உலகில் பல அடிப்படை கேள்விகள் இன்றும் விடை காணாத நிலையில் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் "முட்டை சைவமா அசைவமா? " என்ற கேள்வி. முட்டையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருந்தபோதிலும், இது எந்த வகை உணவு என்பது குறித்து மக்களிடையே இன்றும் குழப்பம் நிலவுகிறது. சைவ உணவு விரும்பிகள் மற்றும் அசைவ உணவு உண்போர் இருவரும் தனி தனியாக அவர்களது வாதங்களை முன்வைக்கின்றனர். ஆனாலும் முட்டை சைவமாக அசைவமா என்று பதில் கிடைக்கவில்லை. அந்த வரிசையில் முட்டை சைவமா அசைவமா என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
இந்த கருவுற்ற வகை முட்டையில் தான் உயிர் உண்டு. கோழிகள் இவற்றை அடை காத்து குஞ்சாக்குகின்றன. நாம் வீட்டில் சமைத்து சாப்பிடும் முட்டைகள் இந்த வகையில் சேராது.
இந்த கருவுறா வகை முட்டையில் உயிர் இல்லை. கடைகளில் விற்கப்படும் முட்டைகள் இந்த வகையைச் சேர்ந்தவை. இவற்றைத்தான் நாம் உண்கிறோம்.
இந்த நிலையில் 2004 ஆம் ஆண்டில் இந்திய உச்சநீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியது. கருவுறா முட்டைகள் சைவ உணவு தான் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த முடிவு ஆழ்ந்த ஆராய்ச்சிக்குப் பின்னர் எடுக்கப்பட்டது. முட்டையின் வெள்ளைப் பகுதியில் எந்த விலங்கு செல்களும் இல்லை என்பதே இதற்குக் காரணம்.
முட்டையின் மஞ்சள் கரு கொழுப்பு மற்றும் புரதங்கள் நிறைந்தது. இதில் கியூம செல்கள் இருக்கக்கூடும் என்பதால், இது அசைவ வகையில் சேர்க்கப்படுகிறது. எனவே, வெள்ளைப் பகுதி மட்டும் சைவம், மஞ்சள் கரு அசைவம் என்றும் சிலர் கூறுவது உண்டு.
முட்டை சைவமா அசைவமா என்பதை விட அதன் ஆரோக்கியப் பயன்கள் தான் நம் உடலுக்கு முக்கியம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முட்டையை விரும்பி சாப்பிடுவார்கள். நாம் வீட்டில் சமைக்கும் காய்கறி முதல் கேக் பிஸ்கட் போன்ற பல உணவுகளில் முட்டை சேர்த்து சமைக்கிறோம். ஒரு சில சைவ உணவு சாப்பிடுபவர்கள் கூட உடல் ஆரோக்கியத்திற்காக முட்டை சாப்பிட துவங்கி விட்டனர். ஏனெனில் முட்டையில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது.
மேலும் படிக்க: வெறும் வயிற்றில் இந்த இலைகளை மென்று சாப்பிடுங்க; இனி உடல்நல பிரச்சனைகள் வராது
அந்த வரிசையில் முட்டை ஒரு சக்திவாய்ந்த ஊட்டச்சத்து மூலம். இது சைவம் அல்லது அசைவம் என்பதை விட அதன் ஆரோக்கியப் பலன்களே முக்கியம். உங்கள் உணவில் முட்டையை சேர்த்துக்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com