
இன்றைய சூழலில், இளம் வயதிலேயே முடி நரைப்பது என்பது பலர் எதிர்கொள்ளும் பிரச்சனையாக உள்ளது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், நமது உணவு பழக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. முடிக்கு அதன் நிறத்தை கொடுக்கும் மெலனின் என்ற நிறமியின் உற்பத்தியில் சில சத்துகள் இன்றியமையாதவை.
மேலும் படிக்க: அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் முருங்கை; இப்படி பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்
அந்த மெலனின் உற்பத்தியை தக்கவைத்து, முடி நரைப்பதை தாமதப்படுத்த உதவும் முக்கியமான 5 வகை உணவுகளை இந்தக் குறிப்பில் காணலாம்.
முடி நிறத்தை பொறுத்தவரை, வைட்டமின் பி12 முக்கியத்துவம் வாய்ந்தது. 
வைட்டமின் பி12 என்பது முடியின் வேர்க்கால்களில் டி.என்.ஏ தொகுப்பு மற்றும் செல்பிரிவுடன் ஒருங்கிணைந்ததாகும். போதுமான அளவு பி12 இல்லையெனில், நிறமி செல்களின் ஆரோக்கியம் குறையக்கூடும். மத்தி மீன் மற்றும் கோழி ஈரல் ஆகியவற்றில் பி12 சத்துகள் நிறைந்துள்ளன. அதன்படி இந்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இளநரை உருவாவதை தடுக்க முடியும்.

தாமிரச் சத்து முடி நிறத்தை பராமரிப்பதில் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. இது டைரோசினேஸ் (Tyrosinase) என்ற நொதிக்கு பங்களிக்கிறது. இந்த நொதிதான் மெலனின் உற்பத்திக்கு அத்தியாவசியமானது. பெரியவர்களுக்கு ஒரு நாளைக்கு சுமார் 0.9 மி.கி தாமிரச் சத்து தேவைப்படும். ஆட்டு ஈரல், உருளைக்கிழங்கு, காளான்கள் மற்றும் பல முழு தானியங்களில் தாமிரச் சத்து காணப்படுகிறது.
மேலும் படிக்க: கூந்தலை ஆரோக்கியமாக பராமரித்து முடி உதிர்வுக்கு தீர்வு காண வேண்டுமா? இந்த 5 இயற்கை பானங்களை குடித்து பயன் பெறவும்
குறைந்த இரும்புச்சத்து உங்கள் ஆற்றலை குறைப்பது மட்டுமல்லாமல், உங்கள் முடியின் நிறத்தையும் பாதிக்கக்கூடும். இரும்புச்சத்து, முடியின் வேர்க்கால்களில் உள்ள நொதிகள் மெலனின் நிறமியை ஒருங்கிணைக்க உதவுகிறது. கோழி இறைச்சி, காய்கறிகள் மற்றும் கீரை வகைகளில் இருந்து இரும்புச்சத்தை பெறலாம்.

எலும்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை போலவே, முடி வளர்ச்சியிலும், மெலனோசைட் செயல்பாட்டிலும் வைட்டமின் டி முக்கியத்துவம் வாய்ந்தது. சால்மன் மற்றும் மத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்கள், வைட்டமின் டி சேர்க்கப்பட்ட பால் அல்லது ஆரஞ்சு சாறு போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வது இதற்கு உதவியாக இருக்கும்.
ஃபோலேட் அல்லது வைட்டமின் பி9, முடியின் வேர்க்கால் செல்கள் மற்றும் நிறமி உற்பத்தியில் பங்களிக்கிறது. கீரைகள், பீன்ஸ் வகைகள் மற்றும் பருப்பு வகைகளில் ஃபோலேட் நிறைந்துள்ளது.
இந்த உணவுகளை சரியான முறையில் எடுத்துக் கொண்டால் இளநரை பிரச்சனையை கட்டுப்படுத்த முடியும். மேலும், இவற்றை தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com