Makhana Controls Diabetes : சர்க்கரை நோயாளிகளுக்கு பல அற்புத பலன்களை தரும் தாமரை விதைகள்!

தாமரை விதைகள் குறைந்த அளவு கிளைசெமிக் குறியீட்டையும்,  ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்களையும் கொண்டுள்ளது. இது சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்…

lotus seeds makhana for diabetic patients
lotus seeds makhana for diabetic patients

சர்க்கரை நோய் எனும் வளர்சிதை மாற்ற சீர்குலைவால் இரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இதனால் கணையம் இன்சுலின் உற்பத்தியை குறைக்கிறது. சர்க்கரை நோய் தொடர்ந்தால் அது இதய நோய்கள், சிறுநீரகம், நுரையீரல் மற்றும் கண்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும். இது போன்ற நிலைகளை தடுக்க சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம்.

நீங்களும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால் தாமரை விதைகளை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது குறித்த தகவல்களை ஊட்டச்சத்து நிபுணரான மேகா முகிஜா அவர்களிடம் இருந்து தெரிந்து கொள்வோம்.

நிபுணரின் கருத்துப்படி, தாமரை விதைகள் மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு அற்புதமான ஸ்நாக்ஸ் ஆகும். இதில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, மாவுச்சத்து, மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற பல அத்தியாவசியம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது ஆயுர்வேதம் மற்றும் சைனீஸ் மருத்துவ முறையிலும் பயன்படுத்தப்படுகிறது. தாமரை விதைகள் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை தரும் தாமரை விதை

lotus seeds for diabetic patients

தாமரை விதையில் உள்ள மாவுச்சத்து மெதுவாக ஜீரணமாகி இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. தாமரை விதைகள் நார்ச்சத்தின் சிறந்த ஆதாரமாகும். இந்த நார்ச்சத்துக்கள் கார்போஹைட்ரேட் உறிஞ்சுதலை தாமதப்படுத்துவதன் மூலம் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

தாமரை விதைகள் குறைந்த அளவு கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளதால் இதை சாப்பிடும் பொழுது சர்க்கரையின் அளவுகள் திடீரென அதிகரிக்காது. மேலும் இதில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரெடிக்கல்களால் ஏற்படும் செல் செய்ததை தடுக்கின்றன.

தாமரை விதைகளில் நிறைந்துள்ள மெக்னீசியம் சத்துக்கள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி இரத்த சர்க்கரையின் அளவுகளை கட்டுப்படுத்துகிறது.

தாமரை விதையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

தாமரை விதைகள் புரதம் மற்றும் நார்ச்சத்தின் சிறந்த ஆதாரமாகும். இதைத் தவிர தாமரை விதைகளில் கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன.

100 கிராம் தாமரை விதையில் 10 கிராம் அளவு புரதச்சத்துக்கள் உள்ளன. இவை தசை மற்றும் எலும்புகளை வலுப்படுத்துகின்றன. இவை சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதுடன் மன அழுத்தத்தில் இருந்தும் விடுபட உதவுகின்றன.

lotus seeds benefits for diabetes

இதய ஆரோக்கியத்திற்கு நல்லது

பெரும்பாலான சூழலில் சர்க்கரை நோய் இருதய நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது. இந்நிலையில் இதயத்திற்கு நன்மை தரும் தாமரை விதைகள் போன்ற உணவுகளை நம் அன்றாட உணவில் சேர்த்து வர உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கலாம் மற்றும் இதய நோய் வருவதற்கான வாய்ப்பையும் குறைக்கலாம்.

வயது முதிர்வின் அறிகுறிகளை தடுக்கும்

தாமரை விதையில் வயது முதிர்வை எதிர்க்கும் பண்புகள் உள்ளன. இதை சாப்பிட்டு வர தூக்கமின்மை, கவலை போன்ற மன அழுத்தம் சார்ந்த பிரச்சனையையும் சரி செய்யலாம்.

சாப்பிடும் முறை

தாமரை விதைகளை சிறிதளவு நெய்யில் வறுத்து மசாலாக்கள் தூவி ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடலாம். நீங்கள் விரும்பினால் தாமரை விதை மற்றும் ஒரு சில நட்ஸ் வகைகளையும் சேர்த்து அரைத்து பாலிலும் கலந்து குடிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: இப்படி கிராம்பு டீ குடித்து பாருங்க, எடை மளமளவென குறையும்!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP