Glowing Skin Foods: பளபளப்பான சருமம் வேண்டுமா? இந்த உணவுகளை காலையில் சாப்பிடுங்க!

பளபளப்பான சருமத்திற்கு உதவும் காலை உணவுகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

glow skin

பளபளப்பான மென்மையான சருமத்தை கொண்டிருப்பது நல்ல ஆரோக்கியத்தின் அடையாளம் என்று கூறப்படுகிறது. நீங்கள் சாப்பிடும் உணவு சரும ஆரோக்கியத்திற்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதன் மூலம் பளபளப்பான சருமத்தை பெற முடியும். அந்த வகையில் காலை உணவு என்பது நம் நாளின் துவக்கமாக அமைகிறது. நம் சருமத்தை பிரகாசமாக பராமரிக்க உங்கள் தினசரி காலை உணவில் சில உணவுகளை சேர்த்து சாப்பிட்டு வரலாம். அது என்ன உணவுகள் என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

அவகாடோ:

இந்த அவகாடோ பழத்தில் வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு வகைகள் அதிக அளவு நிறைந்துள்ளது. இதை உங்கள் காலை உணவாக எடுத்துக் கொள்வது ஒரு சிறந்த தீர்வாகும். அவகாடோவில் நிறைந்துள்ள ஆரோக்கிய கொழுப்புகள் நம் சருமத்தை நீரேற்றம் ஆகவும் மிருதுவாகவும் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி நம் சருமத்தை சேதத்தில் இருந்து பாதுகாக்க உதவும்.

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த உணவு இந்த வால்நட். உங்கள் தினசரி காலை உணவில் வால்நட் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சருமம் நீரேற்றமாக இருக்க உதவும். மேலும் இந்த வால்நட்களில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் சூரியனால் நம் சருமத்தில் ஏற்படும் சேதம் மற்றும் முன்கூட்டிய வயதான தோற்றம் போன்றவற்றில் இருந்து பாதுகாக்க உதவும்.

பெர்ரி பழங்கள்:

ஸ்ட்ராபெரி, ராஸ்பெர்ரி, ப்ளூ பெர்ரி போன்ற பெர்ரி வகை பழங்களில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. இது நம் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவும். தினசரி காலை உணவில் தயிர் அல்லது ஓட்ஸ் போன்ற உணவுடன் சிறிதளவு பெர்ரி பழங்களை சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமான மற்றும் மென்மையான சருமத்தை பராமரிக்க முடியும்.

ஓட்ஸ்:

இந்த ஓட்ஸ் ஒரு சிறந்த காலை உணவு என்று கூறலாம். இதை சமைப்பதற்கு வெறும் ஐந்து நிமிடங்கள் இருந்தால் போதும். இது உடல் எடை குறைய விரும்புவோருக்கு சிறந்த மருந்து. அது மட்டுமல்லாமல் நம் சருமத்திற்கும் அதிக அளவு நன்மை அளிக்கிறது. நம் தினசரி காலை உணவாக ஓட்ஸ் சாப்பிட்டு வந்தால் நம் சருமம் மென்மையாகவும் ஈரப்பதமாகவும் மாறும். தினசரி காலையில் ஓட்ஸை சமைத்து அதனுடன் நட்ஸ் விதைகள் மற்றும் இலவங்க தூள் போன்றவற்றை சேர்த்து சாப்பிட்டு வந்தால் நம் சரும ஆரோக்கியம் மேம்படும்.

முட்டை:

நம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் இந்த முட்டையில் நிறைந்துள்ளது. இது உங்கள் சருமத்திற்கு அதிக அளவு நன்மை அளிக்க உதவுகிறது. இந்த முட்டையில் புரதச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால் நமது தோல் மேல் உருவாக்கம் மற்றும் ஆரோக்கியமான தோல் செல்களை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. மேலும் இந்த முட்டையில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

கீரை:

keerai

நம் உடலுக்கு ஏராளமான நன்மைகளை அளிக்கிறது இந்த கீரை. இதில் உள்ள வைட்டமின் ஏ வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் நம் சருமத்திற்கு தேவையான வைட்டமின் மற்றும் தாதுக்களை அளிக்கிறது. இதுபோன்ற ஊட்டச்சத்துக்கள் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் நம் சருமம் புற ஊதா சேதத்தில் இருந்து பாதுகாக்கப்படுகிறது. தினசரி காலை உணவாக கீரை சாப்பிட்டு வந்தால் நம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி பளபளப்பான சருமத்தை பெற முடியும்.

கிரீன் டீ:

இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலரும் டீ காபி குடிப்பதை விட கிரீன் டீ குடிப்பதை பழக்கமாக கொண்டுள்ளோம். இது ஒரு உணவாக இல்லாவிட்டாலும் பளபளப்பான சருமத்திற்கு கிரீன் டீயை உங்கள் தினசரி காலை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இந்த கிரீன் டீயில் ஆன்ட்டிஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளதால் அழர்ச்சி எதிர்ப்பு மற்றும் வயதான எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் தினமும் காலை காபி டீ குடிப்பதற்கு பதிலாக ஒரு கப் கிரீன் டீ குடித்து வரலாம்.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP