வெளிநாடுகளுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும் என்பது பலருக்கும் கனவு. சுற்றுலா பயணம் செல்வது அனைவருக்கும் பிடித்த ஒரு இனிப்பான அனுபவம். ஆனால் விசா செயல்முறைகள் சில நேரங்களில் சிக்கலாகவும் நேரத்தை எடுத்துக்கொள்ளும் விஷயமாகவும் இருக்கும். இந்த நிலையில் இந்திய பயணிகளுக்கு விசா தேவையில்லாமல் பயணிக்கக்கூடிய சில நாடுகள் உள்ளன. இந்த நாடுகளில் நீங்கள் எளிதாக பயணித்து அழகான இடங்களை சுற்றி பார்க்கலாம். அந்த வரிசையில் இந்தியர்கள் விசா இல்லாமல் ஈஸியாக சுற்றுலா செல்ல சிறந்த 5 நாடுகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
தாய்லாந்து:
தாய்லாந்து இந்தியர்களுக்கு மிகவும் பிரபலமான ஒரு விசா-ஃப்ரீ நாடு. இங்கு நீங்கள் 15 நாட்கள் வரை விசா இல்லாமல் தங்கலாம். பேங்காக், பூகெட், சியாங்மாய் போன்ற இடங்களில் நகர வாழ்வின் பிஸியான அனுபவங்கள் மற்றும் இயற்கை அழகுகளை அனுபவிக்கலாம். தாய்லாந்து தனது உணவு, கலாச்சாரம் மற்றும் அன்பான மக்களுக்காக பிரபலமானது. நீங்கள் நண்பர்களுடன் செல்ல ஒரு சிறந்த இடம் இது.
மாலத்தீவு:
மாலத்தீவுகள் காதலர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஒரு சிறந்த விடுமுறை இடமாகும். இந்திய பயணிகளுக்கு 90 நாட்கள் வரை விசா இல்லாமல் இந்த நாட்டில் தங்க அனுமதி உள்ளது. நீல நிற கடல், வெள்ளை மணல் கடற்கரைகள் மற்றும் லக்ஸரி ரெசார்ட்டுகள் இங்கு பார்க்க வேண்டிய ஒரு விஷயம். ஸ்னோர்கலிங் மற்றும் டைவிங் போன்ற வாட்டர் ஸ்போர்ட்ஸ் மாலத்தீவுகளில் முழுமையாக அனுபவிக்கலாம்.
நேபாள்:
நேபாள் இந்தியாவின் அண்டை நாடாக இருப்பதால், இங்கு விசா தேவையில்லை. காத்மாண்டு, போக்ரா, பூதான் போன்ற இடங்களில் இயற்கை அழகு மற்றும் பண்டைய கோவில்களைக் காணலாம். ட்ரெக்கிங் விரும்புவோருக்கு எவரெஸ்ட் பேஸ் கேம்ப் மற்றும் அன்னபூர்ணா சர்க்யூட் சிறந்த இடங்கள். நேபாளத்தின் கலாச்சாரம் மற்றும் சமையல் முறைகள் இந்தியர்களுக்கு நன்கு பழக்கமானவை என்பதால் ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும்.
பாலி - இந்தோனேஷியா:
இந்தோனேஷியாவின் பாலி தீவு இந்திய பயணிகளுக்கு 30 நாட்கள் வரை விசா இல்லாமல் பயணிக்க அனுமதிக்கும். பாலி தனது அழகான கடற்கரைகள், பசுமையான காட்சிகள் மற்றும் ஆன்மீக அமைதிக்கு பிரபலமானது. உலுஹானு, செமின்யாக் மற்றும் உபுது போன்ற இடங்களில் ரிலாக்ஸ் செய்யலாம். மேலும், இங்குள்ள தனித்துவமான கலாச்சாரம் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நமக்கு ஒரு கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும்.
பூட்டான்:
இந்திய பயணிகளுக்கு விசா தேவையில்லாத மற்றொரு அழகான நாடு பூட்டான். இங்கு நீங்கள் உங்கள் வோட்டர் ஐடி கார்டு அல்லது பாஸ்போர்ட்டைக் கொண்டு நுழையலாம். பாரம்பரிய பௌத்த கலாச்சாரம், இமயமலை காட்சிகள் மற்றும் அமைதியான சூழல் இங்கு உங்களை கவரும். திம்பு, பரோ மற்றும் பூனாகா போன்ற இடங்களில் இயற்கை அழகை அனுபவியுங்கள்.
மேலும் படிக்க: கோடை காலத்தில் சுற்றுலா பிளானா? கேரளாவில் இந்த இடங்களை மிஸ் பண்ணாதீங்க
இந்திய பயணிகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கும் வாய்ப்பு மிகவும் வசதியானது. தாய்லாந்து, மாலத்தீவுகள், நேபாளம், இந்தோனேஷியா மற்றும் பூட்டான் போன்ற நாடுகள் உங்களுக்கு இந்த அழகான அனுபவங்களை வழங்குகின்றன. இப்போவே உங்கள் பாஸ்போர்ட்டை எடுத்து அடுத்த சுற்றுலா செல்ல ரெடி ஆகிடுங்க.
Image source: google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation