முந்துங்கள் மதுரைவாசிகளே; உலக மரபு வாரத்தை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் இலவச அனுமதி

உலக மரபு வாரத்தை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மஹாலை நவம்பர் 19ஆம் தேதி முதல் நவம்பர் 25ஆம் தேதி வரை பொதுமக்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம். புராதனச் சின்னமான மதுரை திருமலை நாயக்கர் மஹாலின் வரலாறு, கட்டடக்கலை, சிறப்பம்சங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
image

இந்திய தொல்லியத் துறை அறிவுறுத்தலின்படி இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19ஆம் தேதி முதல் நவம்பர் 25ஆம் தேதி வரை உலக மரபு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. உலகின் பல்வேறு பகுதிகளுடைய மரபுகள் மற்றும் கலாச்சாரம் குறித்து உலக மரபு வாரத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்த வருடத்தின் கருப்பொருள் பன்முகத்தன்மையை கண்டறிந்து ஆராய்வதாகும். இதையொட்டி தமிழகத்தில் தொல்லியல் துறை கட்டிப்பாட்டில் உள்ள புராதனச் சின்னங்களை நவம்பர் 19ஆம் தேதி முதல் 25ஆம் தேதி முதல் இலவசமாக கண்டுகளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரையின் புராதனச் சின்னங்களில் ஒன்றான திருமலை நாயக்கர் மஹாலின் வரலாறு, கட்டடக் கலை மற்றும் சிறப்பம்சங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

madurai nayakar mahal entrance

திருமலை நாயக்கர் மஹாலின் வரலாறு

மதுரைக்கு சுற்றுலா சென்றால் தவிர்க்க கூடாத இடங்களில் மதுரை திருமலை நாயக்கர் மஹால் மிக முக்கியமானது. 1635ல் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் ஆசைக்கு ஏற்ப திருமலை நாயக்கர் மஹால் கட்டப்பட்டது. இத்தாலிய கட்டடக் கலையை பின்பற்றி மன்னர் தங்குமிடமாக மஹால் கட்டப்பட்டது. தற்போது இருக்கும் அளவைவிட திருமலை நாயக்கர் மஹால் நான்கு மடங்கு பெரிதாகும். நூற்றாண்டுகளாக மஹால் சிதைக்கப்பட்டு வந்துள்ளது. திருமலை நாயக்கரின் பேரன் மஹாலை அதிகளவில் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. மஹாலில் இருந்து விலைமதிப்பற்ற நகைகள் மற்றும் மரச்சிற்பங்களை எடுத்துச் சென்று திருச்சியில் தனக்கென ஒரு கட்டடத்தை கட்ட விரும்பினார்.

1866 முதல் 1872 வரை திருமலை நாயக்கர் மஹால் அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் நேப்பியரால் பகுதியாக புதுப்பிக்கப்பட்டது. பல ஆண்டுகளாக புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்ற பிறகு தற்போது மஹாலின் பிரதான ஹால், நடன இடம், முகப்பு ஆகியவற்றை காண பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் அனுமதிக்கப்படுகின்றனர்.

madurai thirumalai nayakar

திருமலை நாயக்கர் மஹாலின் கட்டடக்கலை

பழங்காலத்தின் தலைசிறந்த அரண்மனையாக திருமலை நாயக்கர் மஹால் விளங்கி இருக்கிறது. மஹாலின் கூரையில் காணப்படும் ஓவியங்கள், சிற்பங்கள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும். மஹாலின் உள்ளே ஒவ்வொரு தூணின் உயரம் 82 அடியும் அகலம் 19 அடி ஆகும். மஹாலின் மத்திய பகுதி மொத்தம் 41 ஆயிரத்து 979 சதுர அடி. வட்ட வடிவில் இருக்கும் தோட்டம் நம்மை வெகுவாக ஈர்க்கும். மஹாலில் உள்ள நடன இடத்தில் ஏராளமான படங்கள் சூட்டிங் செய்யப்பட்டுள்ளன. மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி, மனிஷா கொய்ராலா நடித்த பம்பாய் படத்தின் கண்ணாளனே பாடலின் சூட்டிங் மஹாலில் நடந்தது. திருமலை நாயக்கர் மஹால் சொர்க்க விலாசம், ரங்க விலாசம் என இரண்டாகப் பிரிக்கப்படுகிறது.

madurai mahal

நாயக்கர் மஹால் திறப்பு நேரம் & கட்டணம்

திருமலை நாயக்கர் மஹால் வாரம் முழுவதும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். மதியம் 1 மணி முதல் 1.30 வரை உணவு இடைவேளை. சிறுவர்களுக்கு கட்டணமாக 10 ரூபாயும், பெரியவர்களுக்கு கட்டணமாக 20 ரூபாயும், வெளிநாட்டவருக்கு கட்டணமாக 60 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. மேலும் செல்போன், கேமரா எடுத்து சென்றால் அதற்கு தனி கட்டணம். சில நேரங்களில் லைட் ஷோ நடத்தப்படும்.

மேலும் படிங்க"குகைக்குள் அற்புதம்" வள்ளிமலை முருகன் கோயிலின் வரலாறும் சிறப்புகளும்

இந்த வாரம் உலக மரபு வாரம் என்பதால் திருமலை நாயக்கர் மஹாலை இலவசமாக கண்டுகளிக்கலாம்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP