folic acid for pregnancy : கர்ப்பிணிகளுக்கான போலிக் ஆசிட் நிறைந்த உணவுகள் இவை தான் தெரியுமா?

போலிக் ஆசிட் கருவில் வளரும் சிசுவின் ஆரோக்கியமான புதிய இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது.

 
folic acid for pregnancy benefit

கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, சம சீரான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை கர்ப்பிணிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு ஃபோலிக் ஆசிட் பற்றி நிச்சயம் தெரிந்திருக்கும்.

ஃபோலிக் ஆசிட் எனும் வைட்டமின் B, உடலில் புதிய மற்றும் ஆரோக்கியமான இரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுகின்றன. இரத்த சிவப்பணுக்கள் உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜனை கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே தேவையான அளவு இரத்த சிவப்பணுக்கள் இல்லாத நிலை ஏற்படும் போது, உடலால் போதுமான அளவு ஆக்ஸிஜனை உறுப்புகளுக்கு கொண்டு செல்ல முடியாமல் போகலாம். இது கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கலாம்.

கர்ப்ப காலத்தில் போலிக் ஆசிட் முக்கியத்துவம்

folic acid

நிபுணர் கருத்து

கர்ப்ப காலத்தில், குறிப்பாக முதல் சில வாரங்களில் ஃபோலிக் ஆசிட் உட்கொள்வது மிகவும் அவசியம். ஏனெனில் இது கருவில் வளரும் குழந்தையின் நரம்புக் குழாய், மூளை மற்றும் முதுகுத்தண்டு போன்ற உறுப்புகளின் சரியான வளர்ச்சிக்கு உதவுகிறது. இதனுடன் குழந்தையின் இதயம் மற்றும் சுற்றோட்ட உறுப்புகள் உருவாகவும் ஃபோலிக் ஆசிட் உதவுகிறது.

ஃபோலிக் ஆசிட் தண்ணீரில் கரையக்கூடிய தன்மை உள்ளது. இவற்றை உடல் சேமித்து வைத்துக் கொள்வதில்லை, மாறாக சிறுநீர் வாயிலாக வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில் கர்ப்பிணிகள் ஃபோலிக் ஆசிட் எடுத்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இந்த கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொண்ட ஊட்டச்சத்து நிபுணர் ஷாலினி சக்ரவர்த்தி அவர்களுக்கு சிறப்பு நன்றி.

கர்ப்ப காலத்தில் ஃபோலிக் ஆசிட் தரும் நன்மைகள்

தாய் மற்றும் சேய் இருவருக்கும், ஃபோலிக் ஆசிட் பல வழிகளில் நன்மை அளிப்பதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. கர்ப்ப காலத்தில் போலிக் ஆசிட்டை தவறாமல் எடுத்துக் கொள்வதன் மூலம் பின்வரும் அபாயங்களை குறைக்கலாம்.

  • கருச்சிதைவு
  • பிறவி இதய குறைபாடுகள்
  • குறைப்பிரசவம்
  • நரம்பு குழாய் குறைபாடுகள்
  • பிளவுபட்ட உதடு மற்றும் அண்ணம்

உணவில் போலிக் ஆசிட் சேர்த்துக் கொள்வதற்கான வழிகள்

பொதுவாக கர்ப்பிணிகளுக்கு ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள் பரிந்துரை செய்யப்படுகின்றன. இதனுடன் ஃபோலேட் அதிகம் உள்ள உணவுகள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

ஃபோலேட்டின் சிறந்த ஆதாரங்கள்

folic acid

  • கடுகு கீரைகள், ப்ரோக்கோலி, லெட்டூஸ், அஸ்பாரகஸ், கீரை போன்ற அடர் பச்சை நிற காய்கறிகள்
  • அவகேடோ
  • பருப்பு வகைகள்
  • பச்சை பட்டாணி
  • பீட்ரூட்
  • வாழைப்பழம்
  • ஆரஞ்சு
  • முழு தானியங்கள்

கர்ப்பம் தரிக்க திட்டமிடுபவர்களும் கர்ப்பிணிகளும் நிச்சயமாக மருத்துவரை ஆலோசனை செய்து தேவையான அளவு ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்:கர்ப்பம் தரிக்க தேவையான ஊட்டச்சத்துக்கள்


ஒரு சில சமயங்களில் மாதவிடாய் தள்ளிப்போன பிறகு ஐந்து அல்லது ஆறாவது வாரங்களில் தான் கர்ப்பம் உறுதி செய்யப்படுகிறது. கர்ப்பத்தை உறுதி செய்த பிறகு போலிக் ஆசிட் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதை விட, கர்ப்பம் தரிக்க திட்டமிடும் போதே அதை எடுத்துக்கொள்ளவது நல்லது. குறிப்பாக முன்னதாக கருச்சிதைவு அல்லது குறைபாடுள்ள சிசுவின் வளர்ச்சி போன்ற பிரச்சனைகளை சந்தித்துள்ள கர்ப்பிணிகள் ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள் எடுத்துக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும். பின்வரும் பிரச்சனைகளை எதிர் கொள்பவர்களுக்கு இயல்பானதை விட சற்று அதிகமான டோசேஜ்களில் ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள் வழங்கப்படலாம்.

folic acid

  • கல்லீரல் நோய்
  • சிறுநீரக நோய் அல்லது டயாலிசிஸ் மேற்கொள்பவர்கள்
  • டைப் 2 சர்க்கரை நோய்
  • குடல் அழற்சி நோய்
  • ஆஸ்துமா
  • கை-கால் வலிப்பு, லூபஸ், சிரங்கு, முடக்கு வாதம் போன்றவற்றுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள்.

குறிப்பு : கர்ப்பிணிகளும், கர்ப்பம் தரிக்க திட்டமிடுபவர்களும் மருத்துவர் ஆலோசனை இன்றி ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. மருத்துவரை கலந்தாலோசித்து சரியான அளவுகளில் எடுத்துக் கொள்வது நல்லது ஏனெனில் அதிகப்படியான டோசேஜ் உங்களுக்கும் கருவில் வளரும் குழந்தைக்கும் ஆபத்தானது.

இந்த பதிவும் உதவலாம்: இயற்கை முறையில் விரைவில் கர்ப்பமடைய வேண்டுமா?

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP