சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சரியான உணவு முறையை கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம். இரத்தத்தில் சர்க்கரையின் அளவுகள் அதிகரிப்பதால் சர்க்கரை நோய் எனும் வாழ்க்கை முறை நோய் ஏற்படுகிறது. அதிகப்படியான தாகம், அடிக்கடி சிறுநீர் கழிப்பது, பசி, சோர்வு போன்றவை சர்க்கரை நோயின் அறிகுறிகள் ஆகும். இதனுடன் பார்வையிலும் ஒரு சில மாற்றங்களையும் உணரலாம். இந்தக் குறைபாடுகள் அனைத்தையும் நிவர்த்தி செய்ய சமச்சீரான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதனுடன் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கலோரி உட்கொள்ளும் அளவுகளிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பிரபல உணவியல் நிபுணரான சிக்கா குப்தா அவர்கள் சர்க்கரை நோயாளிகளுக்கான டயட் பிளானை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். நிபுணர் பரிந்துரை செய்த டயட் பிளானை இப்போது விரிவாக பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: PCOS பற்றிய இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா?
காலை உணவிலற்கு 10-15 ஊறவைத்த அக்ரூட் பருப்புகளுடன் 2 முழு முட்டைகள் மற்றும் 100 கிராம் அவகேடோவை சாப்பிடலாம். அக்ரூட் பருப்புகள் இன்சுலின் எதிர்ப்பை உருவாக்கவும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், டைப்-2 சர்க்கரை நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கவும் உதவுகின்றன.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முட்டை சாப்பிடுவது ஒரு சிறந்த வழியாகும். ஏனெனில் ஒரு முட்டையில் அரை கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 7 கிராம் உயர்தர புரதம் உள்ளது.
மதிய உணவிற்கு முழு கொழுப்புள்ள தயிரில் பட்டை பொடி தூவி சாப்பிடலாம். இதனுடன் 1 வேகவைத்த சர்க்கரை வள்ளி மற்றும் 1 கப் வதக்கிய பச்சை பீன்ஸை சாப்பிடலாம். இதில் சர்க்கரை வள்ளி கிழங்கிற்கு பதிலாக சப்பாத்தி, சோளம் அல்லது வேறு ஏதேனும் தானியங்களையும் சாப்பிடலாம். குறைந்த அளவு கிளைசிமிக் குறியீட்டை கொண்டிருக்கும் சர்க்கரை வள்ளி கிழங்கில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் சர்க்கரைவள்ளி கிழங்கு சாப்பிடுவது இரத்த சர்க்கரையின் அளவுகளை பாதிக்காது. மேலும் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த பச்சை பீன்ஸ் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
3-4 ஸ்ட்ராபெர்ரிகள், 200 மில்லி தேங்காய் பால் மற்றும் 2 டீஸ்பூன் ஆளிவிதை ஸ்மூத்தி ஆகியவற்றை சிற்றுண்டியாக சாப்பிடலாம். இயற்கையாக கிடைக்கும் தேங்காய் பாலில் கார்போஹைட்ரேட் குறைவாகவும் நார்ச்சத்து மற்றும் நல்ல கொழுப்புகள் நிறைவாகவும் உள்ளன. இது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. மேலும் குளுக்கோஸ் அளவிலும் அதிக மாற்றத்தை ஏற்படுத்தாது.
இரவு உணவிற்கு 1 பெரிய கிண்ணத்தில் வேகவைத்த கொண்டைக்கடலை சாலட் மற்றும் 1 கப் காளான் சூப் எடுத்துக்கொள்ளலாம். இதில் உள்ள குறைந்த கிளைசெமிக் குறியீடு இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், கொண்டைக்கடலையில் நிறைந்துள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இரத்தத்தில் உள்ள நச்சுகளை நீக்குகின்றன.
அதே சமயம் சர்க்கரை நோயின் அறிகுறிகளையும் தீவிரத்தையும் குறைக்க காளான் பல வழிகளில் உதவுகிறது. இதில் உள்ள குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் சர்க்கரை நோயாளிகளுக்கு பாத்துக்காப்பானது.
எந்த ஒரு உணவு முறையை பின்பற்றுவதற்கு முன், உணவியல் நிபுணர் அல்லது மருத்துவரை ஆலோசனை செய்வது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: எடை இழப்பு முதல் பார்வையை மேம்படுத்துவது வரை முலாம் பழத்தில் இவ்வளவு நன்மைகளா!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com