ஒவ்வொருவரின் பொருளாதாரத் தேவைகளுக்காக வாரத்தின் 5 நாட்களும் அயராது ஓடிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் ஒரிரண்டு நாட்களாவது கொஞ்சம் ஓய்வு கிடைத்தால் ரிலாஸ்ஸாக இருக்கும். நீங்கள் பெங்களூரில் பணியாற்றிக் கொண்டிருந்தால் வார இறுதி நாட்களில் எங்கே செல்லலாம் என்ற குழப்பம் இருந்தால்? இதோ இந்தக் கட்டுரையைக் கொஞ்சம் வாசித்திட்டு போங்க.
தென்னிந்தியாவின் மிகவும் முக்கியமான மற்றும் பிரபலமான மாநிலங்களில் ஒன்றாக உள்ளது கர்நாடகா. அரண்மனைகள், கோட்டைகள், கோயில்கள், பிரமிக்க வைக்கும் மலைகள், ஏரிகள் முதல் நீர்வீழ்ச்சிகள் என பல சுற்றுலா தலங்கள் கொண்ட இடங்களாக உள்ளது பெங்களூர். இதோ அவற்றில் சில உங்களுக்காக..
வார இறுதி நாட்களில் பெங்களூரிலிருந்து டூர் ப்ளாண் திட்டம் இருந்தால் கடற்கரை நகரமான உடுப்பியைத் தேர்வு செய்யலாம். வளமான, கலாச்சார பராம்பரியம் மற்றும் சுவை சைவ உணவுகளுக்கு பெயர் உடுப்பி உணவுகள் என பலவற்றை நீங்கள் ரசிக்கலாம். வரலாற்று கோயில்கள், ஆன்மீகம் மற்றும் இயற்கை அழகின் கலவையை விரும்பும் பயணிகளுக்கு மிகவும் பிரபலமான இடமாக உள்ளது உடுப்பி.
இந்தியாவின் கர்நாடகாவில் உள்ள ஒரு அழகிய மலைவாசஸ்தலமாக உள்ளது சிக்மகளூர். வாரத்தின் இறுதி நாட்களை இயற்கையோடு மற்றும் மகிழ்ச்சியுடன் கொண்டாட திட்டம் இருந்தால் சிக்மகளூர் சிறந்த தேர்வாக அமையும். பசுமையான காபி தோட்டங்கள், அமைதியான நிலப்பரப்புகள், இனிமையான காலநிலை போன்றவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்திருக்கும்.மூடுபனி மலைகள், அழகிய நீர்வீழ்ச்சிகள் அனைத்தும் கண்களுக்கு கவர்ச்சியாக இருக்கும். பெங்களூரில் இருந்து சிக்மகளூர் சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த இடத்திற்கு ஒரு பயணம் கூட சென்று வரலாம்.
அடுத்ததாக வாரத்தின் இறுதி நாட்களை வரலாற்று சின்னங்களோடு கொண்டாட வேண்டும் என்று நினைத்தால் அரண்மனை பகுதிகளுக்கு விசிட் அடிக்கலாம். இங்கிலாந்தில் அமைந்துள்ள வின்ட்ஸர் கேஸ்டில் எனும் அரண்மனையை மாதிரியாக கொண்டு பெங்களூரில் அமைந்துள்ள அரண்மனை கட்டிடக் கலையை பிரமிக்க வைக்கிறது.
இந்தியாவின் மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாக உள்ளது இஸ்கான் ஸ்ரீ ராதா கிருஷ்ணா கோவில். ராதை பக்தர்களும், கிருஷ்ணனின் பக்தர்களும் வழிபடும் புகழ்பெற்ற கோயிலானது கடந்த 1997 ஆம் ஆண்டு சங்கர் தயால் சர்மாவால் ஆரம்பிக்கப்பட்டது.
மேலும் படிக்க : மழைக்காலத்தில் சுற்றிப்பார்க்க கேரளாவில் சிறந்த தளங்கள் இதோ!
கர்நாடகத்தின் சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது நந்தி மலை. தென் பெண்ணை, பாலாறு, ஆர்க்கவாதி ஆறு போன்ற ஆறுகள் போன்றவை இந்த மலையிலிருந்து உற்பத்தியாகின்றன. சிக்கபள்ளாபூர் நகரத்திலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்தே கோயில்களைச் சென்றால் ஜில்லென்ற சூழல் சுற்றுலா பயணிகளைக் கவரக்கூடும்.
Image source - Google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com