன. லிச்சி உடலில் உள்ள நீர் பற்றாக்குறையையும் பூர்த்தி செய்கிறது. ஆகையால் இந்தக் கோடை காலத்தில் லிச்சியை உங்கள் அன்றாட உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ளுங்கள்.
கோடை காலம் தர்பூசணி இன்றி நிறைவடையாது. இவை சுவை நிறைந்தது மட்டுமல்ல, தர்பூசணி ஊட்டச்சத்துக்களின் பொக்கிஷம் என்றே சொல்லலாம். தர்பூசணியை அரைத்து ஜூஸ் அல்லது வேறு விதமான பானமாக குடிப்பதற்கு பதிலாக பழமாகவே சாப்பிட்டால் கூடுதல் நன்மைகளை பெறலாம். தர்பூசணியில் நீர் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்துள்ளது. கொளுத்தும் வெயிலினால் உடலில் அடிக்கடி நீர் பற்றாக்குறை ஏற்படலாம். இந்நிலையில் உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ளவும், உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் தர்பூசணி சாப்பிடலாம். போதுமானவரை இதை பகல் வேளையில் எடுத்துக் கொள்வது நல்லது.
கோடை காலத்தில் திராட்சை சாப்பிடுவதும் நன்மை தரும். திராட்சை சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சி கிடைக்கும். இது இரத்தத்தை அதிகரிப்பதோடு மட்டுமின்றி கோடையில் ஏற்படும் செரிமான பிரச்சனைகளையும் நீக்குகிறது.
கோடையில் நீரிழப்பு ஏற்படாமல் இருக்க முலாம்பழம் சாப்பிடலாம். இதில் பல வைட்டமின்களும், தாதுக்களும் நிறைந்துள்ளன. தர்பூசணியைப் போலவே, முலாம்பழத்திலும் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இது மலச்சிக்கலை போக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உதவும்.
இந்த பதிவும் உதவலாம்: ஓரே மாதத்தில் 6 கிலோ வரை எடை குறைக்க நிபுணரின் டயட் பிளான்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com