எலும்புகள் வலுபெற கால்சியம் தேவை அதற்கு பால் குடிக்க வேண்டும் என அனைவருக்குமே தெரியும். எலும்புகள் வலுப்பெற கால்சியம் மட்டும் போதுமா ? வேறு ஏதாவது தேவையா ? கால்சியம் என்பது பாலில் மட்டும் தான் உள்ளதா ? தினமும் நமக்கு தேவையான பால் கால்சியத்தில் இருந்தே கிடைத்துவிடுமா ? என்பதை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மாங்கனீஸ் இவை மூன்றும் எலும்பின் ஆரோக்கியத்தில் பங்கு வகிக்கிறது. கால்சியம் மட்டும் எடுத்துக்கொண்டால் எலும்புகள் வலுப்பெறுமா என்றால் கிடையவே கிடையாது. நாம் எடுத்துக்கொள்ளும் கால்சியம் எந்தளவிற்கு இரத்தத்தில் சேர வேண்டும், எந்தளவிற்கு சிறுநீரகம் வழியாக வெளியேற வேண்டும், எந்தளவிற்கு எலும்புகளில் படிய வேண்டும் என்பதை நிர்ணயிக்க ஆறு முதல் ஏழு ஹார்மோன்கள் வேலை செய்கின்றன.
கால்சியம் சத்து எலும்புகளில் படிவதற்கு நமக்கு வைட்டமின் டி தேவை. நாம் எவ்வளவு வைட்டமின் எடுத்துக்கொண்டாலும் அது வயிற்றில் உறிஞ்சப்படுவதையும், சிறுநீரகத்தில் வெளியேறுவதையும் வைட்டமின் டி நிர்ணயிக்கிறது. எலும்பு வலு இழப்பதற்கு Osteoporosis காரணமாகும்.
இதன் அறிகுறிகள் பெரும்பாலும் முதுகில் இருந்து ஆரம்பிக்கும். Osteoporosis இருந்தால் முதுகு வலி ஆரம்பிக்கும் அல்லது கூன் விழும். எனவே osteoporosis வராமல் தடுக்க எந்தெந்த உணவுகளை சாப்பிடலாம் என தெரிந்துகொள்ளுங்கள்.
வைட்டமின் டி கிடைப்பதற்கு முட்டை, பால், மீன் சாப்பிட்டாலும் அதன் சிறந்த ஆதாரமாக சூரிய வெளிச்சத்தை குறிப்பிடலாம். தினமும் அரைமணி நேரம் வெயிலில் நின்றால் அல்லது நடந்தால் வைட்டமின் டி எளிதாக கிடைக்கும். காலை மற்றும் மாலை நேரத்தை விட மதிய நேரத்தில் சூரிய வெளிச்சத்தில் நிற்பது நல்லது.
மேலும் படிங்கதினமும் புதினா இலை சாப்பிடுங்க! உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்
வளர்ச்சி ஹார்மோன் சீராக இருந்தால் மட்டுமே எலும்புகள் வலுப்பெறும். இதற்கு உடற்பயிற்சி மிக மிக அவசியம். சரியாக உடற்பயிற்சி செய்யாத நபர்களுக்கு சீக்கிரமாகவே எலும்பு வலு இழப்பு ஏற்படும். வளர்ச்சி ஹார்மோனை சீராக வைத்திருக்க தீவிரமான உடற்பயிற்சிகளில் ஈடுபட முடியவில்லை என்றாலும் நடைபயிற்சி செல்லலாம் அல்லது யோகாசனம் செய்யலாம். தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்தால் 40 வயதிற்கு மேல் எலும்பு வலு இழப்பு ஏற்படாமல் தடுக்கலாம்.
சாதாரண மனிதனுக்கு தினமும் ஆயிரம் மில்லி கிராம் கால்சியம் தேவை. கர்ப்பிணிகள், தாய்மார்களுக்கு தினமும் இரண்டாயிரம் மில்லி கிராம் கால்சியம் தேவை. குழந்தைகளுக்கு தினமும் 800 மில்லி கிராம் கால்சியம் தேவை. 100 மில்லி லிட்டர் பாலில் 120 மில்லி கிராம் கால்சியம் மட்டுமே இருக்கிறது.
கீரைகள் கால்சியம் சத்தின் சிறந்த ஆதாரமாகும். 100 கிராம் அகத்தி கீரையில் சுமார் 1100 மில்லி கிராம் கால்சியம் சத்து இருக்கிறது. முருங்கை கீரையில் 400 மில்லி கிராம் கால்சியம் சத்து உள்ளது. 100 கிராம் கறிவேப்பிலையில் 800 மில்லி கிராம் கால்சியம் இருக்கிறது. 100 கிராம் ராகியில் 340 மில்லி கிராம் கால்சியம் சத்து உள்ளது. கசகசாவிலும் கால்சியம் சத்து அதிகம் இருக்கிறது.
பாஸ்பரஸ் அசைவ உணவுகளில் நிறைய உள்ளது. நட்ஸ், முழு தானியங்களில் பாஸ்பரஸ் கிடைக்கும். மது மற்றும் புகைப்பழக்கம் எலும்புகளை வலு இழக்க செய்யும்.
மேலும் படிங்கபுரதச்சத்து குறைபாடா ? நீங்கள் சாப்பிட வேண்டிய சைவ, அசைவ உணவுகள்
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation