herzindagi
neem health benefits

Neem Leaves Benefits: வேப்பிலை சாப்பிட்டால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

பல மருத்துவ குணங்கள் கொண்ட வேப்பிலை சாப்பிடுவதன் மூலம் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கு பார்க்கலாம். 
Editorial
Updated:- 2024-03-16, 15:00 IST

நம் முன்னோர்கள் அதிக காலம் நோய் நொடியின்றி வாழ்ந்து வந்ததற்கு உதவியாக இருந்த ஒரு சிறந்த உணவு பொருள் வேப்பிலை. இதில் அதிக அளவு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் வேப்பிலை சாப்பிடும் பழக்கம் நம்மில் வளர்க்கும் கிடையாது கசப்பு என்று சொன்னாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடாமல் ஒதுக்கி வைத்து விடுவார்கள் வேப்ப மரத்தின் இலைகளை தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் அது என்ன நன்மைகள் என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம். 

பற்களுக்கு ஆரோக்கியம்:

ஆலும் வேம்பும் பல்லுக்கு உறுதி என்ற பழமொழிக்கு ஏற்ப காலையில் பற்களை சுத்தப்படுத்த வேப்பம் குச்சியை பயன்படுத்தலாம். இது நம் பற்களில் உள்ள கிருமிகளை அழித்து சுத்தப்படுத்த பெரிதும் உதவுகிறது. அதேபோல வாயில் துர்நாற்றம் வீசும் பிரச்சனை உள்ளவர்கள் இந்த வேப்பம் குச்சியை பயன்படுத்தி வந்தால் நாளடைவில் குணமாகும்.

வயிற்றுக் கிருமிகளை அகற்றும்:

neem leaves ()

சாக்லேட் குழந்தைகளுக்கு அதிகம் பிடித்த ஒரு உணவு வகையாக மாறிவிட்டது இது மட்டுமல்லாமல் இன்றைய காலகட்டத்தில் நாம் உணவு உட்கொள்ளும் உணவு முறையும் நம் குடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. தினமும் காலை வெறும் வயிற்றில் ஒன்று அல்லது இரண்டு வேப்ப இலைகளை சாப்பிட்டு வந்தால் குடல் அமைப்பு மற்றும் உணவுக் குழாய்களில் இருக்கும் கிருமிகள் நீங்கும். மேலும் குடல் பிரச்சனைகள் குணமாக வேப்பிலை பெரிதும் உதவுகிறது.

ரத்த சர்க்கரை அளவு சீராகும்:

ரத்த சர்க்கரை பிரச்சனைகள் உள்ளவர்கள் வேப்ப இலைகளை சாப்பிட்டு வரலாம் வேப்பங்கொட்டையின் கசப்பான சுவை நீரிழிவு நோயை குணப்படுத்த உதவுகிறது ரத்த சர்க்கரை கட்டுக்குள் வைத்திருக்க வேப்பிலை பெரிதும் உதவும். 

கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும்: 

கல்லடைப்பு கல்லீரல் வீக்கம் போன்ற பல பிரச்சனைகள் உள்ளவர்கள் வேப்ப இலைகளை வெறும் வயிற்றில் தினமும் காலையில் சாப்பிட்டு வரலாம். நம் உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் கல்லீரலில் திசுக்களை செய்த படுத்துவதால் பல நோய்கள் ஏற்படுகிறது. இந்த வேப்ப இலைகளின் அழற்ச்சி எதிர்ப்பு பண்புகள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து போராட உதவும். 

மலச்சிக்கல் குணமாகும்:

வயிறு சார்ந்த பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இந்த வேப்ப இலை ஒரு சிறந்த மருந்து. வேப்ப இலைகளில் உள்ள நார்ச்சத்து நம் உடலில் குடல் இயக்கத்திற்கு உதவுவதன் மூலம் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை குணமாக்க உதவுகிறது.

பொடுகு தொல்லை நீங்கும்:

வாரம் ஒரு முறை வேப்பிலையை அரைத்து தலைமுடியில் தடவி, அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

வேப்ப இலைகளை எப்படி சாப்பிடுவது:

வேப்ப இலைகளை வேகவைத்து அதன் நீரை தினமும் காலை வெறும் வயிற்றில் உட்கொள்ளலாம். இது மட்டும் அல்லாமல் வேப்ப இலையில் செய்யப்பட்ட தேநீரையும் உட்கொள்ளலாம். வேப்பிலை இலையின் சுவை கசப்பாக இருந்தாலும் இதனால் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். இதனை உணவில் சேர்த்துக்கொள்வது நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அத்கரிக்க உதவுகிறது.

Image source: google

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com