பற்கள் மற்றும் ஈறுகளில் பிரச்சனையா? இந்த உணவுகளைக் கட்டாயம் சாப்பிடுங்க

பற்களை ஆரோக்கியமாகவும், வலுவாகவும் வைத்திருக்க மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. வீட்டில் உள்ள உணவுகளை உங்களது டயட்டில் சேர்த்துக் கொள்வது நல்லது.
image

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பற்களில் வலி ஏற்பட்டால் நிச்சயம் நம்மால் தாங்க முடியாது. ஒரிரு நாட்கள் வலியைப் பொறுத்துக் கொள்ளலாம். அதுவே தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று விடுவோம். இனிப்பு சத்து நிறைந்த உணவுகள் சாப்பிடுவதாலும் முறையாக பற்களைக் கவனிக்காவிடிலும் பற்களில் பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இதைத் தவிர்க்க வேண்டும் என்றால், ஆரோக்கியமான உணவுகளைக் கட்டாயம் உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவற்றில் சில உங்களுக்காக.

பற்களை வலுவாக்கும் உணவுகளின் லிஸ்ட்:

வால்நட்ஸ்:

பற்களின் ஆரோக்கியத்துடன் வைத்திருக்க வால்நட்ஸ் சாப்பிடுவது நல்லது. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் பற்களை எப்போதும் வலுவாக்குகிறது.

கீரைகள்:

கீரைகள் சாப்பிடும் போது பற்களில் கரைகள் ஏற்படும் என பல நேரங்களில் சாப்பிடுவதற்கே அச்சம் கொள்வோம். ஆனால் கீரைகளைத் தொடர்ச்சியாக உணவு முறையில் சேர்த்துக் கொள்ளும் போது இதில் உள்ள கால்சியம், போலேட், வைட்டமின்கள் ஏ,சி, கே போன்ற முக்கிய வைட்டமின்கள் பற்களின் ஆரோக்கியத்திற்குப் பேருதவியாக உள்ளது.

மேலும் படிக்க:உடல் எடையைக் குறைக்க முடியல என்ற புலம்பல் வேண்டாம்; இதை மட்டும் ட்ரை பண்ணுங்க!

கிரீன் டீ:

உணவு முறையில் கிரீன் டீயை சேர்த்துக் கொள்ளலாம். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் பற்களில் ஏற்படக்கூடிய பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்கிறது.

healthy food

தயிர்:

தயிரில் உள்ள புரோபயோட்டிகள் பற்களில் வளரக்கூடிய பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. இதில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி 12, பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் பற்களின் வலிமையை அதிகரித்து பற் சிதைவிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

கேரட்:

கண்களில் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல உடல் மற்றும் பற்களைப் பாதுகாக்க வேண்டும் என்றாலும் கேரட்டை உணவு முறையில் சேர்த்துக் கொள்ளலாம். ஆம் இதில் உள்ள நார்ச்சத்துக்கள் பற்களில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் பாக்டீரியாக்களை அழிப்பதோடு வாய்துர்நாற்றத்தைப் போக்க உதவுகிறது. இதில் உள்ள பொட்டாசியம், வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் பற்களை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

மேலும் படிக்க:வெற்றிலையில் உள்ள 6 அற்புத நன்மைகளின் பட்டியல் உங்களுக்காக.

ப்ரோக்கோலி:

ப்ரோக்கோலியில் உள்ள வைட்டமின் கே, கால்சியம், நார்ச்சத்துக்கள் உள்ளதால் இதை பச்சையாகவோ? அல்லது ஆவியில் வேகவைத்தோ? சாப்பிடும் போது பற்களை ஆரோக்கியத்துடன் வைத்திருக்கிறது.

குடை மிளகாய்:

குடைமிளகாயில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்கள் பற்களின் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்க உதவுகிறது.

மேலும் படிக்க:உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்க உதவும் உணவுகளின் லிஸ்ட்

ஸ்ட்ராபெர்ரி:

ஸ்ட்ராபெர்ரியில் உள்ள வைட்டமின் சி, கால்சியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் பற்களை வெண்மையாகவும், பற்களில் ஏற்படக்கூடிய வலியைக் குறைக்க உதவுகிறது. இதோடு மட்டுமின்றி காலை மற்றும் இரவு என இருவேளைகளில் பற்களைத் துலக்க வேண்டும். அதிக இனிப்பு உள்ள பொருட்கள் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP