Celery Juice Benefits: காலையில் செலரி ஜூஸ் குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் இதோ!

தினசரி காலையில் செலரி ஜூஸ் குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம். 

celery juice uses

சீனாவில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு கீரை வகை இந்த செலரி. கொத்தமல்லியை நாம் தினசரி உணவில் பயன்படுத்துவதைப் போல சீன நாட்டு மக்கள் இந்த செலரியை பெரும்பாலான உணவு வகைகளில் பயன்படுத்துவார்கள். இந்த செலரியில் நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே தினசரி நீங்கள் செலரி ஜூஸ் குடித்து வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. தினசரி காலையில் வெறும் வயிற்றில் செலரி ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

செலரி ஜூஸ் செய்வது எப்படி?

செலரி இலைகளை எடுத்து நன்றாக தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது இதனை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அரைக்கவும். இதை நன்கு அரைத்தவுடன் வடிகட்டி குடித்து வரலாம். இதன் சுவை சற்று துவர்ப்பாக இருக்கும். தேவைப்பட்டால் அரை டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கொள்ளுங்கள்.

recipe r celery juice fullsi

செலரி ஜூஸ் ஆரோக்கிய நன்மைகள்:

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் புதிய தாய்மார்களுக்கு ஒரு சிறந்த பானம் இந்த செலரி ஜூஸ். இது தாய்மார்களுக்கு மட்டும் இல்லாமல் தாய்ப்பாலின் மூலம் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கவும் செலரி ஜூஸ் உதவும்.

உடல் நீரேற்றம்:

இந்த செலரி ஜூஸில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளதால் இது நம் உடலை நீரேற்றுடன் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. அதே போல பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் புதிய தாய்மார்களுக்கு தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கவும் இந்த செலரி ஜூஸ் உதவும். அதே போல கோடை காலத்தில் நம் உடல் வறட்சி அடையும் போது இந்த செலரி ஜூஸ் குடித்து வந்தால் உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ளமுடியும்.

சர்க்கரை அளவு குறையும்:

blood sugar

இந்த செலரி ஜூஸில் இயற்கை ஆகவே சர்க்கரை அளவு குறைவாக இருக்கும். இதனால் சர்க்கரை நோயாளிகளும் நீரிழிவு நோயாளிகளும் தாராளமாக இந்த செலரி ஜூஸ் குடித்து வரலாம். இது உங்கள் உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.

செரிமானம் சீராகும்:

இந்த செலரியில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால் இது நம் உணவு செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இது தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு பின் ஏற்படும் மலச்சிக்கல், அஜீரணம் போன்ற வயிறு கோளாறு பிரச்சனைகளுக்கு இது ஒரு சிறந்த பானம் ஆகும்.

மேலும் படிக்க: கொலஸ்ட்ரால் அளவை குறைக்க இந்த பழங்களை சாப்பிட்டால் போதும்

தலைமுடி வளர்ச்சி:

இந்த செலரி ஜூஸில் உள்ள ஆண்டி ஆக்சிடென்ட்கள் நம் உச்சம் தலையில் உள்ள ரத்த நாளங்களை ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தில் இருந்து பாதுகாக்க பெரிதும் உதவுகிறது. இது நம் தலைமுடி உதிர்வதை தடுத்து முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்கிறது. மேலும் இந்த செலரி ஜூஸில் நிறைந்துள்ள வைட்டமின்கள் குறிப்பாக வைட்டமின் கே சத்து ஆரோக்கியமான மயிர் கால்கள் மற்றும் வலுவான பளபளப்பான தலைமுடியை பராமரிக்க உதவும்.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP