Millet Cured Rice Recipes: எலும்புகள் வலுப்பெறவும், இதய ஆரோக்கியத்திற்கு உதவும் சாமை தயிர் சாதம்!

சாமையில் உடலுக்கு நன்மை தரக்கூடிய கொழுப்புகள் அதிகளவில் உள்ளதால், இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது

little millet recipes

இன்றைய இயந்திர உலகத்தில் பம்பரம் போல் சுற்றித் திரியும் நாம் உடல் நலத்தில் கொஞ்சம் கூட அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. நேரம் தவறி உட்கொள்வது, கலாச்சாரம் என்கிற பெயரில் பெயர் தெரியாத உணவுகளை உட்கொள்வது என அவர்களின் வாழ்க்கை முறையையே மாற்றி விட்டனர். பல நோய்கள் ஏற்படுவதற்கும் இது ஒரு காரணமாக அமைகிறது.

இதனால் தான் பல ஊட்டச்சத்து நிபுணர்கள் எப்போது உங்களின் உணவு முறையில் மாற்றம் செய்கிறீர்களோ? அப்பொழுது தான் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள் என்கிறார்கள். குறிப்பாக நம்முடைய மூதாதையர்கள் பயன்படுத்திய சிறு தானிய உணவுகளை மீண்டும் உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இந்த சூழலில் இன்றைக்கு கோடைக்காலத்திற்கு ஏற்றதாகவும், பல உடல் நல பாதிப்புகளுக்குத் தீர்வு காண்பதற்காக சாமையில் தயிர் சாதம் எப்படி செய்வது? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

samai rice benefis

உடலுக்கு வலுச்சேர்க்கும் சாமை தயிர் சாதம்:

தேவையான பொருட்கள்:

  • சாமை அரிசி - கால் கப்
  • தயிர் - 1 கப்
  • பச்சை மிளகாய் - 3
  • நறுக்கிய இஞ்சி - சிறிதளவு
  • கறிவேப்பிலை ,கொத்தமல்லி - சிறிதளவு
  • உப்பு - தேவையான அளவு
  • தாளிப்பதற்கு கடுகு, முந்திரி, பெருங்காயத்தூள்

செய்முறை:

  • சாமை தயிர் சாதம் செய்வதற்கு முதலில் சாமை அரிசியை நன்கு அலசி பின்னதாக தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
  • இதையடுத்து குக்கரில் 4 விசில் வரை வைக்கவும். இல்லையென்றால் நன்கு வெந்த பின்னதாக வடித்தும் நீங்கள் சாமை தயிர் சாதம் செய்யலாம்.
  • சாதத்தை வடித்த பின்னதாக தயிர் மற்றும் பால் செர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். பின்னர் சாதத்துடன் சேர்ந்து பிசையவும்.
  • இறுதியில் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயம், முந்திரி, கருவேப்பிலை சேர்த்து தாளித்து விட்டு தயிர் சாதத்துடன் சேர்த்து விட்டால் போதும். சுவையான சாமை தயிர் சாதம் ரெடி.

சாமையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

சாமை அரிசியில் புரதம், கொழுப்பு, தாது உப்புகள், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், துத்தநாகம், மாவுச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து என பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் உடலுக்கு பல வகைகளில் ஆரோக்கியத்தை அளிக்கும்.

மேலும் படிக்க:உடல் எடையை குறைக்க உதவும் லெமன் காபி.. செய்வது எப்படி?

curd rice recipes

குறிப்பாக சாமையில் உள்ள சுண்ணாம்புச்சத்துக்கள் அனைவரின் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண உதவுகிறது. இதோடு மட்டுமின்றி சாமையில் உடலுக்கு நன்மை தரக்கூடிய கொழுப்புகள் அதிகளவில் உள்ளதால், இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது. எனவே வாரத்திற்கு ஒருமுறையாவது உங்களது உணவு முறையில் சாமை அரிசியை சேர்த்துக் கொள்ள மறந்து விடாதீர்கள்.

Image source - Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP