குயினோவா, பெரும்பாலும் ஒரு சூப்பர்ஃபுட் என்று கூறப்படுகிறது. அதன் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் காரணமாக சமீபத்திய ஆண்டுகளில் இந்த குயினோவா பிரபலமடைந்துள்ளது. குயினோவா ஒரு சத்தான தானியமாக இருப்பது மட்டுமல்லாமல், உடல் எடை குறைக்க விரும்புவோருக்கு இது பல நன்மைகளையும் வழங்குகிறது. அந்த வரிசையில் குயினோவா எடை இழப்புக்கு எவ்வாறு உதவும் மற்றும் அதை சாப்பிடுவது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
குயினோவா என்பது அதிகளவு புரதம் நிறைந்துள்ள தானியமாகும். இது புரதம், நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும். உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்கள் இந்த குயினோவாவை அரிசிக்கு பதிலாக சமைத்து சாப்பிடலாம். இது நம் உடலால் எளிதில் செரிமானம் செய்யப்படும் ஒரு சூப்பர் உணவு.
உடல் எடை இழப்புக்கான குயினோவாவின் முக்கிய நன்மைகளில் ஒன்று அதன் அதிக புரத உள்ளடக்கம் ஆகும். புரதம் உங்கள் வயிற்றை முழுமை மற்றும் திருப்தியின் உணர்வுகளை அதிகரிக்க உதவுகிறது, இதனால் நீங்கள் நாள் முழுவதும் அதிகமாக சாப்பிடுவது குறைகிறது. அதே போல குயினோவாவில் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாக இருப்பதால், கலோரி உட்கொள்ளலைக் குறைத்து எடை குறைக்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.
குயினோவாவில் அதிக அளவு நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. இது உணவு செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. நார்ச்சத்து வயிற்றில் முழுமையின் உணர்வுகளை ஊக்குவிப்பதாகவும், அதிகப்படியான உணவைத் தடுப்பதாகவும் அறியப்படுகிறது. இது காலப்போக்கில் உடல் எடை இழப்புக்கு வழிவகுக்கிறது. உங்கள் உணவில் குயினோவாவைச் சேர்ப்பதன் மூலம், உங்கள் நார்ச்சத்து உட்கொள்ளலை அதிகரிக்கலாம். இதனால் எளிதாக உடல் எடை குறையும்.
புரதம் மற்றும் நார்ச்சத்து தவிர குயினோவாவில் மெக்னீசியம், இரும்பு மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிரம்பியுள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் ஆதரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடல் எடை இழப்பு பயணத்தின் போது உங்கள் உடல் உகந்த முறையில் செயல்படுவதை உறுதிசெய்கின்றன.
ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதியாக குயினோவாவை உங்கள் உணவில் சேர்த்து சாப்பிட பல வழிகள் உள்ளன. நீங்கள் இதை சாலடுகள், சூப்கள் மற்றும் காய்கறி பொரியல் ஆகியவற்றில் சேர்த்து சாப்பிடலாம். அதே போல சில உணவுகளில் அரிசி அல்லது பாஸ்தாவை மாற்றி குயோனோவாவை சேர்த்து ஒரு ஆரோக்கியமான உணவாக சாப்பிடலாம். இது உங்களை வயிறு திருப்தியாகவும் நாள் முழுக்க உற்சாகமாகவும் உணர வைக்கும்.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com