இந்த பருவ காலத்தில் நல்ல ஃபிரெஷ் ஆன முள்ளங்கிகளை மார்க்கெட்டில் காணலாம். சாம்பார் முதல் பரோட்டா வரை முள்ளங்கி வைத்து ஏராளமான சுவையான ரெசிபிகளை செய்ய முடியும். தனித்துவமான சுவை மற்றும் மணம் நிறைந்த இந்த காய்கறியில் ஏராளமான மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளன.
முள்ளங்கியில் நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற உடலுக்கு அத்தியாவசியமான பல ஊட்டச்சத்துக்கள்காணப்படுகின்றன. இதை உங்கள் உணவில் சேர்த்து வர உடல் எடையை குறைப்பதும் முதல் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது வரை ஏராளமான நன்மைகளை பெற முடியும். முள்ளங்கி தரும் எட்டு ஆரோக்கிய நன்மைகளை ஒன்றாக தெரிந்து கொள்வோம்…
இந்த பதிவும் உதவலாம்: ஊற வைத்த வெண்டைக்காய் தண்ணீர், செய்முறை மற்றும் ஆரோக்கிய நன்மைகள்!
முள்ளங்கியில் அதிக அளவுள்ள வைட்டமின் C நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. இதை உணவில் சேர்த்து வர சளி இருமல் போன்ற பல உடல்நல பிரச்சனைகளை தடுக்கலாம். இது ஃப்ரீ ரேடிக்கல்களின் சேதத்திலிருந்து உடலை பாதுகாக்கிறது மற்றும் இளம் வயதிலேயே ஏற்படும் வயது முதிர்வையும் தடுக்கிறது.
முள்ளங்கியில் நிறைந்துள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்திற்கு மிகவும் நல்லது. இது செரிமான செயல்முறையை மேம்படுத்தவும் மல இயக்கத்தை எளிதாக்கவும் உதவுகிறது. இதன் மூலம் உடல் பருமன், வாயு, குமட்டல் போன்ற பல பிரச்சனைகளை தடுக்கலாம்.
முள்ளங்கியில் புற்றுநோயை எதிர்க்கும் பண்புகள் உள்ளன. இதில் உள்ள சேர்மங்கள் புற்றுநோய் மற்றும் கட்டிகளின் வளர்ச்சியை தடுக்கின்றன. இதை தினசரி உணவில் சேர்த்து வர ஒரு சில புற்று நோய்கள் வருவதற்கான வாய்ப்பை குறைக்கலாம்.
முள்ளங்கியில் நிறைந்துள்ள நீர்ச்சத்து உங்களை நாள் முழுவதும் நீரேற்றமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதை சாலட் வடிவிலும் எடுத்துக் கொள்ளலாம். முள்ளங்கியை சாப்பிடும் பொழுது நீங்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்படலாம்.
வயிறு மற்றும் கல்லீரலின் ஆரோக்கியத்தை பராமரிக்க உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற வேண்டும். இதற்கு முள்ளங்கி போன்ற காய்கறிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது இரத்தத்தில் ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரித்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் முள்ளங்கியை தங்கள் தினசரி உணவு சேர்த்துக் கொள்ளலாம் இது உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும். இதன் மூலம் தேவையற்ற கலோரி உட்கொள்ளலை கட்டுப்படுத்தலாம்.
முள்ளங்கியில் உள்ள வைட்டமின் C போலிக், ஆசிட் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற சத்துக்கள் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை தருகின்றன. இது இதய நோய்களின் அபாயத்தை பெருமளவு குறைக்கிறது.
முள்ளங்கியை தொடர்ந்து சாப்பிட்டு வர உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இதில் நிறைந்துள்ள பொட்டாசியம் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இது உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் நல்லது. குளிர்ச்சியான விளைவை கொண்டு முள்ளங்கியை சாப்பிட்டு வர உடல் சூட்டையும் குறைக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: இந்த 1 உணவு போதும், குறைந்த செலவில் இதய நோய்களை தடுக்கலாம்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com