வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுங்க! எக்கச்சக்க ஆரோக்கிய நன்மைகள் உண்டு

வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவும். தினமும் இரண்டு முதல் நான்கு பூண்டு சாப்பிடுங்கள். ஒரே மாதத்தில் உடலில் மாற்றங்களை உணர்வீர்கள்.

garlic on empty stomach

சமையலின் போது பூண்டு அதன் வாசனை மற்றும் சுவைக்காக மட்டுமல்ல நற்குணங்களுக்காகவும் உணவு தயாரிப்புகளில் சேர்க்கப்படுகிறது. உணவில் இருக்கும் பூண்டை பெரும்பாலனோர் ஒதுக்கி விடுகின்றனர். ஆனால் பூண்டு ஏராளமான மருத்துவ குணங்களையும் ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. பூண்டை காலையில் வெறும் வயிற்றிலும், இரவு தூங்குவதற்கு முன்பாகவும் சாப்பிடுவது மிகவும் நல்லது.

raw garlic benefits

இதய ஆரோக்கியம்

பூண்டு இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தினமும் இரண்டு பூண்டு சாப்பிடுவது இதய நோய் அபாயத்தைக் குறைக்கும்.

முகப்பரு தடுப்பு

பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடுவது உடலின் நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது. நச்சுத்தன்மையை நீக்குவதற்கு ஒரு சிறந்த மருந்து பூண்டு. பூண்டு நச்சு நீக்கியாக செயல்பட்டு உடலில் இருக்கும் நச்சுகளை இயற்கையாகவே வெளியேற்றுகிறது. உடலில் நச்சுகள் நீக்கப்படும் போது முகப்பரு தவிர்க்கப்படுகிறது. இது தூய்மையான சருமத்திற்கு உதவுகிறது.

சளி, இருமலில் இருந்து விடுதலை

பூண்டை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் சளி மற்றும் இருமலுக்கான தொற்றுகளை தடுக்க முடியும். சளி மற்றும் இருமலில் இருந்து விடுதலை பெற தினமும் இரண்டு பூண்டை உடைத்து வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். நெஞ்சு எரிச்சலையும் பூண்டு தடுக்கிறது.

மேம்படும் கண் ஆரோக்கியம்

நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளை கொண்ட பூண்டு உங்கள் கண் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. தொடர்ந்து பூண்டு சாப்பிடுவதன் மூலம் கண் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு

பூண்டில் அதிக அளவு அல்லிசின் இருக்கிறது. இது ஆபத்தான நோய்க்கிருமிகளிடம் இருந்து உடலைப் பாதுகாக்க தேவையான வெள்ளை இரத்த அணுக்களை செயல்படுத்துகிறது. காலையில் பூண்டு சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு அமைப்பு சிறப்பாக செயல்படும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அல்லிசின் போன்றவை பூண்டில் நிரம்பி இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கப்படுகிறது. சிறுநீரக தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கவும் பூண்டு உதவுகிறது.

மேலும் படிங்கதலை முதல் பாதம் வரை! அற்புதமான பலன்களை தரும் வெண்பூசணி ஜூஸ்

இரத்த சர்க்கரை அளவுகளில் கட்டுப்பாடு

பூண்டில் உள்ள அல்லிசின் உடலில் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் ஹார்மோனை உற்பத்தி செய்வதை தடுக்கும். மேலும் உடலில் இரத்த ஓட்டத்தை எளிதாக்கும்.

கொழுப்பு குறைப்பு

பூண்டு சாப்பிடுவதன் பிரதான நன்மைகளில் கொழுப்பு குறைப்பும் ஒன்று. இதை சாப்பிடுவதன் மூலம் உடலில் கெட்ட கொழுப்பு மற்றும் ஒட்டுமொத்த கொழுப்பை குறைக்கலாம். இரண்டு மாதங்களுக்கு தொடர்ந்து பூண்டு சாப்பிட்டால் உடலில் கெட்ட கொழுப்பின் அளவு பத்து விழுக்காடு வரை குறைகிறது.

சிறந்த தூக்கம்

பூண்டில் உள்ள துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் தூக்க சுழற்சிகளைக் கட்டுப்படுத்தி தூக்கத்தின் தரத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

நீண்ட காலம் வாழலாம்

பூண்டு உடல் செயல்பாடுகளை மேம்படுத்தி உங்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்கிறது. உடலில் உள்ள உறுப்புகளை சிறப்பாக செயல்பட வைப்பதன் மூலம் நீங்கள் நீண்ட நாட்கள் வாழலாம்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP