உயர் ரத்த அழுத்த பிரச்சனையை உடனே குணப்படுத்த; இந்த 6 உணவுகளை தினமும் சாப்பிட்டு பாருங்க

மன அழுத்தம், தவறான உணவு முறை, உடல் உழைப்பு குறைவு போன்ற காரணங்களால் இந்த உயர் ரத்த அழுத்தம் வருகிறது. ஆனால், சில சூப்பர் உணவுகளை உங்கள் தினசரி உணவில் சேர்ப்பதன் மூலம் இதை எளிதாக கட்டுப்படுத்தலாம். 
image

உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure) என்பது இன்றைய நவீன வாழ்க்கையின் மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்றாக மாறிவிட்டது. மன அழுத்தம், தவறான உணவு முறை, உடல் உழைப்பு குறைவு போன்ற காரணங்களால் இந்த நோய் வருகிறது. ஆனால், சில சூப்பர் உணவுகளை உங்கள் தினசரி உணவில் சேர்ப்பதன் மூலம் இதை எளிதாக கட்டுப்படுத்தலாம். இந்த ஆறு ஆரோக்கியமான உணவுகள் உங்கள் இரத்த அழுத்தத்தை இயற்கையாகக் குறைக்க உதவும்.

வாழைப்பழம்: பொட்டாசியத்தின் மூலம்


வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது, இது உடலில் உள்ள சோடியத்தின் தாக்கத்தை சமப்படுத்துகிறது. இரத்த நாளங்களின் அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. ஒரு நாளைக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். மேலும், இதில் உள்ள மெக்னீசியம் இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது.

bananas-chopped-up-in-a-bowl

வெண்ணைக் கீரை (லெட்டூஸ்):


வெண்ணைக் கீரையில் நைட்ரேட் சத்து அதிகம் உள்ளது, இது இரத்த நாளங்களை விரிவாக்கி இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இதில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு போன்ற தாதுவங்கள் இரத்த சுழற்சியை மேம்படுத்துகின்றன. ஒரு கப் வெண்ணைக் கீரையை சூப், சாலட் அல்லது ஜூஸ் ஆக சாப்பிடலாம்.


பீட்ரூட்: இரத்த ஓட்டத்தின் ராஜா


பீட்ரூட்டில் நைட்ரிக் ஆக்சைடு உள்ளது, இது இரத்த நாளங்களை திறந்து வைத்து இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. ஒரு கப் பீட்ரூட் சாறு குடிப்பதன் மூலம் 4 முதல் 5 மணி நேரத்திற்குள் BP-யில் குறைப்பு ஏற்படும். இது ஹீமோகுளோபினை அதிகரிப்பதால் இரத்த சுத்திகரிப்புக்கும் உதவுகிறது.

AN172-Beets-1296x728-Header

பருப்பு வகைகள்: புரதத்தின் பலம்


கொண்டைக்கடலை, மொச்சை, உளுந்து போன்ற பருப்பு வகைகளில் மெக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்து நிறைந்துள்ளன. இவை இரத்த அழுத்தத்தை சீராக்கி, இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும். ஒரு நாளைக்கு ஒரு கைப்பிடி பருப்பு சாப்பிடுவது BP-யை 10% வரை குறைக்கும்.


தேங்காய் தண்ணீர்: இயற்கையான எலக்ட்ரோலைட்


தேங்காய் தண்ணீர் பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் C போன்ற சத்துகளால் நிறைந்தது. இது உடலின் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் தேங்காய் தண்ணீர் குடிப்பது உயர் BP-யை குறைப்பது மட்டுமல்ல, ஹைட்ரேஷனையும் மேம்படுத்தும்.

Coconut-Juice

வெள்ளைப் பூண்டு: இயற்கையான BP மருந்து


வெள்ளைப் பூண்டில் அலிசின் என்ற சக்திவாய்ந்த சத்து உள்ளது, இது இரத்த நாளங்களை விரிவுபடுத்தி இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. ஒரு நாளைக்கு 2 அல்லது 3 பூண்டு பற்களை சாப்பிடுவதன் மூலம் BP-யில் 8-10% குறைப்பு ஏற்படும்.

மேலும் படிக்க: உடலில் ரத்த அழுத்த பிரச்சனையா? இந்த விதைகளை தூக்கி வீசாமல் சாப்பிட்டு பாருங்க

இந்த 6 சூப்பர் உணவுகளை உங்கள் அன்றாட உணவில் சேர்ப்பதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தை இயற்கையாக கட்டுப்படுத்தலாம். மேலும், உப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து, தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் BP-யை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்க, இன்றே இந்த உணவுகளை உங்கள் டயட்டில் சேர்த்து சாப்பிடுங்கள்.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP