நீரிழிவு நோயை நிர்வகிக்கும் போது, உங்கள் உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் சரியான உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. உலர்ந்த பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகள் பொதுவாக ஆரோக்கியமான சிற்றுண்டி விருப்பமாகக் கருதப்பட்டாலும், நீரிழிவு நோயாளிகள் ஒரு சில நட்ஸ் வகைகளை சாப்பிட கூடாது என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றது. அந்த வரிசையில் நீரிழிவு நோயாளிகளுக்கு பொருந்தாத உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகள் என்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
இரும்புச்சத்து நிறைந்த இந்த பேரீச்சம்பழம் ஒரு பிரபலமான உலர்ந்த பழமாகும். இது பெரும்பாலும் பல்வேறு உணவுகளில் இயற்கையான இனிப்பாகப் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், அவற்றில் சர்க்கரை அதிகமாக உள்ள காரணத்தினால் இரத்த சர்க்கரை அளவுகளில் விரைவான அதிகரிப்பை ஏற்படுத்தும். இதனால் நீரிழிவு நோயாளிகள் பேரீச்சம்பழத்தை மிதமாக உட்கொள்ள வேண்டும் அல்லது அவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
உலர் திராட்சை என்பது இயற்கை சர்க்கரைகளால் நிரம்பிய ஒரு உலர் பழம் ஆகும். ஒரு சிறிய அளவு திராட்சை இரத்த சர்க்கரை அளவை கணிசமாக அதிகரிக்கும். நீரிழிவு நோயாளிகள் இந்த உலர் திராட்சைக்கு பதிலாக கருப்பு திராட்சையைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது.
இந்த உலர்ந்த பிளம்ஸ், அவற்றின் அதிக நார்ச்சத்து உள்ளடக்கம் காரணமாக அவற்றின் மலமிளக்கிய விளைவுகளுக்கு பெயர் பெற்றவை. இருப்பினும், அவற்றில் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக உள்ளன, இதனால் அவை நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது அல்ல.
ட்ரை மேங்கோ என்று கூறப்படும் உலர்ந்த மாம்பழம் சர்க்கரை மற்றும் கலோரிகள் அதிகம் கொண்ட ஒரு சுவையான சிற்றுண்டியாகும். இந்த நிலையில் நீரிழவு நோயாளிகள் உலர்ந்த மாம்பழத்தைத் தவிர்ப்பது அல்லது அதற்கு பதிலாக பிரெஷ் மாம்பழத் துண்டுகளைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது.
மற்ற நட்ஸ் வகைகளுடன் ஒப்பிடும்போது செஸ்ட் நட்களில் கொழுப்பு குறைவாக இருந்தாலும், அவற்றில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ளன. இந்த செஸ்ட்நட்ஸ் இரத்த சர்க்கரை அளவுகளில் அதிகரிப்பை ஏற்படுத்தும் என்பதால் நீரிழிவு நோயாளிகளால் குறைந்த அளவில் உட்கொள்ளப்பட வேண்டும்.
முந்திரி பருப்பு ஒரு பிரபலமான நட்ஸ் வகை ஆகும், இதில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக உள்ளது மற்றும் இரத்த சர்க்கரை அளவை எதிர்மறையாக பாதிக்கும். நீரிழிவு நோயாளிகள் முந்திரிக்குப் பதிலாக பாதாம் அல்லது அக்ரூட் பருப்புகள் போன்ற பிற நட்ஸ் வகைகளை தேர்வு செய்து சாப்பிட்டு வரலாம்.
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள மற்றொரு நட்ஸ் வகை பிஸ்தா ஆகும். மேலும் நீரிழிவு நோயாளிகளால் இந்த பிஸ்தா பருப்பு மிதமான அளவில் உட்கொள்ளப்பட வேண்டும். கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக உள்ள பெக்கன்ஸ் அல்லது மகாடாமியா நட்ஸ் போன்றவற்றை தேர்வுசெய்து சாப்பிடலாம்.
உலர் தேங்காய் பெரும்பாலும் பேக்கிங் மற்றும் சமையலில் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் இதில் நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் சர்க்கரையும் அதிகமாக உள்ளது. நீரிழிவு நோயாளிகள் உலர்ந்த தேங்காயை உட்கொள்ளும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும், அதற்கு பதிலாக பிரெஷ் தேங்காயைத் தேர்வு செய்ய வேண்டும்.
அந்த வரிசையில் நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவுகளில் பாதிப்பை தவிர்க்க அவர்கள் உட்கொள்ளும் உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும். சமநிலையான உணவை சாப்பிட்டு வந்தால், நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் உதவும்.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com