healthy fishes : உலகளவில் ஆரோக்கியமான 5 மீன்கள்

ஊட்டச்சத்து நிறைந்த மீன்களை சாப்பிடுவதால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.

healthy fishes of world list
healthy fishes of world list

அசைவ உணவு பிரியர்கள் வாரத்தில் ஒரு முறையாவது மீன் சாப்பிட விரும்புவார்கள். உலகின் ஆரோக்கியமான உணவுகளை பற்றி பேசுகையில் நிச்சயமாக மீனும் இந்த பட்டியலில் இடம் பெறும். இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரதங்கள், வைட்டமின் D மற்றும் B2 போன்ற பல வகையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும் மீன்கள் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, துத்தநாகம், அயோடின், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவற்றின் நல்ல ஆதாரம் ஆக உள்ளது. இத்தகைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மீன்களை உங்கள் உணவில் சேர்த்து கொள்வது நல்லது.

மீன்களில் பல வகைகள் உள்ளன. இந்நிலையில் எந்த மீனை சாப்பிடுவது ஆரோக்கியமானது என்ற குழப்பம் உங்களுக்கு வரலாம். இந்த பதிவில் ஆரோக்கியமான 5 மீன்கள் பற்றியும், அவற்றை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இந்த தகவல்களும் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

அல்பாகோர் சூரை மீன்

healthy fishes

பல சூரை மீன் வகைகளில் அதிகப்படியான பாதரசம் இருக்கலாம். ஆனால் அல்பாகோர் எனும் வெள்ளை சூரை மீனில் ஒமேகா-3 மட்டும் மிக அதிக அளவில் உள்ளது. இந்த மீன்கள் மிகக் குறைந்த பாதரசம் மற்றும் மிகக் குறைந்த மாசு மதிப்பீடுகளைக் கொண்டுள்ளன. இத்தகைய சூழ்லில் வெள்ளை நிற அல்பாகோர் சூரை மீனை உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது.

காலா மீன்

healthy fishes

இதில் புரதம் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. நம் உடலால் ஒமேகா -3 கொழுப்பு அமிலத்தை தானே உற்பத்தி செய்ய முடியாது, உணவின் மூலமாக தான் நாம் இதை பெற முடியும். இந்நிலையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த ஆதாரமான காலா மீனை சாப்பிடுவது அந்த தேவையை பூர்த்தி செய்கிறது.

கானாங்கெளுத்தி

healthy fishes

ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம் மற்றும் செலினியம் கானாங்கெளுத்தி மீனில் காணப்படுகிறது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கும், தைராய்டு செயல்பாட்டிற்கு மிகவும் நல்லது. எப்போதும் ஃப்ரெஷ் ஆக கிடைக்கக்கூடிய மீன்களை தேர்வு செய்து வாங்குங்கள். நெருப்பில் வாட்டிய கானாங்கெளுத்தி மீனில் அதிக நைட்ரேட் இருக்கும், இவற்றை அதிகமாக உட்கொள்வதால் உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படலாம். எனவே பேக் செய்யப்பட்ட மற்றும் நெருப்பில் வாட்டிய மீன்களை தவிர்ப்பது நல்லது.

பண்ணா மீன்

இது ஆரோக்கியமான வெள்ளை மீன்களில் ஒன்றாகும். இதில் அதிக அளவு புரதமும், குறைந்த அளவு கொழுப்பும் உள்ளது. இது வைட்டமின் B12 இன் நல்ல ஆதாரமாகும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. மேலும் நரம்பு மண்டலத்தை மேம்படுத்தவும், மன அழுத்தத்தை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. ஃப்ரெஷ் ஆன பண்ணா மீன் வாங்கி சுவைத்து, அதன் ஆரோக்கிய நன்மைகளையும் பெற்றிடுங்கள்.

இந்த பதிவும் உதவலாம்: பாகற்காயின் பக்க விளைவுகள்

ட்ரௌட் மீன்

இதில் உடலுக்கு சத்தியாவசியமான ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.

இது சுத்தமான ஆறுகள் மற்றும் கடலோரப் பகுதிகளிலும் காணப்படுகிறது. இதுவும் பண்ணா மீனை போலவே வைட்டமின் B12 இன் நல்ல ஆதாரம் ஆகும். ஆனால் இது கூடுதலாக வைட்டமின் D சத்துக்களையும் வழங்குகிறது. சமைக்கப்பட்ட 150 கிராம் ட்ரௌட் மீனில் இருந்து ஒரு நாளைக்கு தேவையான வைட்டமின் D யை பெறலாம்.

healthy fishes

ஆரோக்கியமான மீன்கள் குறித்த இந்த தகவல்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறோம். இந்த மீன்களை ஃபிரஷ்ஷாக வாங்கி சமைத்து அதன் ஆரோக்கிய நன்மைகளை பெற்றிடுங்கள்.

இந்த பதிவும் உதவலாம்:கோபம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் 5 யோகாசனங்கள்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP