herzindagi
image

சாப்பிட்ட உடனே இந்த தவறுகளை செய்யாதீங்க; உடலுக்கு என்ன ஆகும் தெரியுமா?

நாம் தினமும் சாப்பிட்ட உடனே செய்யக்கூடாத சில விஷயங்கள் என்ன என்றும் அதை செய்வதால் நம் உடலில் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்தும் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.  
Editorial
Updated:- 2025-07-02, 13:39 IST

நம்மில் பலரும் சாப்பிட்ட உடனே பல வேலைகளையும் பல உணவுப் பொருட்களையும் சேர்த்து சாப்பிடுவோம். இது நம் உடலுக்கு ஆரோக்கியம் கிடையாது. தினசரி காலை மதியம் இரவு என்று மூன்று வேலையும் தவறாமல் சாப்பிடுகிறோம். அப்படி சாப்பிட்ட உடனே செய்யக்கூடாத சில விஷயங்கள் என்ன என்றும் அதை செய்வதால் நம் உடலில் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்தும் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.  

சாப்பிட்ட உடனே குளிக்க கூடாது:


உணவு சாப்பிட்ட உடனே குளிக்க கூடாது, இதை எப்போதுமே செய்யாதீர்கள். ஏனென்றால் நாம் சாப்பிட்ட உடனே நமது உடல் அந்த உணவை செரிமானம் செய்வதற்கான வேலைகளை மேற்கொள்ள ஆரம்பித்து விடுகிறது. நாம் குளித்தால் நமது கை கால்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதன் காரணமாக செரிமான மண்டலத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைகிறது. இதனால் நமக்கு செரிமான நிலை அசிடிட்டி பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆகவே சாப்பிட்ட பிறகு குளிக்க கூடாது. சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன் அல்லது பின் குளிக்க செல்லுங்கள்.

bathing at night

பழங்கள் சாப்பிடக்கூடாது:


பலர் உணவருந்திய பிறகு பழங்கள் சாப்பிடுவது நல்ல பழக்கம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இது ஒரு தவறான எண்ணம். பொதுவாக பழங்கள் எளிதில் ஜீரணமாக கூடியது. அதனால் நாம் உணவருந்திய பிறகு சாப்பிடும் பழங்கள் தான் முதலில் ஜீரணமாகும். அதேபோல் நாம் சாப்பிட்ட உணவு செரிமானமாகாமல் இருக்கும். இதனால் உணவு அருந்திய பின் பழங்கள் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்கவும். அதாவது உணவு அருந்தியதற்கு முன் அல்லது பின் இரண்டு மணி நேரம் கழித்து தான் பழங்களை எடுத்துக்கொள்வது நல்லது.

fruits

சாப்பிட்ட உடனே தூங்கக்கூடாது:


பொதுவாக நம் உடல் சாப்பிட ஆரம்பித்த உடனே அவற்றை செரிமானம் செய்வதற்கான வேலையை செய்ய ஆரம்பித்து விடும். அப்போது நாம் படுத்து விட்டோம் என்றால் நாம் சாப்பிட்ட உணவுகள் தொண்டையை நோக்கி வர ஆரம்பித்து விடும். இது மட்டுமல்லாமல் நமது வயிற்றில் உள்ள செரிமான அமிலங்கள் தொண்டை எரிச்சலை உண்டாக்கும். மேலும் நாம் சாப்பிட்ட உணவு செரிமானமாகாமல் வாயு பிரச்சனை ஏற்படும்.

மேலும் படிக்க: சாப்பிட்ட உடனே சத்தமா ஏப்பம் வருதா? ஏப்பத்தை கட்டுப்படுத்த ஏலக்காய் போதும்

சாப்பிட்டு உடனே தண்ணீர் குடிக்க கூடாது:


ஒரு சிலர் சாப்பிடும் போதே நிறைய தண்ணீர் அருந்தி கொண்டே இருப்பார்கள். அதே போல சாப்பிட்ட பிறகு கூட அதிகம் தண்ணீர் குடிப்பார்கள். இவ்வாறு செய்வது மிகவும் தவறாகும். பொதுவாக வயிற்றில் உள்ள அமிலமானது 1.5 முதல் 3 ph வரைக்கும் இருக்கும். இந்த அளவில் இருந்தால் தான் நாம் சாப்பிடும் உணவு வயிற்றில் உள்ள அமிலத்துடன் கலந்து நன்கு செரிமானம் அடையும். ஆனால் நாம் சாப்பிட்டு பிறகு நிறைய தண்ணீர் குடித்தோம் என்றால் அந்த பிஹெச் மதிப்பு மாறிவிடும். அதனால் செரிமானத்திற்கு தயாராக இருக்கக்கூடிய ஹைட்ரோ குளோரிக் அமிலம் செயலிழக்க கூடும். அதாவது உடல் நீர்த்துப் போயிடும். சாப்பிட அரை மணி நேரம் கழித்து தண்ணீர் குடிக்கலாம்.

drink water

உடற்பயிற்சி செய்யக்கூடாது:


சாப்பிட்ட உடனே நாம் உடற்பயிற்சி செய்யக்கூடாது. இப்போதெல்லாம் பலர் உடல் எடையை கச்சிதமாக வைக்கவேண்டும் என்று நினைத்து சாப்பிட்ட உடனே வேகமாக நடந்து செல்வது, ஓடுவது, கடினமான வேலைகளை செய்வது, உடற்பயிற்சி செய்வது என்று பல செயல்களை செய்கின்றார்கள். இத்தகைய செயல்களை சாப்பிட்ட உடனேயே செய்யக்கூடாது. ஏனென்றால் சாப்பிட்ட உடனே நாம் உடற்பயிற்சி செய்தோம் என்றால் சாப்பிட்ட உணவுகளின் சத்துக்கள் உடலில் போய் சேர்வதில் தடைகள் ஏற்படும். உடற்பயிற்சி செய்யும் போது தசைகள் மற்றும் உடலில் உள்ள பிறப்பாகங்களில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், அதேபோல செரிமான உறுப்புகளில் இரத்த ஓட்டம் குறைந்து விடும். அதனால் நாம் சாப்பிட்ட உணவுகள் செரிமானம் ஆகாமல் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். உடற்பயிற்சியை காலையில் வெறும் வயிற்றில் செய்வது நல்லது அல்லது மாலை நேரத்தில் செய்வது நல்லது.

Image source: google

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com