herzindagi
image

உடல் எடையைக் குறைக்க இந்த தோசையை தொடர்ந்து சாப்பிடுங்க

ஊட்டச்சத்து நிறைந்த உடல் எடையைக் குறைக்க கூடிய உணவை தேடிகிறீர்களா ? அதற்கு ராகி தோசை சரியான தேர்வாகும். நாம் சாப்பிடும் சாதா தோசை 180 முதல் 200 கலோரிகளை கொண்டது. இந்த ராகி தோசை 100 முதல் 120 கலோரிகளை மட்டுமே கொண்டது. ராகி தோசை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பார்ப்போம்.
Editorial
Updated:- 2025-07-12, 14:42 IST

உணவுமுறை மாற்றம் செய்து உடல் எடையைக் விரும்புவோருக்கு ராகி தோசை சாப்பிடுவதை தொடர்ந்து சாப்பிட வேண்டும். அதிக நார்ச்சத்து கொண்ட ராகி பசியை கட்டுப்படுத்தி உங்களை அதிகம் சாப்பிட விடாமல் தடுத்திடும். சட்டென தயாரிக்க கூடிய ராகி தோசை கார்போஹைட்ரேட் நிறைந்த சாதா தோசையை விட குறைவான கலோரி கொண்டது. ஊட்டச்சத்து குறையாமல் அதிக கலோரிகளை உட்கொள்ளாமல் எடையை குறைக்க ராகி தோசை உதவும். ராகி படவுரும், தண்ணீரும் இருந்தால் உடனடியாக ராகி தோசை தயாரித்துவிடலாம்.

how ragi dosa helps in weight loss

ராகி தோசையின் ஊட்டச்சத்துகள்

  • ராகி தோசை நார்ச்சத்து நிறைந்தது. நம் வயிற்றுக்கு நிறைவான உணர்வை தந்து செரிமானத்திற்கும் உதவும். எடையைக் குறைக்க ராகி தோசை சாப்பிட ஆரம்பிக்கவும்.
  • ராகி தாவர வகை புரதச்சத்து கொண்டது. இது உடலில் திசுக்களை சரி செய்து தசைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
  • .
  • ராகியில் அதிக கால்சியம் இருப்பதால் ராகி தோசை சாப்பிடுவது எலும்புகளுக்கும், பற்களுக்கும் நல்லது.
  • ராகி குறைவான கிளைசெமிக் குறியீடு கொண்டதால் இது உடலில் இரத்த சர்க்கரை அளவுகளை தடாலடியாக உயர்த்தாது. சர்க்கரை நோயாளிகளும் இதை தாராளமாக சாப்பிடலாம்.
  • இரும்புச்சத்து நிறைந்த ராகி தோசையை சாப்பிடுவதால் இரத்த சோகை பிரச்னையில் இருந்து விடுபடலாம்.

எடை இழப்புக்கு ராகி தோசை சாப்பிடுங்க

உடல் எடையை குறைத்திட ராகி தோசையை காலை அல்லது மதிய நேரத்தில் சாப்பிடுங்கள். காலை நேரத்தில் ராகி தோசை சாப்பிடுவது உங்களை நாள் முழுவதும் ஆற்றல் மிகுந்து உணர வைக்கும். இதன் காரணமாக ஆரோக்கியமற்ற தின்பண்டங்களை சாப்பிட மாட்டீர்கள். குறைவான கலோரி கொண்ட உணவுமுறையை பின்பற்றுவோர் தவறாமல் ராகி தோசையை சேர்த்துக் கொள்ளலாம்.

ராகியில் கொலஸ்ட்ரால் சுத்தமாக கிடையாது. எனவே இதய நோய் உடையவர்கள் இதை தவறாமல் சாப்பிடலாம். இது உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அளவுகளை அதிகரித்து கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்திடும். ராகி இரத்த நாளங்களில் கொலஸ்ட்ரால் சேருவதை குறைக்கும். ராகியில் குளூட்டன் என்ற ஒரு வகை புரதம் இல்லாததால் வயிறு உப்புசம், குடல் சார்ந்த பிரச்னைகளை அடிக்கடி எதிர்கொள்வோர் இந்த குளூட்டன் இல்லாத தோசையை சாப்பிடலாம்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com