herzindagi
sesame health benefits

Sesame Oil Benefits: உடல் ஆரோக்கியத்தை காக்கும் நல்லெண்ணெய்!

பெண்கள் ஆரோக்கியத்தை காக்கும் நல்லெண்ணெய் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
Editorial
Updated:- 2024-03-22, 12:20 IST

உலகின் வெப்ப மண்டல நாடுகளில் அதிகம் விளைவிக்கப்படும் எள்ளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தான் நல்லெண்ணெய் என்று கூறப்படுகிறது. பெண்கள் பலரும் அன்றாட உணவு தயாரிப்பில் நல்லெண்ணெய் பயன்படுத்துகின்றனர். இதற்க்கு முக்கிய காரணம்  நல்லெண்ணெய் உடல் உஷ்ணத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த நல்லெண்ணெய் பயன்படுத்தி செய்யப்படும் உணவுகளை சாப்பிட்டால் நம் உடலுக்கு கிடைக்கும் மருத்துவ ரீதியான நன்மைகளை இங்கே பார்க்கலாம்.

தோல் நோய்கள் குணமாகும்: 

உங்கள் வெளிப்புற சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் எண்ணெய்களில் ஒன்று இந்த நல்லெண்ணெய். இந்த எண்ணெயில் துத்தநாகம் நிறைந்துள்ளது. இந்த துத்தநாகம் நமது சருமத்தை ஈரப்பதத்தை தக்கவைத்து மென்மையாக்க உதவுகிறது. தோல் வயதானதால் ஏற்படும் சுருக்கங்கள், தழும்புகள் போன்றவற்றை நீக்க நல்லெண்ணெய் பெரிதும் உதவுகிறது. கோடையில், உங்கள் சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க உங்கள் கைகளின் மேல் பகுதியில் சிறிதளவு நல்லெண்ணெயை தடவவும். இது வியர்வை மற்றும் பிற பாக்டீரியாக்களால் ஏற்படும் தோல் நோய்களையும் தடுக்கிறது.

மேலும் படிக்க: உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் மாதுளை ஜூஸ்!

இதய ஆரோக்கியம்:

உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால் தினசரி உணவில் நல்லெண்ணெய் சேர்த்து கொள்வது அவசியம். நல்லெண்ணெயில் செசாமால் மற்றும் செசமின் உட்பட L160 நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. நல்லெண்ணெய் கலந்த உணவுகளை தொடர்ந்து உட்கொள்வதால் இதயம் மற்றும் இதயத்துடன் தொடர்புடைய தசைகள், நரம்புகளில் கெட்ட கொழுப்புகள் சேர்வதை தடுக்க உதவும். இதனால் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் குறைகிறது.

sesame oil

உடல் உற்சாகமாக இருக்க உதவும்:

சரியான வேகத்தில் உடலின் அனைத்து பாகங்களுக்கும் ரத்தம் சீராக செல்லும் போதுதான் நமது மனமும் உடலும் சுறுசுறுப்பாக இயங்கும்.  நல்லெண்ணெயில் தாமிரம் மற்றும் துத்தநாகம் அதிகம் நிறைந்துள்ளது. நமது உடலில் இரத்த அணுக்கள் உற்பத்திக்கு தாமிரம் மிகவும் உதவுகிறது. மேலும் இரத்த ஓட்டம் செப்பு உள்ளடக்கத்தால் கட்டுப்படுத்தப்படுவதன் மூலம் வாயு பிரச்சனைகள் நீங்கும். இதனால் மனமும் உடலும் சுறுசுறுப்பாக இருக்கும்.

புற்றுநோய் வராமல் தடுக்கும்:

நல்லெண்ணெய் புற்றுநோய் வராமல் தடுக்க பெரிதும் உதவுகிறது.  நல்லெண்ணெயில் போலேட் எனப்படும் அமிலம் நிறைந்துள்ளன. அதே போல இந்த  நல்லெண்ணெயில் தேவையான அளவு மக்னீசியம் உள்ளது. இந்த இரண்டு ஊட்டச்சத்துக்களும் பெருங்குடல் மற்றும் கல்லீரல் புற்றுநோயைத் தடுக்க உதவுகின்றன. அதே போல இதில் கால்சியம் அதிகம் உள்ளதால் வயிற்றுப் புற்றுநோய் மற்றும் பிற உறுப்புகளின் புற்றுநோய்களைத் தடுக்கிறது.

ஆர்த்ரைடிஸ் நோய் குணமாகும்:

உடலில் சில அத்தியாவசிய சத்துக்கள் குறையும் போது எலும்புகளின் மூட்டுக்களில் வலி மற்றும் வீக்கம் அதிகம் ஏற்படலாம். நல்லெண்ணெயில் இந்த செம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. ஆர்தரைட்டிஸ் எனப்படும் மூட்டுவலி நோய்களால் அவதிப்படுபவர்கள் நல்லெண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் நாளாடைவில் குணமாகும்.

Image source: google

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com