வளர்ந்து வரும் நாகரிகத்திற்கு ஏற்ப எப்போது நம்முடைய பழக்க வழக்கங்களை மாற்ற நினைக்கிறீர்களோ? அப்பொழுதிருந்தே காசு கொடுத்து உடல் நல பிரச்சனைகளை வாங்கிக் கொள்கிறீர்கள் என அர்த்தம். ஆம் ஆரோக்கியமற்ற உணவுகள், ஜங்க் புட்ஸ்கள், எண்ணெய் பலகாரங்கள் போன்றவற்றை அதிகளவில் சாப்பிடுவார்கள். சில நாட்களில் சாப்பிடுவதால் பிரச்சனைகள் பல ஏற்படாது. அதுவே தினமும் அல்லது வாரத்திற்கு ஒருமுறையாவது சாப்பிட வேண்டும் என்று நினைப்பது தவறான செயல். அதிலும் நேரம் தவறி சாப்பிடுவதாலும் உடல் நலத்தில் பல்வேறு பாதிப்புகளைக் கட்டாயம் சந்திக்க நேரிடும்.
குறிப்பாக இன்றைக்கு இளம் வயதில் இதய நோய் பாதிப்பு மற்றும் சர்க்கரை நோய் பாதிப்பு போன்றவற்றை சந்திக்க நேரிடுகிறது. இவற்றைத் தடுப்பதற்கும், கட்டுக்குள் வைத்திருப்பதற்கும் உணவு முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வருவார்கள். குறிப்பாக பழச்சாறுகள் அதிகம் சாப்பிடுவார்கள். பழச்சாறுகள் குடிப்பதை விட முழு பழங்களைச் சாப்பிடும் போது, வயிறு நிரம்பியதாக உணரவும், இதய நோய் மற்றும் வகை 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும். அப்படி என்னென்ன? பழங்களைச் சாப்பிடலாம்? என்பது குறித்த தகவல்கள் இங்கே.
மேலும் படிக்க: தினமும் 2 பேரிச்சம்பழம் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா? ஆரோக்கிய நன்மைகள் இதோ
மேலும் படிக்க: இரவு உணவை லேட்டாக சாப்பிட்டால் ஆபத்து; 5 முக்கிய காரணங்கள் இதோ
இவ்வாறு முழு பழங்களைச் சாப்பிடுவது உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வை வழங்குவதோடு தேவையில்லாத ஸ்நாக்ஸ்கள் சாப்பிடுவதைத் தடுக்க உதவக்கூடும்.
பழச்சாற்றில் அதிகளவு சர்க்கரை மற்றும் குறைந்த நார்ச்சத்துக்கள் உள்ளதால், இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கவும் உங்கள் பசியை அதிகரிக்கவும் செய்யும். உடலுக்கு நன்மை அளிக்கும் பைட்டோ கெமிக்கல்களை நீக்குகிறது. விரைவாக செரிமானம் ஆகும் என்பதால் இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவுகளில் அதிக வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்தும்.
Image source - Freep
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com