இன்றைய நவீன காலத்தில் பால் சேர்க்கப்படாத டீ, பிளாக் காபி மற்றும் கிரீன் டீ போன்ற பானங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. இவை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதால், மக்களால் அதிகம் விரும்பப்படுகின்றன. இதில், செம்பருத்தி செடியிலிருந்து எடுக்கப்படும் செம்பருத்தி பூ டீ முக்கிய பங்கு வகிக்கிறது. இது இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்துவதுடன், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. தினமும் காலையில் ஒரு கப் செம்பருத்தி டீ குடிப்பதன் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
இதைத் தயாரிக்க, முதலில் 2-3 தேக்கரண்டி உலர்ந்த செம்பருத்தி இதழ்களை 2 கப் தண்ணீரில் சேர்த்து 5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்கவும். பின்னர், இதை வடிகட்டி, சுவைக்காக தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்துக் குடிக்கலாம். உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க, தினசரி காலையில் இந்த டீயை குடிப்பது நல்லது.
செம்பருத்தி டீயில் பிளவனாய்டுகள் மற்றும் தாது உப்புகள் நிறைந்துள்ளன. இது உடலில் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உறிஞ்சப்படுவதைக் குறைக்கிறது. மேலும், இதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்கள் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டி உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன. டையூரெடிக் பண்புகள் காரணமாக, இது உடல் எடையை விரைவாகக் குறைக்க உதவுகிறது.
இந்த டீ இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. இதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்கள் மற்றும் எதிர் அழற்சிப் பண்புகள் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. மேலும், இது சிறுநீர் கழிவை அதிகரித்து, ரத்த அழுத்தத்தை நிலைப்படுத்துகிறது.
செம்பருத்தி டீயில் ஆன்டிடிப்ரஸண்ட் பண்புகள் உள்ளன, இது கவலை மற்றும் மனச்சோர்வைக் குறைக்க உதவுகிறது. இதில் உள்ள ஃபிளாவனாய்டுகள் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, பதட்டம் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கின்றன. மனச் சோர்வு ஏற்படும்போது, ஒரு கப் சூடான செம்பருத்தி டீ குடிப்பது நல்லது.
முடி உதிர்வு, பொடுகு மற்றும் முடி நரைதல் போன்ற பிரச்சனைகளுக்கு செம்பருத்தி டீ நல்ல தீர்வாகும். இதில் உள்ள வைட்டமின் ஏ, சி மற்றும் அமினோ அமிலங்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. மேலும், இது சருமத்திற்கும் பளபளப்பைத் தருகிறது.
காய்ச்சல் என்பது எல்லோருக்கும் சகஜமான உடல் பிரச்சினையாகும். இந்த தொற்று உடலை விரைவாக பலவீனப்படுத்தும். செம்பருத்தி பூவில் உள்ள மருத்துவ குணங்கள், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்குகின்றன. காய்ச்சல் மற்றும் அதிக சளி பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள், ஒரு நாளில் 2-3 முறை செம்பருத்தி டீ குடித்தால் விரைவாக குணமடையலாம்.
மேலும் படிக்க: பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் உடலுக்கு என்ன ஆகும்? இந்த நன்மைகளை தெரிஞ்சிக்கோங்க
செம்பருத்தி டீ பெண்களின் மாதவிடாய் கால பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாகும். மாதவிடாய் வலி, மூட்டுவலி போன்ற அசௌகரியங்களை குறைக்க இந்த டீ உதவுகிறது. கர்ப்ப காலத்தில் இதை சாப்பிடுவது ஹார்மோன் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. செம்பருத்தி டீ இயற்கையான மருந்தாக பல்வேறு உடல் பிரச்சினைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com