பாமாயில் சதைப்பற்றுள்ள பனம் பழத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு வகை எண்ணெயாகும். சுத்திகரிக்கப்படாத மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் என கடைகளில் 2 முக்கிய வகையான பாமாயில்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சுத்திகரிக்கப்படாத பாமாயிலில் இயற்கை நிறம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கும். மறுபுறம் பாமாயிலை சுத்திகரிக்கும் பொழுது அதில் உள்ள பல நல்ல ஊட்டச்சத்துக்கள் அழிந்து விடுகின்றன. சாலையோர கடை வீதியில் விற்கப்படும் வடை, பஜ்ஜியில் தொடங்கி நம் வீட்டு சமயலையரை வரை நம்மில் பலரும் சமையலுக்கு பாமாயிலை பயன்படுத்துகிறோம்.
சமையலை தவிர, பிரட் சாக்லேட் குக்கீஸ் போன்ற ஒரு சில பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும் வெண்ணெய்க்கு பதிலாக பாமாயில் பயன்படுத்தப்படுகிறது. சமீபத்திய ஆய்வின்படி, பாமாயில் வெண்ணெயை விட ஆரோக்கியமானது என்று தெரியவந்துள்ளது. இருப்பினும் பாமாயிலில் நிறைவுற்ற கொழுப்புகள் அதிகம் உள்ளதால், பாமாயிலை கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை அடிக்கடி சாப்பிடும் பொழுது உடலில் கெட்ட கொழுப்பின் அளவுகள் அதிகரிக்கும். இதனால் இதய நோய் வருவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: தினமும் காலையில் வெந்நீர் குடிப்பதால் உடலில் ஏற்படும் அதிசய மாற்றங்கள்!
பாமாயிலில் நிறைவுற்ற மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகளின் கலவைகள் உள்ளன. கூடுதலாக, இதில் வைட்டமின்கள், தாதுக்கள், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் A, E போன்ற நன்மை தரும் ஊட்டச்சத்துக்களும் காணப்படுகின்றன. இவை இதயம் மற்றும் மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
பாமாயில் 50% நிறைவுற்ற கொழுப்பால் ஆனது, முக்கியமாக இதில் காணப்படும் பால்மிடிக் அமிலம் எனும் கொழுப்பு வகையால் இரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவுகள் அதிகரிக்கலாம். இது இருதய நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. மேலும், அனைத்து எண்ணெய் வகைகளை போலவே, பாமாயிலிலும் அதிக அளவு கலோரிகள் உள்ளதால் இதனை அளவோடு பயன்படுத்தினால் பாதிப்புகளை தடுக்கலாம்.
பாமாயில் அதிக வெப்பத்தை தாங்கும் திறன் கொண்டது. இது சமையலுக்கு ஏற்றதாக இருந்தாலும், இதை அளவோடு பயன்படுத்துவதே சிறந்தது. பாமாயில் பயன்படுத்துவது நல்லதா, கெட்டதா என்பதை பயன்படுத்தும் அளவு மற்றும் சமைக்கப்படும் உணவைப் பொறுத்தே தீர்மானிக்க முடியும். ஆனால் இதை அதிகப்படியாக பயன்படுத்துவதால் கொலஸ்ட்ரால் அல்லது கெட்ட கொழுப்புகளின் அளவுகள் அதிகரிக்க கூடும். இதய நோய்களின் அபாயத்தை குறைக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் பாமாயிலை சரியான அளவுகளில் பயன்படுத்தவும்.
இந்த பதிவும் உதவலாம்: ஒரே மாதத்தில் 3 கிலோ எடையை குறைக்க தேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்துங்க!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik & google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com