herzindagi
tamilnadu tourism

Tamilnadu Famous Places : தமிழ்நாட்டில் இருக்கும் பிரபலமான இடங்கள் குறித்து தெரியுமா?

தமிழ்நாட்டில் இருக்கும் பிரபலமான இடங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கபோகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் ஒரு இடங்கள் புகழ்பெற்ற இடமாக பார்க்கப்படுகிறது. 
Editorial
Updated:- 2023-05-15, 09:47 IST

வேலூர்

வேலூர் கோட்டை தமிழகத்தில் மிகவும் முக்கியமான இடமாக பார்க்கப்படுகிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க இடத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நேரில் கண்டுக்களிக்க வேண்டும் எனவும் அறிவுருத்தப்படுகிறது.

தனுஷ்கோடி

ராமேஸ்வரம் தீவின் கிழக்கு முனையில் அமைந்திருக்கிறது தனுஷ்கோடி. மீனவ நகரமான இது நாட்டின் மிகச் சிறந்த சுற்றுலாதலமும் கூட. தமிழகத்தின் மிக மிக முக்கியமான இடங்களில் தனுஷ்கோடியும் ஒன்று.

இந்த பதிவும் உதவலாம்:ஜில் ஜில்! தமிழ்நாட்டில் இருக்கும் குளிர்ச்சியான இடங்கள் பற்றி தெரியுமா?

தஞ்சாவூர்

சோழர்களின் நகரமாக பார்க்கப்படும் தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாட்டின் மிகவும் முக்கியமான மாவட்டங்களில் ஒன்று. தஞ்சை பெரிய கோயில் தொடங்கி பெரிய கோட்டை, சரஸ்வதி மகால், தஞ்சாவூர் மாளிகை, பூண்டி மாதா ஆலயம் ஆகியவை மிகவும் முக்கியமான சுற்றுலாதலமாக உள்ளது.

chennai adyar beach

சென்னை

தமிழகத்தின் தலைநகரமான சென்னை மிகச் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. சென்னை மெரினா பீட்ச் தொடங்கி, மாமல்லபுரம், மயிலாப்பூர் கோயில், கிழக்கு கடற்கரை சாலை, பெசண்ட் நகர், வட சென்னை, சென்னை எஉம்பூர், கிண்டி பூங்கா என பெரிய லிஸ்டு உள்ளது.

கன்னியாகுமரி

தென்கோடியில் அமைந்திருக்கும் கன்னியாகுமரியில் சுற்றி பார்க்க பல இடங்கள் உள்ளன. திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை, தியான பீடம் இப்படி தவிர்க்க முடியாத இடங்கள் பல உள்ளன.

madurai district

மதுரை

தூங்கநகரமான மதுரை தமிழர்களின் பெருமைக்கு பெயர் போன இடமாக உள்ளது. இங்கு இருக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தொடங்கி, மதுரை நாயக்கர் மகால், சுருளி அருவி, கூடல் அழகர் கோயில், பத்து தூண்கள் என சுற்றி பார்க்க ஏகப்பட்ட இடங்கள் உள்ளன.

கோயம்புத்தூர்

தமிழ் நாட்டின் மிகப்பெரிய மாவட்டமான கோயம்புத்தூரில் சுற்றி பார்க்க ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளன. மருதமலை கோயில் தொடங்கி, ஆழியார் அணை, ஆதியோகி சிவன் சிலை, முதுமலை , தாவரவியல் பூங்கா ஆகியவை கட்டாயம் செல்ல வேண்டிய சுற்றுலா தலமாக உள்ளது.

இந்த பதிவும் உதவலாம்:சென்னையில் குறைந்த விலையில் எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்க இங்கே செல்லுங்கள்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: shutterstock

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com