தூங்கி எழுந்தவுடன் காபி குடிக்கும் பழக்கம் உங்களுக்கு இருக்கா? அப்போ இந்த கட்டுரை உங்களுக்காகத் தான். பெரும்பாலான பெண்களுக்கு காலையில் ஒரு கப் சூடான காபி அல்லது டீ குடிப்பது அவர்களின் நாளை நல்ல முறையில் தொடங்க உதவுகிறது. ஆனால் தினமும் காலையில் காபியில் சிறிது நெய்யைச் சேர்த்துக் குடித்தால், நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? தினமும் காலையில் காபியில் ஒரு ஸ்பூன் நெய் சேர்ப்பது உடலுக்கு ஏன் நல்லது என்பதைப் பற்றி இந்த கட்டுரையில் அறிந்து கொள்ளலாம்.
சமீப காலங்களில் இணையத்தில் இந்த நெய் காபி ட்ரெண்ட் ஆகி வருகிறது. அது என்ன நெய் காபி? என்று கேட்டால், ஒரு கப் காபியில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்தால் அது தான் நெய் காபி. இந்த நெய் காபி குடித்து வந்தால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
காபியை தனியாகக் குடிப்பதற்குப் பதிலாக, அதில் கொஞ்சம் நெய்யைச் சேர்த்துக் கொண்டால், நம் உடலுக்கு தேவையான ஆற்றலைத் தரும். நெய்யில் நல்ல கொழுப்புகள் மற்றும் வைட்டமின்கள் அதிக அளவு உள்ளன. இவை நம் உடலுக்கு நீடித்த ஆற்றலைக் கொடுத்து நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாகவும் விழிப்புடனும் இருக்க உதவுகிறது.
மேலும் படிக்க: சிவப்பு அரிசியின் மருத்துவ குணங்கள் இதோ!
நெயில் நம் உடலுக்கு நன்மை செய்யும் ஒரு சிறப்பான கொழுப்புச்சத்து உள்ளது. இது நமது கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இது செரிமான பிரச்சனைகளை குணமாக்க உதவும். நாம் நெய்யுடன் சேர்த்து காபி குடித்தால், அது நமக்கு அதிக பசி எடுப்பதையும், அதிகமாக சாப்பிடுவதையும் தடுக்க பெரிதும் உதவுகிறது. எனவே, நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், இந்த நெய் காபியை ட்ரை செய்து பாருங்கள்.
நெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகளை உணவில் சேர்த்து நாம் சாப்பிடுவது முக்கியம். ஏனென்றால் அவை நம் உடலுக்கு அதிக ஆற்றலைக் கொடுக்கின்றது. மேலும் இது நமது மூளையை சிறப்பாக செயல்பட உதவும். இது நம்மை வலுவாக உணர வைத்து தெளிவாக சிந்திக்கவும் செய்கிறது. தினமும் காலையில் நெய் காபி குடித்து வந்தால் நம் மனநிலை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
உங்கள் தினசரி உணவில் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவு பொருட்களை சேர்ப்பது அவசியம். நெய்யில் உள்ள ஒமேகா-3, ஒமேகா-6 மற்றும் ஒமேகா-9 உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தருகிறது. இது இதய ஆரோக்கியத்தையும், வளர்சிதை மாற்றத்தையும் அதிகரித்து, மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது.
இந்த நெய் காபி நம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யாது. தினமும் காலையில் நெய் காபி குடித்து வந்தால் ரத்த ஓட்டம் சீராகும். அதேபோல மன அழுத்தம் மற்றும் மன கவலையில் இருந்து விடுபட நெய் காபி பெரிதும் உதவுகிறது.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com