herzindagi
heart healthy snacks

Heart Healthy snacks : இதய ஆரோக்கியத்திற்கான சிறந்த தின்பண்டங்கள்!

இதய ஆரோக்கியத்திற்கு தின்பண்டங்கள் சாப்பிடலாமா ? ஆம் சாப்பிடலாம். முக்கிய திண்டபங்களின் பட்டியல் இங்கே…
Editorial
Updated:- 2024-02-15, 19:18 IST

இதய ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தும் நமக்கு தின்பண்டங்கள் சாப்பிடலாமா என சந்தேகம் இருக்கும். இருதய அமைப்பை ஆதரிக்கும்  ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கியமான தின்பண்டங்களை சாப்பிடுவதன் மூலம் அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்த்து இதய ஆரோக்கியத்தை நிர்வகிக்கலாம். இந்தக் கட்டுரையில் இதயத்திற்கு ஆரோக்கியமான தின்பண்டங்களின் பட்டியலை பகிர்ந்துள்ளோம்.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தின்பண்டங்கள்

பெர்ரி

ஊட்டச்சத்து நிறைந்த ராஸ்பெர்ரி, ப்ளாக்பெர்ரி, ப்ளூபெர்ரி மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஆகியவை இதய ஆரோக்கியத்திற்கு அவசியம். ஆன்டிஆக்ஸிடன்ட்களான ஆந்தோசயினின்கள் பெர்ரிகளில் அதிகம் உள்ளன. ஆனால் அதிக ஆந்தோசயினின்களை உட்கொள்வது மாரடைப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றின் ஆபத்தை அதிகரிக்கலாம்.

வால்நட்ஸ்

மாங்கனீசு, தாமிரம் மற்றும் மெக்னீசியம் போன்ற நார்ச்சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் வால்நட்ஸில் அதிகம் உள்ளன. ஒவ்வொரு நாளும் ஓரிரு வால்நட்ஸ் சாப்பிடுவது இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும்.

பீனட் பட்டர் & ஆப்பிள்

பீனட் பட்டரில் காணப்படும் கொழுப்பு அமிலங்களின் கலவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. சமச்சீர் உணவின் ஒரு பகுதியாக பீனட் பட்டர் "கெட்ட" கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். ஆப்பிள்களில் தாவர ஸ்டெரால்கள், வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன.

மேலும் படிங்க சப்ஜா விதைகள் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா ?

உப்புக் கடலை

உப்புக்கடலை நார்ச்சத்து, பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம், செலினியம் மற்றும் பி வைட்டமின்கள் ஏராளமாக உள்ளன. மேலும் 100 கிராமுக்கு 24 மில்லிகிராம் உப்பு மட்டுமே உள்ளது.

best snacks of heart health roasted channa

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்டில் அதிகம் உள்ள ஃபிளாவனாய்டுகள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மிதமான அளவில் சாக்லேட் சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு, பக்கவாதம் மற்றும் இதய நோயின் அபாயத்தை குறைக்கலாம். சாக்லேட்டில் கணிசமான அளவு கலோரிகள் மற்றும் சர்க்கரை இருக்கலாம்.

பாப்கார்ன்

சோளம் ஒரு ஆரோக்கியமான முழு தானியமாகும். இது  கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்டுள்ளது. 100 கிராம் சோளத்திற்கு 15 மில்லிகிராம் சோடியம் மட்டுமே உள்ளது. இது மிகக் குறைந்த சோடியம் உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது. உப்பு உட்கொள்ளலைக் கட்டுப்படுத்த வேண்டியவர்களுக்கு பாப்கார்ன் குறைந்த சோடியம் தின்பண்டமாக இருக்கலாம். உப்பு குறைவான பாப்கார்ன் பிராண்டுகளும் கடைகளில் கிடைக்கின்றன.

healthy snack ideas popcorn

மேலும் படிங்க சமையலில் ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்த வேண்டிய அவசியம்

இந்த தின்பண்டங்கள் ஆரோக்கியமானதாக இருந்தாலும் அவற்றை அதிகமாக உட்கொள்வது இன்னும் அதிக கலோரி உட்கொள்ளலுக்கு வழிவகுக்கும். இது இதய ஆரோக்கியம் மற்றும் எடை நிர்வாகத்தை பாதிக்கலாம். இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் சர்க்கரை சேர்ப்பை தவிர்க்க இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் தின்பண்டங்களை தேர்ந்தெடுத்து சாப்பிடவும்.

இதன் உட்கொள்ளல் அளவு குறித்து உணவியல் நிபுணரிடம் ஆலோசனை பெறுங்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான கட்டுரகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com