
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்களும் உடல் பருமனால் அவதிப்படுகிறார்கள். அதிகரித்த உடல் எடையை விரைவாக குறைக்க உணவு கட்டுப்பாடு முதல் கடுமையான உடற்பயிற்சி வரை பல்வேறு முயற்சிகளை எடுக்கிறார்கள். இது மட்டுமின்றி ஒரு சிலர் உடல் எடை குறைப்பதற்கான சப்ளிமெண்ட்ஸ் அல்லது சில வீட்டு வைத்தியங்களையும் பின்பற்றுகின்றனர். உங்கள் தினசரி உணவு வழக்கத்தை கடைபிடித்து ஒரு மாதத்தில் 5-6 கிலோ வரை உடல் எடையை குறைக்க முடியும்.
இந்தத் திட்டத்தை உணவியியல் நிபுணரான ராதிகா கோயில் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உடல் எடையை குறைப்பது எளிதான காரியம் அல்ல, ஆனால் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று எண்ணமும், முயற்சியும், ஆரோக்கியமான உணவும் இணைந்தால் உங்கள் இலக்கை விரைவில் அடையலாம். நிபுணர் பரிந்துரை செய்யும் இந்த உணவுத் திட்டத்துடன் சில உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டும் என்பதை மறவாதீர்கள்.
இந்த பதிவும் உதவலாம்: பெண்கள் விரைவில் கர்ப்பம் தரிக்க உதவும் எளிய யோகாசனங்கள்

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சியா விதை தண்ணீரை குடிக்க வேண்டும். இதை செய்வதற்கு காலை எழுந்தவுடன் ஒரு டீஸ்பூன் சியா விதைகளை ஒரு கப் தண்ணீரில் ஊற வைக்கவும். அரை மணி நேரம் கழித்து இந்த தண்ணீரை குடிக்கலாம். சியா விதைகளில் ஒமேகா 3, கால்சியம், நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இந்த விதைகளை தண்ணீரில் ஊறவைத்து குடித்தால், உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கி செரிமானம் மேம்படும். மேலும் சருமம் மற்றும் தலைமுடி சார்ந்த பிரச்சனைகளை நீக்குவதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
15 நிமிடங்கள் கழித்து இரவு முழுவதும் ஊற வைத்த 5 பாதாம் மற்றும் 2 அக்ரூட் பருப்புகளை சாப்பிடலாம். இவை இரண்டிலும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. மேலும் இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகின்றன.
காலை உணவாக முளைகட்டிய பயறு சேர்த்த 1 சாண்ட்விச் சாப்பிடலாம். முளைகட்டிய பயறுகளில் வைட்டமின் A, B, C உடன் பல வகையான அமினோ அமிலங்களும் உள்ளன. முளைகட்டிய பயிருடன் சாண்ட்விச் சேர்த்து சாப்பிடுவதால் வயிறு நிறைவதுடன் உங்களுக்கு தேவையான கார்போஹைட்ரேட்டும் கிடைக்கும். இது உங்களுக்கு உடனடி ஆற்றலை தரும்.

காலை உணவு உங்களை நிறைவாக வைத்திருக்கும் இருப்பினும் இடைப்பட்ட நேரத்தில் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் பப்பாளி, மாதுளை போன்ற பழங்களுடன் ஆளிவிதை, பூசணி விதை போன்ற விதைகளை சேர்த்து சாப்பிடலாம். இவை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், எடையை குறைக்கவும் உதவும்.
மதிய உணவிற்கு 2 சப்பாத்தி, காய்கறிகள், பருப்பு வகைகள், தயிர் மற்றும் சாலட் சாப்பிடலாம். மதிய வேலை உணவை நிறைவாக சாப்பிட வேண்டும். ஏனெனில், இந்த டயட் பிளானின் படி இரவு லேசான உணவை மட்டுமே சாப்பிட வேண்டும்.
மதிய உணவிற்கு பின் 2 மணி நேரம் கழித்து சாதவரி டீ குடிக்கலாம். இது உடல் எடையை குறைக்க உதவுவதோடு மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்தும். மேலும் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் இது உதவும்.
மாலையில் சிறிது கருப்பு உளுந்தை வேகவைத்து சிற்றுண்டியாக சாப்பிடலாம். இதில் வைட்டமின்கள் A, B, C, D, பி, பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம், புரதம் போன்ற தனிமங்கள் உள்ளன. மேலும் இரும்பு சத்து நிறைந்த இந்த கருப்பு உளுந்தை சாப்பிடுவதன் மூலம் இரத்த சோகை பிரச்சனையிலிருந்தும் விடுபடலாம். இது மல சிக்கலுக்கான அருமருந்து. புரதம் நிறைந்த இந்த சிற்றுண்டி உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும்.

இரவு உணவு 8 மணிக்குள் சாப்பிட வேண்டும். இந்து சமயத்தில் செரிமான மண்டலத்திற்கு அதிக வேலை கொடுக்காமல் மிதமாக எளிதில் ஜீரணமாக கூடிய உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். உடல் எடையை குறைக்க அதிக புரதம் மற்றும் குறைந்த கலோரி உள்ள உணவை சாப்பிட வேண்டும். இதற்கு பனீர் சிறந்தது. 100 கிராம் அளவிற்கு பனீர் டிக்கா செய்து இரவு உணவாக சாப்பிடலாம். சிறந்த பலன்களைப் பெற வீட்டில் பிரஷ்ஷாக தயாரிக்கப்பட்ட பனீரை பயன்படுத்துவது நல்லது.
உணவுத் திட்டத்தை கடைபிடிப்பது உடன் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவும். எடை இழப்பை விரைவுபடுத்த ஆரோக்கியமான உணவுடன் உடற்பயிற்சி செய்வதும் அவசியமானது.
இந்த பதிவும் உதவலாம்: சர்க்கரை நோயாளிகளுக்கு காலை நேர நடைப்பயிற்சி எவ்வளவு முக்கியம் தெரியுமா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com